LOGIN
dinamalar telegram
Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே

10 Apr 2020

எங்கள் ராஜ்யம் : சென்னை கடற்கரையில் உணவு கிடைக்காத காரணத்தினால் கடற்கரை சாலைக்கு இடம்பெயர்ந்த காக்கைகள் 0

10 Apr 2020

கவலை இல்லை : என்ன தான் கொரோனா கோர தாண்டவம் ஆடினாலும் அதை பற்றி சிறிதும் கவலை பயபடாமல் இதுவும் கடந்து போகும் என்று தங்கள் நிலங்களில் விளைந்த பயிரை காப்பாற்ற உரம் போடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் 0

10 Apr 2020

பக்தர்கள் இல்லை : கொரோனா ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளது.இடம்.விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்கோயில். 0

10 Apr 2020

தர்பூசணி பழங்கள் : கோடை வெயிலை தணிக்க திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்த தர்பூசணிகள் ஊரடங்கு உத்தரவால் விற்பனையாகமல் தேங்கியுள்ளது 0

10 Apr 2020

காணல் நீர் : சுட்டெரிக்கும் வெயிலில் ரோட்டில் தோன்றிய கானல் நீரில் மிதந்து வரும் வாகனங்கள். இடம்: தேனி - போடி விலக்கு. 0

10 Apr 2020

சமூக விலகல் எங்கே : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னதான் அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னாலும் இன்னமும் ரேஷன் கடைகளில் ஆட்டுமந்தை போல் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்கும் இவர்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு எப்போதுதான் ஏற்படும். இடம்: கோவை கோவில்மேடு அருகே 0

10 Apr 2020

திரண்ட மேகங்கள் : விழுப்புரம் நகரில் மாலை பொழுதில் வானத்தில் கரும் மேகம் சூழ்ந்ததால் இருள் சூழ்ந்து காணப்படும் சாலை. இடம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு 0

10 Apr 2020

காற்றும் மழையும் : விழுப்புரத்தில் நேற்று மாலை பொழுதில் பலத்த காற்றுடன் மழை பெய்தது : இடம் : கலெக்டர் அலுவலகம் 0

10 Apr 2020

விழிப்புணர்வு ஓவியம் : பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மெகா வரைபடம் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் வரையப்பட்டுள்ளது 0

10 Apr 2020

மிரட்டிய மேகம் : மாலை நேரத்தில் கடுமையான காற்று அடித்து மழை வருவது போல் மேக மூட்டங்கள் சூழ்ந்துகொண்டது. இடம்: திண்டிவனம் புதுச்சேரி நெடுஞ்சாலை 0
Share
 

Advertisement