Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 08-நவ.,-2019

பிரதிபலிப்பு : நெல் நாற்று நடப்பட்ட வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் பிரதிபலிக்கும் மலை முகடு . இடம் உடுமலை கல்லாபுரம்
தேயிலை பூங்கா : ஊட்டி தொட்டபெட்டா, அருகே உள்ள தேயிலை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்திருந்தது.
ஜம்புநாரை : சென்னை சோழிங்கநல்லூர் சதுப்புநில பகுதியில் அவ்வப்போது காணப்படும் செந்நாரை என்று அழைக்கப்படும் ஜம்பு நாரை.
பசுமை மரங்கள் : சமீபத்திய மழைக்கு பசுமையுடன் காணப்படும் தென்னை மரங்கள். இடம் .உடுமலை திருமூர்த்திமலை.
புறநகர் ரயில் : சென்னை புறநகர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் ரயில்வே நிலையத்தில் நேற்று காலை பனிப்பொழிவில் பனை மரத்தை ஒட்டி செல்லும் ரயிலின் ரம்மியமான காட்சி. இடம்: ஊரப்பாக்கம்.
ஹேண்ட்பால் போட்டி : கோவை வருவாய் மாவட்ட அனைத்து குறுமைய பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள், அரசூர், கே.பி.ஆர்., கல்லூரியில் நடந்தது. இதில் நடந்த ஹேண்ட்பால் போட்டியில் ஜி.கே.டி., பள்ளியும் மற்றும் செஞ்சேரி அரசு பள்ளி அணியும் மோதின.
மக்காச்சோள பூக்கள் : திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோளப் பூக்கள்.
களை எடுப்பு : திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி ரோடு அருகே பருத்தி செடிகளில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
பயிர்களை காப்பாற்ற : பொள்ளாச்சி அருகே கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களை, காட்டுப்பன்றி, மயில்களிடம் இருந்து காப்பாற்ற பாட்டில்களை கட்டியுள்ளனர்
வயல்வெளி அழகு : சாணார்பட்டி, வங்கமனூத்து அருகே அழகாக காட்சி தரும் வயல்வெளி. இடம்: மதுரை மாவட்டம்.
 

Download for free from the Store »

Advertisement