Advertisement

சம்பவம்: 17-பிப்-2019

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து எம்எல்ஏக்கள் சிவா, பாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் எதிரே நடந்தது.
உ.பி., அலகாபாத் அருகே டுடிகார் கிராமத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மகேஷ்யாதவ் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கின் போது கதறி அழும் மனைவி.
புல்வாமா தாக்குதலை கண்டித்து பல்காரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆமதாபாத்தில் நடந்த கடையடைப்பால் வெறிச்சோடி காணப்பட்ட வீதி.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மகேஷ்யாதவ் இறுதி ஊர்வலம் உ.பி., மாநிலம் டுடிகார் கிராமத்தில் நடந்த போது சோகத்துடன் காணப்பட்ட மக்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் பிடித்து செல்கின்றனர்.
Share
 

Advertisement