Advertisement

சம்பவம்: 10-செப்-2019

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாக்., பிரதமர் இம்ரான் கான் நடத்திய பொதுக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து அந்நா ட்டு கொடியை எரித்து, சிவசேனா டோ க்ரா முன்னணியினர், ஆர்ப்பாட்டம் செய்தனர். இடம்: ஜம்மு, ஜம்மு - காஷ்மீர்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரின்ஸ் இன்ஃபோ சிட்டி ஐ.டி. நிறுவனத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து உள்ளே வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு இச்சோதனை நடந்தது. இடம் : கந்தன்சாவடி.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்ற கோரி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி காந்தள் முக்கோணம் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை மையத்திலுள்ள குப்பையால், சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு கூடுதல் டி. ஜி. பி., ஜெயந்த்முரளி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement