Advertisement

பொது: 16-மே-2019

ஒடிசாவை புரட்டிப் போட்ட, 'போனி' புயலின் பாதிப்பு, இன்னும் சீரைடயவில்லை. புரியில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சீக்கிய தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தோர் உணவு வழங்கினர்.
டில்லியில், கடுமையான வெயில் வாட்டி வைதத்த நிலையில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால், சாலையோரத்தில் இருந்த பூந்தொட்டியின் கீழ் ஒதுங்கிய வாலிபர்.
விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி சான்றிதழ் வாங்கினார் அருகில் கலைமணி
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது
கோவை சுந்தராபுரம் சாரதா மில் அருகேவுள்ள உள்ள மாரியம்மன் கோவிலின் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
எழுத்தாளர் பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழா தி.நகரில் நடந்தது.இதில் எழுத்தாளர் நரனிற்கு பாலகுமாரன் இலக்கிய விருதினை பா. ஜ.மூத்த தலைவர் இல.கணேசன் வழங்கினார். அருகில் (இடமிருந்து) பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மற்றும் பாலகுமாரன் மனைவி கமலா பாலகுமாரன்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் மரக்கிளை ஒன்றின் மீது ஓய்வெடுக்கும் சிறுத்தைப்புலி
உ.பி., மாநிலம் வாரணாசியில் கங்ககை நதிக்கரையில் சூரிய உதயத்தின் போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்.
 

Download for free from the Store »

Advertisement