Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 19-மே-2019

கவருதே...! : புதுச்சேரியில் கடற்கரை காந்தி திடலில் நடந்த கோடை விழாவில் மாணவிகளின் நடன நிகழ்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
அணிவகுப்பு..! : சூலூரில் இடைத்தேர்தல் நடப்பதையொட்டி துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
அசத்தல்...! : கும்பகோணத்தில் நீர்நிலை குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்து கண்காட்சி போன்று நடத்தி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் மாணவி பூரணி.
அறுவடைக்கு தயார்..! : தேனி மாவட்டம் சங்கராபுரம் அருகே அறுவடைக்கு தயாராக உள்ள சோளம்.
சுத்தம் சுகம் தரும்.. : அடையாறு ஆற்றை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படகுப் போட்டி நடந்தது... இடம்: அடையாறு,சென்னை...
மணக்காது..! : ணமில்லாத காகிதப் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இடம் : விழுப்புரம் மகாராஜபுரம்.
நீ பாதி.. நான் பாதி .. : . யாரே கொடுத்த குச்சி ஐஸை தனது குட்டிக்கும் பகிர்ந்து அளிக்கும் இந்த பாசக்குரங்கு. இடம்: ஜம்மு.
ஆச்சர்யம்..! : விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் நடந்த பாராம்பரிய விதைகள் கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள்.
ஆனந்த குளியல்..! : கோவையில் இரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கோவை வேடபட்டி ரோடு கிருஷ்ணாம்பதி குளத்தில் தேங்கிய நீரில் ஆனந்த குளியல் போடும் வாத்துகள்.
மயக்கும் மாலை பொழுது : : பகலெல்லாம் சுட்டெரித்து சூரியன் மாலையில் செந்நிற முகத்தோடு விடை பெருகிறுதோ. இடம்: பழநி வையாபுரிகுளம் அருகே.
 

Download for free from the Store »

Advertisement