சம்பவம்: 03-டிச-2019
கடலூர் மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடி செல்லும் சாலை மழையால் பெரும் பள்ளமாக உள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க, கொண்டு வரப்பட்ட மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தொடர்ந்து கூவம் ஆற்றின் முகத்துவாரம் அருகிலும் கடலில் இருந்து நுரை வெளியேறி வருகிறது. இடம்:நேப்பியர் பாலம் அருகில், சென்னை.
நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.