Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 31-மார்ச்-2020

பயப்படாம இருங்க... : கொரானா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி கசாயம் வழங்கிவரும் செல்வமணி. (இடம் புதுச்சேரி அண்ணா சாலை)
நூதன விழிப்புணர்வு. : .திருப்பூரைச் சேர்ந்த ஆலமரம் ஆண்டவன்,56 என்பவர் தேசிய கொடியுடன் நடந்து சென்று கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பொழப்ப பார்க்கனும்ல... : கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவையொட்டி, யாரும் வெளியே வராத நிலையில் பிசியாக காணப்படும் விழுப்புரம் - பாண்டி கிழக்கு சாலையில், தனி ஒருவனாக சைக்கிளில் சாப்பாட்டு பையுடன் பணிக்கு செல்லும் வாட்ச்மேன்.
வெட்டியா ஊர் சுற்றுவீங்களா ? : 144 தடை உத்தரவை மீறி வெட்டியாக பைக்கில் ஊர் சுற்றி வந்த இளைஞர்களுக்கு நூதன தண்டனையாக தண்டால் எடுக்க வைத்த போலீசார் . இடம் கோவை சுந்தராபுரம் சந்திப்பு.
நல்ல வேட்டை : திருப்பூர் இடுவாய் பகுதியில் நன்கு விளைந்த கீரைகளை, விற்பனைக்காக பறிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
கண்ணுக்கு விருந்து : வாகன ஓட்டிகளுக்கு கண்ணுக்கு விருந்தளிக்கும் சாலை ஓர மரங்களில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற பூக்கள்.இடம்: சிவகங்கை-மேலூர் ரோடு.
கொரோனாவை விரட்டுவோம் : கொரோனா அச்சத்தால் தனது வீடுகளில் வைப்பதற்கு வேப்பமர இலைகளை பறித்து செல்லும் பெண்கள். இடம் : பெருங்குடி.
நல்லா அடிங்க சார்.. : கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தண்டையார்பேட்டை, சுனாமி குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கிரிமி நாசினி மருந்து அடித்த தீயணைப்பு வீரர்கள்.
பழைய நினைப்பு.. : 144 தடையை முன்னிட்டு கோவை திருச்சி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட துப்புரவு பணியாளர்கள் மாட்டு வண்டியிலும் சைக்கிளிலும் சென்றனர். இடம்: கோவை, திருவள்ளுவர் நகர் .
களை எடுப்பு : : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது விவசாய பணிக்காக தளர்த்த பட்டுள்ளதால் நெல் வயலில் களை எடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்கள். இடம் : விழுப்புரம் - திருவெண்ணெய்நல்லூர் சாலை.
 

Advertisement