Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 29-மார்ச்-2020

அச்சமில்லையே. : ..அரசு அறிவுறுத்தியும் கொரோனா அச்சமின்றி வழக்கம்போல் பெரிய வகை மீன்களை ஏற்றுமதி செய்ய ஷெட்டுக்கு கொண்டு செல்லும் மீனவர்கள். இடம்- காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
வாங்க.. வாங்க.. : .திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பனியன் துணி மாஸ்க்குகள் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ரொம்ப தாகம்... : : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களை பாதுகாக்கும் பணிக்கிடையே கோடை வெப்பம் தாங்காமல் தாகம் தீர்க்கும் பெண் போலீசார் . இடம்: கோவை, வடவள்ளி பஸ் ஸ்டாண்ட்
வாசமில்லா மலர் ... : . வாசம் மிகுந்த பூக்கள் சந்தைக்கு வராத நிலையிலும், வாசமற்ற காகிதப்பூ பூத்து கண்களுக்கு விருந்து படைக்கிறது. இடம்: தாண்டிக்குடி.
கொஞ்சம் ரிலாக்ஸ்.. : .வீட்டை மறந்து மக்களை பாதுகாப்பதற்காகவும், அன்றாட செய்திகளை பத்திரிக்கை மற்றும் அலை பேசி மூலம் பார்க்கும் போலீசார் .இடம் : கோவை, டவுன்ஹால்
அலெர்ட்டா இருப்போம்ல.. : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு இருந்தாலும் பாதுகாப்பாக முகத்தில் துணியை கட்டிக் கொண்டு விவசாய பணி செய்யும் விவசாயிகள் . இடம்: புதுச்சேரி குமராப்பாளையம்.
காத்திருக்குறோம்.. : காத்திருக்குறோம்...ஊரடங்கு உத்தரவால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள். இடம் பதுவஞ்சேரி,மாடம்பாக்கம்.
தாகம் தீர வந்துருச்சு.. : .தென் மாவட்டங்களல் இருந்து விற்பனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட தர்பூசணி பழங்கள்.
பயமா இருக்கு சார்.. : .சென்னை பாடி மேம்பாலத்தில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ரஜீஷ் பாபு கொரோனா வைரஸ் போன்ற தலைகவசம் அணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உதித்ததே : ...காலையில் கரு மேகங்களுக்கு இடையே வெளியே வரும் சூரியன். இடம் .உடுமலை.
 

Advertisement