Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே

08 Jan 2020

இரை தேடும் பறவை... : சென்னை அடையாறு ஆற்றில் இரை தேடி சுற்றி திரியும் பிளாக் வின்க்டு ஸ்டில்ட் எனப்படும் நெடுங்கால் உள்ளான் பறவைகள். இடம் : கோட்டூர்புரம், சென்னை 0

08 Jan 2020

அழகு ஓவியங்கள் ... : சென்னை விமான நிலையம் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய மதில் சுவரில் 800 மீட்டருக்கு வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 0

08 Jan 2020

சிலாகித்துக் கொண்ட பறவைகள் ... : பனிப்பொழியும் அதிகாலையில் மெல்லிய ஊடுருவிய கதிரவனின் ஒளியில் பறவைகள் சிலாகித்துக் கொண்ட வேளையில்..! இடம் - கோவை : சிங்காநல்லூர் குளம். 0

08 Jan 2020

வண்ணம் பூசிய கால்வாயில்... : சமீபத்தில் பெய்த மழையால் முடிச்சூர் சீக்கனா ஏரியில் மழை நீர் தேங்கி உபரிநீர் கலங்கள் வழியாக சென்றது இதனால் முடிச்சூர் பஞ்சாயத்து சார்பில் உபரி நீர் வரும் கால்வாயை சுத்தப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்தி உள்ளனர். இடம். முடிச்சூர் 0

08 Jan 2020

வாடாமல்லி பூ... : திண்டுக்கல் அருகே கஸ்தூரிநாயக்கன்பட்டி பகுதியில் பூத்துள்ள வாடாமல்லி பூக்கள். 0

08 Jan 2020

மஞ்சள் செடி... : பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் அருகே கல்லுப்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள். 0

08 Jan 2020

நெல் நாற்று... : திண்டுக்கல் அருகே குலக்காரன்பட்டி பகுதியில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் பசுமையாக காட்சியளிக்கிறது. 0

08 Jan 2020

கரும்புகளாய்.... : பொங்கலுக்கு முன்கூட்டியே தயாராகி இருக்கும் கரும்புகள் . இடம்: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட். 0

08 Jan 2020

மாட்டுப் பொங்கல் அலங்கார மாலைகள்... : மாட்டுப் பொங்கல் பண்டிகைக்கு, மாடுகளுக்கு கட்டப்படும் வண்ண வண்ண அலங்கார மாலைகள். இடம் : பொள்ளாச்சி. 0

08 Jan 2020

அகப்பந்தாஸ் பூ... : கொடைக்கானலில் நகரில் பூத்துள்ள அகப்பந்தாஸ் பூ. 0
Share
 

Advertisement