படம் தரும் பாடம்
30 Jan 2023
தென் ஆப்ரிக்காவில் நடந்த, 19 வயதுக்கு உட்பட்ட 'ஜூனியர்' பெண்கள் அணிக்கான உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
29 Jan 2023
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த கலச யாத்திரையில் உற்சாகத்துடன் பங்கேற்ற பெண்கள், சிறுமியர், முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.
28 Jan 2023
ம.பி., மாநிலம் மொரேனா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான சுகோய் சூ-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானத்தை பார்வையிடும் பொது மக்கள்.
27 Jan 2023
குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சி நடத்தியவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
26 Jan 2023
பாரத்பயோடேக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பூசியை மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர்.
26 Jan 2023
குடியரசு தினத்தை முன்னிட்டு, புதுடில்லியில் உள்ள கடமைப்பாதையில் லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் தலைமையில் அணிவகுத்து சென்ற கடற்படை வீரர்கள்.
25 Jan 2023
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி, டில்லி ராஜ்காட்டில் உள்ள மஹாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார்.
25 Jan 2023
ஜம்மு - காஷ்மீரின் பாட்னிடாப்பில் கடும் பனிப்பொழிவை சமாளிக்க, குளிருக்கு இதமான சூடான உணவை ருசித்த சுற்றுலா பயணியர்.
25 Jan 2023
உள்ளே எதிரி... வெளியே நட்பு ? குடியரசு தின விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட வந்த டில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இடம்: புதுடில்லி.
24 Jan 2023
குடியரசுதின ஒத்திகையில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவிருக்கும் எகிப்து படையினர் டில்லியில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
24 Jan 2023
குடியரசுதின ஒத்திகையில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவிருக்கும் எகிப்து படையினர் டில்லியில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
23 Jan 2023
ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற ரகுநாத் கோவிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், சாமி தரிசனம் மேற்கொண்டார்.
23 Jan 2023
டில்லியில் நடந்த டைரக்டர் ஜெனரல் மற்றும் ஐ.ஜி. மாநாட்டில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் , பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.
22 Jan 2023
போக்குவரத்து நெரிசல் காரணமாக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள். இடம்: அரியானா, குருகிராம்
21 Jan 2023
திரிபுரா சட்டசபைக்கு பிப்.,16 ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இடம்: அகர்தலா.
19 Jan 2023
காஷ்மீரில் பனியில் உறைந்து போன நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள். இடம்: திரங், பாரமுல்லா.
18 Jan 2023
ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்மார்க்கின் அமைந்துள்ள உறைந்த நீர்வீழ்ச்சியை போட்டோ எடுக்கும் பெண்.
18 Jan 2023
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவியர் 'ஹெல்மெட்' அணிந்து பங்கேற்றனர்.
17 Jan 2023
குடியரசுதின ஒத்திகையில் பங்கேற்ற எல்லை பாதுகாப்பு படையினர் ஒட்டகத்தில் சவாரி செய்தபடி செல்லும் காட்சி.
17 Jan 2023
டில்லியில் நடக்கும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி திறந்த காரில் நின்றபடி பேரணியாக சென்றார்.
16 Jan 2023
பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப்பில் யானை பொங்கல் விழா நடந்தது. அதில், விநாயகரை வணங்கி வழிபட்ட வளர்ப்பு யானைகள்.
14 Jan 2023
ஆயுதபடை வீரர்கள் தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
13 Jan 2023
உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், துவங்கியுள்ள ஆட்டோ எக்ஸ்போ -23 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வாகனங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார்
13 Jan 2023
‛எம்.வி.கங்கா விலாஸ்' என்ற உலகின் நீண்டதூர நீர்வழி சொகுசு கப்பலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். பயணிகளுடன் தனது முதல் பயணத்தை துவங்கிய கப்பல். இடம்: வாரணாசி, உ.பி.,
13 Jan 2023
முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கியஜனதாதள மூத்த தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார். அவரது உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
12 Jan 2023
கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்திற்கு இடையே குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர். இடம்: பாட்னா
12 Jan 2023
ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால், வெண்பனிப் போர்வையால் மூடப்பட்டு காட்சியளிக்கும் ரஷீல் கிராமம்.
12 Jan 2023
சர்வதேச காற்றாடி திருவிழா குஜராத்தில் நடந்து வருகிறது. இதையொட்டி சூரத் நகரில் உள்ள மைதானத்தில் பறக்கவிடப்பட்ட ராட்சத காற்றாடிகள்.
11 Jan 2023
உத்தரகண்டின் ஜோஷிமத் நகரில் விரிசல் ஏற்பட்ட வீடுகளை மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ஆய்வு செய்தார்.
11 Jan 2023
உலக கோப்பை ஹாக்கி தொடர் துவங்கவிருப்பதையொட்டி, பிரபல மணற் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ள 105 அடி நீள ஹாக்கி மட்டை பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: கட்டாக், ஒடிசா..
10 Jan 2023
சர்வதேச காற்றாடி திருவிழாவில், விதவிதமான காற்றாடிகளை பறக்கவிட்ட காற்றாடி பிரியர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
09 Jan 2023
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி எம்எல்ஏ.,க்கள் அவரது இருக்கை அருகே சென்று கோஷங்கள் எழுப்பினர்.
09 Jan 2023
சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் 357வது பிறந்த ஆண்டையொட்டி, நடந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற சீக்கிய சிறுவன். இடம்: ஆக்ரா, உ.பி.,