Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 02-ஏப்.,-2020

முலாம் பழங்கள் : மேல்மருவத்தூர் பகுதியிலிருந்து திருப்பூருக்கு விற்பனைக்கு வந்துள்ள முலாம்பழங்கள்
மாட்டுவண்டி பயணம் : 144 தடை உத்தரவால் எந்த போக்குவரத்தும் இல்லாததால் மாட்டு வண்டி பயணமாக செல்கின்றனர் இடம் : பெருங்களத்தூர் .
நாய்ப்பாசம் : புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பீதியால் ஊரடங்கு உத்தரவை யொட்டி வெறிச்சோடிய தலைமைச் செயலகம் எதிரே உள்ள நாய்களுக்கு உணவளிக்கும் பெண்மணி.
கபசுர நீர் : கோவை சிங்காநல்லூரில் தொற்று நோய் நோய் எதிர்ப்பிற்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
காயும் பூக்கள் : விருத்தாசலம் அடுத்த அரசகுழி பகுதியில் பூக்கள் பறிக்க ஆட்கள் வராததால் குண்டு மல்லி பூக்கள் காய்ந்து வீணாகியுள்ளது.
கானல்நீர் : சாலையில் பெருக்கெடுத்து ஓடும் காணாத கானல் நீர் : இடம் : விழுப்புரம் பை - பாஸ் சாலை.
முககவசம் எங்கே : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நேற்று சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள், முக கவசம் அணியாமல் வேலையில் ஈடுபட்டுள்ளனர்
தோப்புகரணம் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நேற்று சென்னையில் 144 தடை நிலுவையில் உள்ள நிலையில், காரணமின்றி வெளியில் செல்வோரை, போலீசார் தோப்பு கரணம் போட வைத்தனர்.. இடம் : பாடி மேம்பாலம்...
ஜாலி குளியல் : கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து ஊரடங்கு உத்தரவு இருந்த போதும் கோடை வெயிலை சமாளிக்க கிணற்றில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள். இடம்:திண்டுக்கல் முத்தழகுபட்டி.
கிருமி நாசினி தெளிப்பு : கொரோனா வைரஸ் கிருமி தாக்காமல் இருக்க சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
 

Advertisement