Advertisement

பொது: 11-ஜன-2019

ரஜினியின் பேட்ட படம் நேற்று வெளியானது.ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள். இடம்:ஆல்பட் திரையரங்கம்,எழும்பூர்.
விஸ்வாசம் படம் திரைக்கு வந்ததை ரசிகர்கள் மலர்தூவி கொண்டாடினர். இடம்: அர்ச்சனா தியேட்டர், கோவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்தில் பிரியாவிடையுடன் அருள்பாலித்த சுந்தரேஸ்வரர்.
புதுச்சேரி பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.
அகில இந்திய வானொலி சார்பில் அகில பாரத கவி சம்மேளனம் கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் கவிஞர்களை கவுரவித்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித்.அருகில் அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குனர் பயாஸ் ஷேகார்யர், தூர்தர்ஷன் துணை இயக்குனர் ராமச்சந்திரன்,அகில இந்திய வானொலியின் உதவி இயக்குனர் தியாகராஜன் உள்ளிட்டோர்.
தமிழ் நாட்டின் ஸ்டார்ட் ஆப் பொங்கல் திருவிழா ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெற்றது, இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துவக்க நிலையில் உள்ள இயக்குனர்கள், பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர். இடம்: ராமாபுரம் எஸ்.ஆர்.எம்.கல்லூரி
புதுச்சேரி பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் நவீனா கார்டன் திருமண மண்டபத்தில் மாநில கோரிக்கை மாநாடு நடந்தது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.இதில் கிராமத்து பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் ஒட்டகத்திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு ஒட்டகம்.
 

Download for free from the Store »

Advertisement