Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே

11 Jan 2020

விழிப்புணர்வு ஓவியங்கள்.... : கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், ஏரியை பாதுகாக்க வலியுத்தி, கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் வரைந்துள்ள விழிப்புணர்வு ஓவியங்கள்.... 0

11 Jan 2020

கைலாய நடனமாடிய பக்தர்கள்... : ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சென்னை மண்ணடி மல்கேஸ்வரர் கோவில் அருகே திருவாதிரை நடராஜர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கைலாய நடனமாடிய பக்தர்கள். 0

11 Jan 2020

படகு சவாரி... : கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயிலில் தகதகக்கும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் . 0

11 Jan 2020

பொங்கல் விழா ... : திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதை ஒட்டு பொங்கல் பானை வைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கும்மியடித்தனர். 0

11 Jan 2020

கொத்தாக திராட்சை... : கம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டியில் திராட்சை சாகுபடியில் கொடியில் கொத்து கொத்தாக தொங்கும் திராட்சை பழங்கள். 0

11 Jan 2020

காகித பூ... : கண்களை கவரும் வண்ணம் பூத்துக் குலுங்கும் காகித பூக்கள் இடம்: தேனி 0

11 Jan 2020

அழகு ஓவியங்கள். .. : சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கீழடி அரங்கம் மற்றும் அழகு ஓவியங்கள். 0

11 Jan 2020

புத்தக கண்காட்சி... : சென்னை புத்தக கண்காட்சியில், இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவன். இடம்: ஒய்.எம்.சி.ஏ மைதானம். 0

11 Jan 2020

கேபிள் அமைக்கும் பணி... : சென்னை பட்டினப்பாக்கம் முதல் அந்தமான் வரை கடல் வழியாக கப்பல் மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 0

11 Jan 2020

திருவள்ளுவர் மணல் சிற்பம்... : சென்னையில் நடந்துவரும் புத்தக கண்காட்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் திருவள்ளுவர் மணல் சிற்பம் 0
Share
 

Advertisement