Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 04--ஏப்.,2020

உணவு வழங்கல் : கோவை கோவைப்புதூர், குளத்துப்பாளையத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்.
கிருமி நாசினி தெளிப்பு : அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள சென்னை, பிராட்வே, கொத்தைவால் சாவடி பகுதிகளில் நவீன டுரோன் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.
பாலத்தை கடந்த படகு : பாம்பன் ரயில் பாலத்தை கடந்து நாகை சென்ற விசைப்படகு.
உல்லாச பறவைகள் : மனிதர்கள் கொரோனா வைரஸ் தாக்கி விடுமே என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க இந்த பறவைகள் எந்த பயமும் இன்றி ஆனந்தமாக இறை தேடி இளைப்பாறுகிறது.இடம்: சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய்.
அவசரம் : 144தடை உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவைக்காக, இயக்கப்படும் மாநகர பேருந்து.. இடம் : ஆலந்தூர்.
கேரம் : 144 தடை உத்தரவை தொடர்ந்து மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிய போதும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வீட்டு வாசலில் கேரம் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.இடம்: திருப்பூர்
பகிர்தல் : உணவுக்கான போராட்டம் பகிர்தலோடு முடிகிறது. இடம்:திருமுருகன்பூண்டி
இலவங்காய்கள் : சீசனை முன்னிட்டு திண்டுக்கல் அருகே தவசிமடை பகுதியில் காய்த்துள்ள இலவங்காய்கள்.
வாக்கிங்: : கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வாக்கிங் செல்வோர்
வெறிச் : பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் அருகே வாகனமின்றி வெறிச்சோடி காணப்பட்டது
 

Advertisement