Advertisement

அரசியல்: 09-நவ-2018

மதுரை அண்ணாநகரில் சர்கார் திரையிடப்பட்டுள்ள சினிபிரியா திரையரங்கு முன்பு அ.தி.மு.க., அமைச்சர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் தொண்டர்கள் படத்தில் அரசியல் சார்ந்த ஒரு சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலத்தில் நடக்க உள்ள சாத் திருவிழாவையொட்டி முன்னேற்பாடுகளை மாநில முதல்வர் நித்தீஸ் குமார் கங்கை நதியில் பயணம் செய்து விவாதித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரதமர் மோடி தீபாவளியன்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரை வாழ்த்தினார் இடம்: புதுடில்லி.
பா.ஜ.,மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவரை சந்தித்து வாழ்த்தினார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்யாவில் ராம ஜென்மபூமி நியாஸ் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாைஸ சந்தித்தார்.
சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில் பிரதமர் மோடியை போன்ற உருவ ஒற்றுமை உடையவர் காங்கிரஸ் கட்சிககாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி கேதர்நாத்தில் உள்ள பாகிரதி ஆற்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்,
 

Download for free from the Store »

Advertisement