Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 03-ஏப்.,-2020

வீணாகும் இலைகள்: : வியாபாரிகள் வராததால் வாழை மரத்தில் வெட்டப்படாமல் உள்ள இலைகள். இடம் .உடுமலை.
மீன்பிடிப்பு: : ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 3 மாதத்திற்கு மேலாக திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது இதில் ஆபத்தான முறையில் மீன்பிடிப் படகில் மீன் பிடிக்கின்றனர்
ஊரடங்கா எனக்கா : தமிழகத்தில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் பயத்தில் வீட்டு மாடிக்கு வந்து ஒருவர் கூட சாப்பாடு வைப்பதில்லை அதுதான் களத்தில் நானே இறங்கி விட்டேன்.
வெள்ளரி : கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் குடும்ப சுமையை போக்க சுட்டெரிக்கும் வெயிலில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் வெள்ளரி பழம் விற்க்கும் பெண். இடம்: தேனி புது பஸ் ஸ்டாண்ட்
காத்திருக்கும் படகுகள் : பாம்பன் ரயில் பாலம் திறப்புக்காக பாம்பன் கடற்கரையில் காத்திருக்கும் நாகை விசைப்படகுகள்.
துப்பரவு பணி : விழுப்புரம் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துப்புரவு பணியில் ஈடுபடும், நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கப்படாததால் துணிகளை கட்டிக்கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
நோ எண்ட்ரி : கொரோனா வைரஸ் காய்ச்சலின் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் ஒரு கோடி கிராமத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் மற்றும் வாகனங்கள் உள்ளே வர அனுமதி இல்லை மீறினால் காவல்துறையிடம் தெரிவிக்கப்படும் என்று வாசகங்களை எழுதியும் கற்கள் மற்றும் முள்ளுகளை வெட்டி சாலையை மறித்து உள்ளனர்.
வெறிச் : விழுப்புரம் நகர பகுதிக்கு வெளியூர் நபர்கள் வந்து செல்லும் சாலையை முற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து தடை செய்யப்பட்டுள்ளது. இடம் : விழுப்புரம் - எல்லீஸ்சத்திரம் சாலை.
எவ்வளவு தூரம் : இறுதி சடங்கிற்கு மைசூர் நடந்தே செல்லும் குடும்பத்தினர். இடம்:அவிநாசி லிங்கம்பாளையம்,திருப்பூர் ரோடு
ஏதாவது கிடைக்குமா : காலியான பெட்டியில் வயிறு நிறைக்க காத்திருக்கும் நாரைகள். இடம்:திருப்பூர், பெரியார் காலணி.
 

Advertisement