Advertisement

குளோபல் ஷாட்: 13-ஜன-2019

ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா கடற்கரையில் மாலை வேளையில் சர்பிங் மற்றும் குளியலில் ஈடுபட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் மணிலாவில் ரோமன் கதோலிக்க பிரவினர் திருவிழாவை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற போது பாலம் ஒன்றை கடந்து சென்றனர்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் அருகே காணப்படும் காட்டுக்குதிரைகள்.
பெருநாட்டில் நடந்து வரும் கார்ப்பந்தயத்தில் கலந்து கொண்ட கார்கள் அந்நாட்டின் டாக்னா மற்றும் ஏர்கியுபா இடையே கடற்கரையில் சீறிப்பாய்ந்து செல்கின்றன.
லித்துவேனியாவிலுள்ள வில்னியூஸ் நகரில் ரோட்டில் படர்ந்துள்ள பனியை இயந்திரம் கொண்டு அகற்றும் ஊழியர்.
ஜெர்மனியின் பெர்கடேகனில் உள்ள நீச்சல்குள அரங்கின் கூடாரத்தில் படர்ந்துள்ள பனியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு இங்கிலாந்தின் சவுத்சீல்டில் அதிகாலை நேரத்தில் வானில் சூரியனின் கைவண்ணத்தில் வானில் தோன்றிய வர்ணஜாலம்.
ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தங்களது வீட்டருகே பனிப்படலத்தின் மீது இருவர் நடந்து செல்கின்றனர்.
ஆஸ்திரியாவிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள சால்ஸ்புர்க் பகுதி கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
 

Download for free from the Store »

Advertisement