Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 11-பிப்-2019

ஆர்வம்! : கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மணல் சிற்ப போட்டியில் கலந்து கொண்டு, ஆர்வமுடன் மணல் சிற்பம் செய்யும் பெண். இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை.
துவக்கம்! : சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.
சின்னதம்பி! : தென்னந்தோப்பிலிருந்து வீரநடை போட்டு வரும் சின்னதம்பி யானை. இடம்: உடுமலை கண்ணாடிபுத்தூர்.
ஆட்டு கிடாய்! : பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவில் பல்வேறு விதமான ஆட்டு கிடாய்கள் வந்தன
பறவைகள் கூட்டம்! : சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நீர்நிலைகளில் இரை தேடியும், தண்ணீர் அருந்தவும் கூட்டம் கூட்டமாக குவியும் பறவைகள். இடம்: முட்டுக்காடு ஏரி, சென்னை.
மணல் சிற்பம்! : கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த மணல் சிற்பப்போட்டியில் ஆர்வமுடன் சிற்பம் செய்யும் பள்ளி மாணவி. இடம்: பாலவாக்கம் கடற்கரை, சென்னை.
பார்வையாளர்கள் பரவசம்! : பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு கால்நடை திருவிழாவில், கால்களை மேல் தூக்கி நடனமாடிய குதிரை, பார்வைக்கு விருந்தாக அமைந்தது.
மராத்தான்! : புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி 12வது ஆண்டு மராத்தான் ஓட்டம் நடந்தது.
கூட்டணி! : கூட்டம் கூடியாச்சு அடுத்தது தேர்தல் அறிவிப்பு தான். இடம்: கோவை சிங்கநல்லூர் குளம்.
வானூர்தி! : அந்தி சாயும் நேரத்தில் மேகங்களை தழுவி செல்லும் விமானம். இடம்: அடையாறு, சென்னை.
 

Download for free from the Store »

Advertisement