Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 17-ஜன-2020

இது எங்க விழா..! : சோழவந்தானில் சுற்றுலா துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டவர் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.
ரம்மியம்...! : மலைகளை பனி சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்த முந்தல் - போடி மெட்டு ரோடு.
தூக்கி வீசிடுவேன்... : பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை வீரரை முட்டி தூக்கி வீசிய காட்சி.
கிட்ட வந்த மவனே... : பாலமேடு ஜல்லிக்கட்டில் தன்னை அடக்க வந்த இளைஞரை முறைத்து பார்க்கும் காளை
நல்லா தண்ணிய ஊத்துங்க... : மாட்டு பொங்கலையொட்டி தான் வளர்க்கும் மாட்டை குளிப்பாட்டி அழகுப்படுத்தி வழி பாட்டிற்கு தயார்படுத்தும் விவசாயி . இடம்: கோவை தொண்டாமுத்தூர் , புதுப்பாளையம்.
கொதிக்குதே... : .சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் சாலையில் தோன்றிய கானல் நீர்.இடம்: காமராஜர் சாலை, சென்னை.
சலங்கையாட்டம்.. : .பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா கலை நிகழ்ச்சி நடந்தது இதில் சலங்கை ஆட்டம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இடம்: கோவை கொடிசியா மைதானம்
மல்லுக்கட்டு.. : மல்லுக்கட்டு...பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டு கயிறு இறுக்க போராடிய பெண் காவலர்கள்.
ஆஹா.. தூக்கிடுச்சே. : ..மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற காளையை தூக்கி வீசிய காளை.
மகிழ்ச்சி... : .திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்ற மகிழ்ச்சியில் குழந்தைகள்.இடம்: கோவை
 

Advertisement