Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-ஜன-2020

பொங்கலோ பொங்கல்! : தை பிறந்தாலே நமக்கு இனிப்பது என்னவோ கரும்பு தான். கோவை கள்ளிமடை பகுதியில் பூத்து குலுங்கும் கரும்புப் பூ.
குப்பை கூளம்! : மீனை தேடும் பெலிக்கான் பறவைக்கு மிஞ்சியது பெறும் குப்பை கூளம்தான். இடம்: கோவை வேடப்பட்டி.
பச்சை பசேல்! : சமீபத்திய மழைக்கு உடுமலை திருமூர்த்திமலை அடிவாரத்தில் பசுமையுடன் காணப்படும் தென்னைமரங்கள்.
பொங்கல் நெருங்குது! : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிந்துள்ள மஞ்சள் கிழங்கு.
அறிவுக்கண்! : 43-வது சென்னை புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூட்டம். இடம்: ஒய்.எம்.சி.ஏ மைதானம், நந்தனம்.
வண்ண கோலங்கள்! : சென்னையில் நடந்துவரும் மைலாப்பூர் திருவிழாவில், விழாவின் ஒரு கட்டமாக கோலப்போட்டி நடைபெற்றது.
எங்கும் பசுமை! : கிணற்று நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், பச்சை பசேலென காட்சியளிகின்றன. இடம்: தேனி அருகே சத்திரப்பட்டி.
கிடைத்தது உணவு! : குப்பை தொட்டியில் கிடக்கும் இலையில் உள்ள உணவை சாப்பிடும் குரங்கு. இடம் உடுமலை, திருமூர்த்திமலை.
விழிப்புணர்வு! : தனியார் கல்லூரி சார்பில், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து, விழிப்புணர்வு மாரத்தான் சென்னை பெசன்ட் நகரில் நடந்தது.
வச்ச குறி தப்பாது! : வானில் ஒரே இடத்தில் நின்று பறந்து, இறையை குறிவைத்துத் பிடிக்கும் பைடு கிங்பிஷர் பறவை, இடம்: கோவை வெள்ளலூர் குளம்.
 

Advertisement