Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 16-ஜன.,-2020

கதிரவனும் நெற்கதிரும் : 'நெற்பல பொலிக... மாரி வாய்க்க... வளநனி சிறக்க!' என்னும் ஐங்குறுநூறு பாடலின் வரிகளை மெய்ப்பிக்க, பொங்கலன்று, நெற்கதிரின் பின்னணியில் ஜொலிக்கும் சூரியன். இடம்: கல்லாபுரம், உடுமலை,திருப்பூர்.
மாட்டு வண்டி பயணம்... : தஞ்சாவூர் மாவட்டம் வீரச்சிங்கம்பேட்டை கிராமத்தில், சுற்றுலா துறை சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாட்டு வண்டியில் கிராமம் முழுவதையும் சுற்றி வந்தனர்.
தொடரும் பனி... : ஊட்டியில் மாலை நேரத்தில் தொடரும் பனி மூட்டம் காரணமாக, மாலையில் ஆதவன் மறையும் போதே, கடும் குளிருடன் இருள் சூழ்ந்து விடுகிறது.
சலங்கை ஆட்டம்... : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை கொடிசியா மைதானத்தில் தமிழர் திருவிழா கலை நிகழ்ச்சி நடந்தது இதில் சலங்கை ஆட்டம் நடந்தது.
சமத்துவ பொங்கல் ... : தை திருநாளை முன்னிட்டு திருப்பூர் சாமுண்டிபுரத்தில் மதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
தியாகராஜர் ஆராதனை... : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜர் 173வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் தியாகராஜர் சன்னதி முன் அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையார்களை புரட்டிய காளை
படகு போட்டி ... : ஊட்டி படகு இல்லத்தில், பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.
பூக்களில் ஜெயின் கோவில் ... : பொங்கலையொட்டி கோவை ஆர்.ஜி ., வீதியிலுள்ள ஜெயின் கோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
புத்தகக் கண்காட்சி... : சென்னை நந்தனத்தில் நடந்து வரும் 43 வது புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்க்கும் புத்தக பிரியர்கள்.
 

Advertisement