Advertisement

அரசியல்: 19-மே-2019

புதுச்சேரி, காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேர் வீதி உலாவை முதல்வர் நாராயணசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான எச்.டி.தேவகவுடா மற்றும் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசுவாமி இருவரும் சித்தூர் அருகே திருச்சனூர் பத்மாவதி கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
லக்னோ வந்த தெலுங்குதேச கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடுவை, பகுஜன்சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு மற்றும் லோக்தந்திரிக் ஜனதாதள் தலைவர் ஷரத்யாதவ் (இடது) இருவரும் டில்லியில் சந்தித்தனர்.
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சோம்நாத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் தன் குடும்பத்தினருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சோம்நாத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
 

Download for free from the Store »

Advertisement