Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 25-மார்ச்-2020

யாரையும் காணோம்.. : யாரையும் காணோம்...சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது
போய் சேருவோமா : ..144 தடை உத்தரவை அடுத்து சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்தில் தொங்கியபடி சென்றனர். இடம். பெருங்களத்தூர்
ஒப்படைக்கிறோம்... : மலர் தூவி கதவடைத்து இயற்கையையிடம் இந்த பூமியை ஒப்படைத்து தடை செய்கிறோம். இடம்: கோவை, திருச்சி ரோடு சவுரிபாளையம் பிரிவு
அடங்கியது. : நேற்று மாலை 6 மணி முதல் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஆதவன் மறைய ஊரும் அடங்கியது. இடம்: பார்க் கேட், கோவை.
அணிவகுப்பு. : .மூணாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையொட்டி போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
மொத்தமா வாங்கிட்டேன்.. : 144 உத்தரவு பிறப்பித்தால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகளை சேமித்து வைக்க சிறு வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
உஷாராக இருப்போம்... : கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளதையடுத்து நெல் நடவு செய்யும் விவசாய தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக முககவசம் அணிந்திருந்தனர். இடம் புதுச்சேரி அடுத்த கன்னியக்கோயில் சாலை.
கொரோனாவே ஒழிந்து போ... : கொரோனா வைரசை ஒழிக்க வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது.. இடம்: கோவை, ராமநாதபுரம்
சந்தோச செல்பி.. : .கொரோனா அச்சத்திற்குமிடையே பிளஸ் 2 தேர்வை வெற்றிகரமாக முடித்ததை சந்தோசத்துடன் செல்பி எடுத்து மகிழும் மாணவிகள்: இடம் : கோவை
பாதுகாப்பு : ..கொரோனா வைரஸ் பதிப்பிலிருந்து தப்பிக்க திருப்பூர், பார்க் ரோட்டில் முக கவசம் விற்பனை சூடு பிடித்துள்ளது.
 

Advertisement