Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 12-ஜன.,-2020

மண்பானைகளுக்கு வர்ணம்... : பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக வந்துள்ள மண்பானைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். இடம் : ஈஞ்சம்பாக்கம், சென்னை
புத்தக கண்காட்சி... : சென்னையில் நடக்கும் 43 வது புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தங்களை ஆர்வமுடன் பார்வையிடும் புத்தக பிரியர்கள். இடம்.ஒய்.எம்.சி.ஏ. மைதானம்.
பாரம்பரிய கலைவிழா ... : அவிநாசி பழனியப்பா பள்ளியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பாரம்பரிய கலைவிழா நடந்தது.
கரும்பு விற்பனை... : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனை துவங்கியுள்ளது. இடம் .தாம்பரம்
ஓவியங்கள்... : கோவை விழாவில் நடந்த ஓவிய சந்தையில் இடம் பெற்ற ஓவியங்கள்.
மக்காச்சோளக் கதிர்... : திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியில் விளைந்துள்ள மக்காச்சோளக் கதிர்கள்.
ரம்மியமான ஓவியங்கள்... : கோவை விழாவின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் ரோட்டில் நடந்த ஓவிய சந்தையில் இடம் பெற்ற ரம்மியமான ஓவியங்கள்.
மண்பானை... : பொங்கல் பண்டிகையையொட்டி கோவை நாச்சிபாளையம் பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள மண்பானைகள்.
வண்ண வண்ண குடங்கள்... : கார் மழை பெய்தும் கண்மாய்கள் நிரம்பாததால், கோடை தாகம் தணிக்க தண்ணீருக்கு எங்கே போவது அதனால் குடிநீரை பிடித்து குடங்களில் சேமிக்க, இப்போதே எண்ண இயலாத அளவுக்கு கண்ணைப் பறிக்கும் வகையில் வண்ணமயமாக தயாரித்து வரிசை கட்டி வைத்துள்ளனரோ... இடம்: திண்டுக்கல் தொழிற்பேட்டை.
பலூன்களுடன் குட்டீஸ் .. : தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் வழங்கப்பட்ட பலூன்களுடன் குட்டீஸ் .
 

Advertisement