Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 10-ஜன-2020

அசே லியா! : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள அசே லியா பூ.
பனி விழும் காலை.. : ஊட்டி தலைகுந்தா பகுதியில், குளிருக்கு தீமூட்டி குளிர் காயும் ஐயப்ப பக்தர்கள்.
பொங்கல் பரிசு! : ரேஷன் கடையில் வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு வாங்கி செல்லும் மூதாட்டி. இடம்:சிந்தாதிரிப்பேட்டை,சென்னை.
விற்பனைக்கு! : பொள்ளாச்சி - கோவை ரோட்டில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட வாத்து குஞ்சுகள்.
ஒரு நாள் கூத்து! : கோவை விழாவின் ஒரு பகுதியாக ஈச்சனாரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த ஒரு நாள் கூத்து எனும் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியில் மாட்டுவண்டியில் சீஷா விளையாடிய சிறுமிகள்.
ஊர்வலம்! : விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி கோவை பாலசுந்தரம் ரோட்டில் ஊர்வலமாக வந்த கல்லூரி மாணவிகள் .
அழகிய மாலைபொழுது! : அந்தி பொழுதின் அழகிய தருணத்தில் ஸ்மார்ட் சிட்டியின் ஸ்மார்ட் அழகு. இடம்: கோவை சுங்கம் பைபாஸ் .
பட்டுப்போனது! : விழுப்புரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பட்டுப்போன தென்னை மரங்கள். இடம் : கொண்டங்கி கிராமம்.
பூக்களே..! : கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பளிச்சிடும் கல்யாணி முருங்கை பூ.
நாட்டியம்! : கோவை விழாவை முன்னிட்டு ஒலம்பஸ் தன்வந்திரி கோவிலில் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் அசத்திய கலைஞர்கள்.
 

Advertisement