Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 03-டிச.,-2019

பச்சை கம்பளம் : நடப்பாண்டு நல்ல மழை பெய்ததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதாலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை கம்பளம் போர்த்தியவாறு காட்சியளித்தது சம்பா நெற்பயிர்கள். இடம். திருச்சி மாவட்டம்,
காத்திருக்கும் கொக்குகள் : மீன்களை பிடிப்பதற்காக ஏரியின் நடுப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் அமர்ந்துள்ள கொக்குகள். இடம். திருச்சி.
நுரை கடல் : சென்னை, பட்டினப்பாக்கம் மற்றும் சீனிவாசபுரம் கடற்கரையில் வெளியேறும் நுரையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . இடம்:பட்டினப்பாக்கம்.
வண்ண ஸ்டார்கள் : கிருஸ்துமஸ் வருகைக்காக காரைக்குடி கடைகளில் விற்பனைக்காக தொங்கவிடப்பட்டுள்ள வண்ண ஸ்டார்கள்.
உபரிநீர் : சென்னை செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஏரி நிரம்பி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு உபரி நீர் பாய்கிறது... இடம் : லட்சிமிபுரம்...
கருமேகங்கள் : கடலூரில் மாலைப்பொழுதில் கருமேகங்கள் அழகிய காட்சி.
வானம் கொட்டட்டும் : குன்னூர் சுற்றுப்புறபகுதியில் பெய்த கனமழைக்கு , பார்லியார் மலைப்பகுதியில் கொட்டும் நீர்விழ்ச்சி.
பெருக்கெடுத்த நீர் : திருவள்ளூர் திருத்தணி தேசியநெடுஞ்சாலை பட்டரை பெரும்புதூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்
மகிழ்ச்சி : தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக அருவிபோல் செல்லும் மழைநீரில் அப்பகுதியினர் குளித்து மகிழ்ந்தனர்
நிரம்பிய ஏரி : திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் கடல் போல் காட்சியளிக்கிறது
 

Download for free from the Store »

Advertisement