புகைப்பட ஆல்பம்
20 Aug 2022
கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கண்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து உற்சாகமாய் வந்த குழந்தைகள்.
20 Aug 2022
சென்னை, எழும்பூர் ஐயப்பன் கோவில் சார்பில், நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த சிறுவர்கள்.
20 Aug 2022
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மேட்டுப்பாளையம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி குழந்தைகள் தின விழா நடந்தது. இதில் ஸ்ரீ கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து எல்.எஸ்.புரத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர்.
19 Aug 2022
கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான், என நாடுமுழுவதும் கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உரலைக்கட்டி இழுத்தவனே .,யது குல கண்ணனே என பலரும் அழைக்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட தொகுப்புகள்.
19 Aug 2022
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோவை பீளமேடு கொடிசியா ரோட்டில் உள்ள இஸ்கான் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.
19 Aug 2022
கிருஷ்ணா ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குழந்தைகள். இடம்: திருப்பூர், குருவாயூரப்பன் கோவில்.
19 Aug 2022
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் நடந்த விழாவில் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமிட்டு வந்த மாணவர்கள்.