Advertisement

சம்பவம்: 19-மே-2019

புதுச்சேரி சண்முக புரம் வி. பி. சிங் நகரில் அலமாரியில் இருந்து 7.5 பவுன் நகையை திருடிய விஜயை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.அருகில் எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் இனியன்.
மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் தலைவர் கமலஹாசனை அவதூறாக பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மனு கொடுக்க வந்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, திருச்சி மேலரன் சாலையில் இயங்கி வந்த சிட்டி கிளப் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை அடுத்து, சிட்டி கிளப்பை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இடித்து அகற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப் பாகத்தில் தாய் தந்தை தம்பி ஆகியோரை கொலை செய்த வழக்கில் கோவர்த்தனன் என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.
லோக்சபா கடைசி கட்ட தேர்தலையொட்டி மிர்ஜாபூரில் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக தயார்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்கள்.
 

Download for free from the Store »

Advertisement