Advertisement

சம்பவம்: 09-நவ-2018

பள்ளிக் கட்டடத்தில் தீ விபத்து...சென்னை, கொருக்குப்பேட்டை, தியாகப்பா தெருவில் அரசு உதவிபெரும் ஆர்.ஜெ.ஆர். நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டுவந்த பேப்பர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி கண்டேன்மென்ட் வில்லியனூர் ரோட்டில் உள்ள சோனா, மீனா தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த சர்க்கார் சினிமா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டு பிளக்ஸ் பேனர்களை கிளித்து எரிந்தனர்.
சர்க்கார் திரைப்படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தை யொட்டி விழுப்புரம் கல்யாண் திரையரங்கு முன்பு டிஎஸ்பி சங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சர்க்கார் திரைப்படத்தில் சர்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் அ.தி.மு.க.வினர் நடிகர் விஜயின் பேனர்களை கிழித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தகோச மங்கை மரகத நடராஜர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை கண்டித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் முதல்வர் தருண் கோயல் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரிபுன் பவுரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி சிதைந்த மத்திய ராணுவ படையினரின் வாகனம்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து அனைத்து அசாம் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உ.பி., மாநிலம் மதுராவில் நடந்த கோவர்த்தன பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
 

Download for free from the Store »

Advertisement