Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 09-ஜன.,-2020

போராட்டத்தில்... : மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதுச்சேரியில் பந்த் நடந்தது. இருந்தபோதிலும் திண்டிவனம் சென்னை திருவண்ணாமலை திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எப்பவும் போல் இயங்கின.
ஜல்லிக்கட்டிற்காக... : பாலமேட்டில் பார்வையாளர் மாடம் அமைக்கு பணி நடக்கிறது.
ரங்கா கோபுர தோரணம்... : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ரங்கா, ரங்கா கோபுரம், வாயில், வாழை மரம், பாக்குமரம் போன்ற பசுமையானவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் கரும்புகள்... : பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனைக்காக குவிந்துள்ள கரும்புகள்...
செங்கரும்பு... : பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளால் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்ட, செங்கரும்புகளை வெட்டி ரேஷன் கடைகளில், தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சைக்கிள் பொம்மை ... : பறந்தோடும் வாகனங்கள் நடுவே நம் உடலுக்கு வலிமை சேர்ந்த சைக்கிள் பொம்மை வியாபாரம். இடம்: கோவை வெரைட்டி ஹால் ரோடு
மொச்சை பூ... : திண்டுக்கல் அருகே பாடியூர் பகுதியில் பூத்துள்ள மொச்சை பூக்கள்.
சுகமான பயணம்... : மார்கழி மாத பணியில் மலை முகடுகளில் மையம் கொண்டுள்ள பணிகளுக்கிடையே பயணிப்பதும் தனி சுகம்தான். இடம்: போடிமெட்டு.
மலைக்கு பின்னால் ... : மலைக்கு பின்னால் மஞ்சள் நிறமாய் மாலையில் மறையும் சூரியன். இடம் .உடுமலை
கலாச்சார விழா... : சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் நடந்த சாஸ்த்ரா என்ற பெயரில் சாரங்க் என்ற கலாச்சார விழா நேற்று மாணவர்கள் நடத்திய இசைவிழாவோடு தொடங்கியது .
Share
 

Advertisement