Advertisement

பொது: 05-நவ-2019

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டியினை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார்.
கோவை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பழைய பதிவுகளை அளிக்கும் பணி நடந்தது.
வனத்துறையில் நியமனம் பெற்று பயிற்சியில் உள்ள வனவர்களுக்கான உயிர்அறிவியல் மற்றும் மேலாண்மை பற்றிய கருத்தரங்கு கோவை வனக்கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.
Share
 

Advertisement