Advertisement

பொது: 10-நவ.,-2019

சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் நந்தி பெருமான்.
ஐப்பசி மாத சனி பிரதோஷ முன்னிட்டு, திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோவிலில், நந்திக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. அதனை, திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
குர்தாஸ்பூர் - கர்தார்பூர் வழித்தட துவக்கவிழாவில் கலந்து கொண்ட மோடி குர்தாஸ்பூரில் நடந்த லங்கர் விருந்தில் கலந்து கொண்டார்.
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் ராஷ்டிரிய பஜ்ரங்தால் அமைப்பினர் உச்சநீதிமன்ற தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆமதாபாத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று பேண்டு வாத்தியம் முழங்க கொண்டாடினர்.
ம.பி., ஜபல்பூரில் உள்ள சமஸ்கிருத வேத விக்யான் கேந்திர மாணவர்கள் உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்று உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தனர்.
ராஞ்சியில் பல்வேறு மதத்தினர் அயோத்தி வழக்கின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நட்பு பாராட்டி வரவேற்றனர்.
முஸ்லீம்கள் மசூதி கட்ட தனி இடம் ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை இனிப்புகள் வழங்கி கொண்டாடும் முஸ்லீம்கள் இடம்: ஆமதாபாத்.
 

Download for free from the Store »

Advertisement