Advertisement

சம்பவம்: 09-ஜூலை-2019

உத்தர பிரதேச மாநிலம் , ஆக்ரா அருகே , யமுனா அதிவிரைவு சாலையில், நிலைதடுமாறிய பஸ், கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 29 பேர் உயிரிழந்தனர்.
முத்தியால் பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சிக்னல் சென்டர் மீடியன் கட்டையில் ஆசிட் ஏற்றி வந்த லாரி ஏறி விபத்துக்குள்ளானது லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஓடியது அதனை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து அப்புறப்படுத்தினர்.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட ஆசிரியருக்கு அடி கொடுத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரனை கண்டித்து மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் . இடம் : அனகாபுத்தூர் அரசு பள்ளி
ஆக்ரா அருகே கால்வாயில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதையொட்டி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடில்லி பார்லிமென்ட் வளாகத்தில் திரிணாமுல் காங்., எம்.பி., க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மீரட்டில் விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபுர் ஒட்டியுள்ள வனப்பகுதியில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் முறையாக திறந்து விடாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement