Advertisement

சம்பவம்: 11-ஜன-2019

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகளைச்சேர்ந்தபெண்கள், டில்லியில் நேற்று போராட்டம்நடத்தினர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளுர் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டுரில் சாலை மறியலில் செய்தால் அங்கு மாவட்ட எஸ் பி பென்னி தலைமையில் போலீசார் குவிப்பு.
பொங்கல் பொருட்கள் வாங்க வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள். இடம் .உடுமலை காந்திநகர்
ரேஷன் கடைகளில் கமிஷனர் ஆய்வு...பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன். உடன் துணை ஆணையர் ரவளிப்பிரியா. இடம்- டாக்டர் விஜயராகவலு சாலை, வண்ணாரப்பேட்டை.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கிரிஷாக் முக்தி சங்ரம் சமிதி அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமாருக்கு எதிராக மனு அளிக்க ராஷ்டிரிய ஜனதாதள மற்றும் சமஜ்வாதி கட்சியினர் ராஜ்பவனில் உள்ள கவர்மாளிகைக்கு ஊர்வலமாக சென்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஞ்சியில் மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் உள்ள இந்து அமைப்பினை சேர்ந்தவர்கள் ராமர் கோவிலுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement