Advertisement

குளோபல் ஷாட்: 17-பிப்-2019

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் குர்னேவில்லேயில் பெய்த பலத்த மழை காரணமாக ரஷ்ய ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தின் பாரஸ்ட் வில்லே அருகே மாலை வேளையில் ரஷ்ய ஆற்றின் அழகிய தோற்றம்.
அமெரிக்காவின் சவுத் பர்லிங்டோனில் கடும் பனிப்பொழிவு காரணமாக குடியிருப்பு அருகே குவிந்து காணப்படும் பனி.
மெக்சிகோவின் நேவேடோ டி டொலுகா பகுதியில் ஒரு செடியின் மீது ஓய்வெடுக்கும் பட்டாம்பூச்சி.
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த கார்னிவெல் திருவிழாவின் போது முகமூடி அணிந்த படி ஒருவர் படகில் பயணிக்கிறார்.
இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பகுதியில் உள்ள ஆஷ்டோன் கோர்ட் எஸ்டேட்டில் காணப்பட்ட இரண்டு மான்கள்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த கார்னிவெல் திருவிழாவில் முகமூடி அணிந்து கலந்து கொண்டார்.
சுவிஸ் நாட்டின் ஜெனிவா ஏரியின் கரையில் டைவ் அடிக்கும் மேடையில் மறு கரையில் தெரியும் பிரான்ஸ் நாட்டு ஆல்ப் மலையின் அழகை ரசிக்கின்றனர்.
 

Download for free from the Store »

Advertisement