Advertisement

அரசியல்: 12-ஜூலை-2019

ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க வில்சன், சண்முகம் மற்றும் ம.தி.மு.க எம்.பி வைகோ வெற்றிபெற்றதற்கான சான்றிதழ்களை, சட்டசபை செயலர் சீனிவாசனிடம் பெற்றுக் கொண்டனர், உடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இடம்: தலைமை செயலகம், சென்னை.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகர் டில்லி ராஜ்யசபாவில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பேசினார்.
காங்., தலைவர் ராகுல் டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் கட்சியினர் கர்நாடகா பிரச்னையை வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா தலைவர் ஜிடான் ராம் மான்ஜி மற்றும் புதிதாக இணைந்த லோக்ஜனசக்தி மதசார்பற்ற தலைவர்கள் இவர்கள் அனைவரும் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
கோவா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த்பாபு கவ்லேகர் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் (மஞ்சள் சட்டை) மற்றும் பலர் டில்லியில் பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்தினர்.
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே (வலது) மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே (இடது) இருவரும் மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement