Load Image
Advertisement

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

22 Mar 2023

இன்று உலக தண்ணீர் தினம்

14 Mar 2022

பாஸ் விருப்ப படம்

16 Feb 2022

உக்ரைனின் சீவ் நகரில், அந்நாட்டு மக்கள் ஒற்றுமை பேரணி நடத்தினர். அதில், கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய தேசியக்கொடியின் கீழ் நடந்து செல்லும் சிறுவன்.

14 Feb 2022

பூமியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

13 Feb 2022

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுபொருட்கள் ஆர்வமாக வாங்கும் பெண்கள். மாநிலம்: மஹாராஷ்ட்டிரா.

11 Feb 2022

பாறைகளில் உறைந்து போன பனிக்கட்டிகள் அருவியாக கொட்டும் அழகிய காட்சி. இடம்: டங்மார்க், காஷ்மீர்.

10 Feb 2022

கோவிட் சோதனை எடுத்து கொள்ள நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் அனைவரும் கையில் மொபைல் போன் வைத்து பார்த்து கொண்டே செல்லும் காட்சி.

09 Feb 2022

லேசான மழை பெய்த போதிலும் குடை பிடித்தபடி தாஜ்மஹாலை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள்.

07 Feb 2022

பரிகாரங்கள் செய்வதற்காக கங்கை நதிக்கரையில் சாதுக்கள் எருக்களை சுற்றி வைத்து தீ மூட்டுகின்றனர். இடம்; பிரயாக்ராஜ்.

06 Feb 2022

ஐதராபாத்தில் ராமனுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . புதுச்சேரி கவர்னர் தமிழிசையும் பங்கேற்றார்.

05 Feb 2022

கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பை கடல் பகுதியில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

04 Feb 2022

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சிம்லாவில் பனிபடர்ந்து காணப்பட்ட வாகனங்கள்.

02 Feb 2022

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் புறநகர் பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகள்.

01 Feb 2022

டில்லி பார்லி., வளாகத்தில் பட்ஜெட் ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகிறது.

30 Jan 2022

தாஜ்மஹால் முன்பு புகைப்படம் எடுத்து கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

29 Jan 2022

டில்லியில் என்சிசி மாணவர்கள் சார்பில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

28 Jan 2022

மஞ்சள் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாய பெண்கள். இடம்: காரட், மஹாராஷ்ட்டிரா .

27 Jan 2022

தென் ஆப்ரிக்காவின் மாளாவியில் வெள்ளப்பெருக்கில் இழுத்து செல்லப்பட்ட வாகனம் நொறுங்கி கிடக்கிறது.

26 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லி ராஜபாதையில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான சாரங் விமானங்கள்.

25 Jan 2022

சீன தலைநகர் பெய்ஜீங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவங்குவதை முன்னிட்டு சாலைகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

24 Jan 2022

குடியரசுதினத்தை முன்னிட்டு மூவண்ண கொடி நூற்கும் மூதாட்டி. இடம்: நாடியா மாவட்டம், மே.வங்கம்.

21 Jan 2022

குடியரசுதின ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கலைக்குழுவினர். இடம்; கோல்கட்டா.

20 Jan 2022

குடியரசுதின ஒத்திகையில் ஈடுபட்டுள்ள வீரர்கள். இடம்: புதுடில்லி.

19 Jan 2022

குடியரசு தினம் நெருங்குவதை முன்னிட்டு, தேசிய கொடியை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட பெண்கள்.

18 Jan 2022

தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர் கூறியதை சாத்தியப்படுத்தும் வகையில், கோவை வேளாண் பல்கலையில் நாற்று நடும் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.

16 Jan 2022

மும்பையில் அதிகாலை நேரத்தில் கடற்கரையோரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வாலிபர்.

16 Jan 2022

நம் அண்டை நாடான மியான்மரின் தெற்கு ஷான் மாகாணத்தில் புகழ்பெற்ற இன்லே ஏரி உள்ளது. இந்த ஏரியில், 'சீகல்' எனப்படும் கடல் பறவைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.

14 Jan 2022

தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டம்; பல இடங்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிப்பட்டனர். இடம்: புதுச்சேரி.

13 Jan 2022

கொட்டும் பனியில் பணியில் ஈடுபட்டுள்ள நாளிதழ் விநியோகிக்கும் தொழிலாளி. இடம்: ஜலந்தர், பஞ்சாப்.

12 Jan 2022

பனிப்பொழிவில் குழந்தையை சுமந்து செல்லும் தாய். இடம்: காஷ்மீர்.

11 Jan 2022

நான் மீண்டுட்டேன். இடம்: கோவிட் மருத்துவமனை. புதுடில்லி.

10 Jan 2022

சீக்கியகுரு கோவிந்த்சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு பஞ்சாப் பொற்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

09 Jan 2022

கோவிட் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி எமராஜன் வேடமணிந்து மிரட்டி பிரசாரம் மேற்கொண்டனர். இடம்: மேற்குவங்கம்.

09 Jan 2022

ஒடிசி நடன குரு பிறந்த நாள் விழாவில் நடைபெற்ற நடனம். இடம்: புவனேஸ்வர்.

06 Jan 2022

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பணிக்கு செல்லும் ஊழியர்கள். இடம்: குருகிராம், அரியானா.

05 Jan 2022

வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், தீமூட்டி குளிர்காயும் பொது மக்கள் . இடம்: டில்லி.

04 Jan 2022

கோவிட் ஊரடங்கிற்கு எதிராக நெதர்லாந்தில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

02 Jan 2022

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் பங்கேற்ற தொண்டர்கள். இடம்: போபால். மத்திய பிரதேசம்

02 Jan 2022

மெட்ரோ ரயிலில் செல்ல கூட்டம், கூட்டமாக நின்ற மக்கள். இடம் : கான்பூர்.

01 Jan 2022

அணு உலையின் அழகிய காட்சி: நாடு: ஜெர்மனி.

30 Dec 2021

மஹாராஷ்டிர மாநிலம் காரத் மாவட்டத்தில் சூரியன் மறையும் நேரத்தில் குதிரை பயிற்சியில் ஈடுபட்ட நபர்.

29 Dec 2021

டில்லியில் பனி சூழ்ந்த அதிகாலை நேரத்தில் டிரை சைக்கிளில் குழந்தைகளுடன் பயணிக்கும் நபர்.

28 Dec 2021

குளிர்கால சீசன் துவங்கியதையொட்டி விற்பனைக்கு வந்துள்ள மரவள்ளி கிழங்குகள். இடம்: சென்னை வள்ளுவர்கோட்டம்.

25 Dec 2021

கிறிஸ்துமஸ் முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள். இடம்: திரிபுரா அகர்தலா .

24 Dec 2021

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாட்டம் நடந்து வருகிறது. இடம்: மதுரா.

23 Dec 2021

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விமான படையினரின் சாகச காட்சி.

22 Dec 2021

கோவை உக்கடம் வாலாங்குளக்கரையோரம், நாமக்கோழி நீர்ப்பறவை ஒன்று, முட்டை இட்டு அடை காத்து வரும் அழகிய காட்சி இது! இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கோழி ஆகும். இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகிறது.

21 Dec 2021

புத்த மத தலைவர் தலாய்லாமாவை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் சந்தித்து பேசினார்.

19 Dec 2021

வீடுகள் இல்லாத இந்த ஏழை குழந்தைகள் போக்குவரத்து உள்ள டில்லி முக்கிய சாலைகளில் இவ்வாறு தங்கி வருகிற அவலம் உள்ளது.

18 Dec 2021

மாதமோ மார்கழி மாதம் ! குளிர்காயும் சாதுக்கள். இடம்: பாட்டியாலா, பஞ்சாப்.

17 Dec 2021

இந்தியா, பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் கேரள செண்டை மேளம் வாசிக்கும் ராணுவ வீரர்கள். இடம்: ஜம்மு.

16 Dec 2021

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

16 Dec 2021

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் லல்லி என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியை, விளக்குகளால் ஒளிரூட்டும் திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. கடந்த 10 ல் துவங்கி 19 வரை நடக்கும் இத்திருவிழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள். வனப்பகுதியில் 1 கி.மீ., தூரம் நடந்து மகிழ்ந்தனர்.

15 Dec 2021

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஏகாதசி

14 Dec 2021

பா.ஜ., ஆளும் கட்சி முதல்வர்களுடன் பிரதமர் மோடி , மாநில வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

13 Dec 2021

வாரணாசி சென்ற பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள காலபைரவர் கோயிலில் வழிப்பட்டார்.

11 Dec 2021

காங்., பொதுசெயலர் பிரியங்கா கோவாவின் மோர்பிர்லா பகுதிக்கு சென்ற அவர் மலைவாழ் மக்களுடன் நடனமாடினார்.

10 Dec 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 8 பக்க டேப்லாயிடு 40,000 பிரதிகள் தனியார் மற்றும் அரசு , மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

08 Dec 2021

தாஜ்மஹால் முன்பு புகைப்படம் எடுத்து கொண்ட சுற்றுலா பயணி. இடம்: ஆக்ரா.

07 Dec 2021

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் கணவன் அமைவதெல்லாம் மனைவி பெற்ற அதிர்ஷ்டம்..! இன்றைய இளம் தலைமுறை ஜோடிகளுக்கு இது ஒரு உதாரணம்.. இடம் கோவை சின்னியம்பாளையம் ரோடு

05 Dec 2021

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

04 Dec 2021

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது குடும்பத்தினருடன் பஞ்சாப் பொற்கோவிலில் செல்பி எடுத்தார்.

03 Dec 2021

திருப்புவனம் வைகை ஆற்றில் வெள்ளம் ‛ட்ரோன் கேமரா' படம்

02 Dec 2021

மழை, வெள்ளம் காரணமாக சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

30 Nov 2021

மழை நீர் சூழ்ந்த சென்னையில் நாய் ஒன்று பாதுகாப்பான இடம் தேடி செல்கிறது.

28 Nov 2021

வேர்க்கடலை ஆர்வமாக வாங்கும் பெண்கள். இடம்: பெங்களூரு.

27 Nov 2021

ரயில் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர். இடம்: ராஞ்சி, ஜார்கண்ட்.

26 Nov 2021

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் 13 வது ஆண்டு நினைவுநாளில் மும்பை போலீசார் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

25 Nov 2021

கான்பூரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள்.

24 Nov 2021

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உ.பி., மாநிலம் கான்பூரில் நாளை துவங்குகிறது. இதற்காக பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியினரை உற்சாகப்படுத்த தேசியக்கொடியுடன் வந்த ரசிகர்கள்.

23 Nov 2021

புவனேஸ்வரில் பிஜூ ஜனதாதள மகளிர் அமைப்பினர் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து பேரணி நடத்தினர்.

22 Nov 2021

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குதிரைபந்தய போட்டியில் கிளிக்கான காட்சி.

21 Nov 2021

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட அழகு காட்சி.

20 Nov 2021

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடும் பெண்.

19 Nov 2021

கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு உ .பி., மாநிலம் மிர்சாபூர் விந்தியாவாஷினி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிப்பட்டனர்.

18 Nov 2021

மத்திய அமெரிக்காவில் அகதிகளாக குடியேறியவர்கள் மீண்டும் மெக்சிகோ எல்லையில் வந்ததும் லாரிகள் மூலம் புறப்பட்டு சென்றனர்.

17 Nov 2021

சீக்கிய மத குரு குருநானக்கின் 552வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் யானை மற்றும் ஒட்டகத்தில் உலா வந்த சிறுவர்கள். இடம்: பாட்னா, பீஹார்.

15 Nov 2021

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் புட்டோசர் மூலம் மீட்கப்பட்டனர்.

13 Nov 2021

மழை பெய்து ஈரம் காயாத தெரு... தலை சாய்க்க இல்லை வீடு... வயிற்றுப்பசிக்கு இல்லை உணவு... இப்படி எதுவுமே இல்லாவிட்டாலும், வாசிப்பால் வளருது இவரது அறிவு! மழையினால் நனைந்த தனது புத்தகங்களை காயவைத்து படித்து கொண்டிருந்த இந்த நடைபாதைவாசியை கண்ட இடம்: கோவை சிங்காநல்லூர் ரோடு.

12 Nov 2021

வட மாநில முக்கிய திருவிழாவான ஷாட் திருவிழாவில் பெண்கள் சிறப்பு பூஜை செய்தனர். இடம்: பாட்டியாலா, பஞ்சாப்.

10 Nov 2021

ஹிமாச்சல பிரதேச மாநிலம் லஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில் பனி படர்ந்த மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள்.

08 Nov 2021

புகழ்பெற்ற புஷ்கர் திருவிழாவுக்கு தயாராகும் ஒட்டகங்கள்.

06 Nov 2021

பனிப்பாறையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள். இடம்; அர்ஜென்டினா.

05 Nov 2021

வட மாநிலங்களில் புகழ்பெற்ற ஷாட் பூஜை திருவிழாவை முன்னிட்டு மண் அடுப்புகள் தயாராகிறது. இடம்: பாட்னா, பீகார்.

04 Nov 2021

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் தீப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

03 Nov 2021

மே.வங்கத்தில் ' பூட் சதுர்தசி' முன்னிட்டு, உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு பேய் வேடமணிந்து உணவு பரிமாறும் ஊழியர்கள்.

02 Nov 2021

பண்டிகை நாட்களில் புத்தம் புது பாத்திரம் வாங்கி செல்லும் முதியவர். இடம்: ராஞ்சி, ஜார்கண்ட்.

01 Nov 2021

கோவிட்டால் நீண்ட நாட்கள் துவக்காமல் இருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகளின் கைகளில் சானிடைசர் தெளிக்கப்படுகிறது.

01 Nov 2021

ரோமில் நடந்த ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி.

30 Oct 2021

போப்புடன் - பிரதமர் ; ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி வாடிகன்சிட்டியில் போப் பிரான்ஸிசை சந்தித்து பேசினார்.

29 Oct 2021

பெங்களூருவில் சுற்றுலா துறை சார்பில் நடந்த கலாசார விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.

28 Oct 2021

மழை வெள்ளத்தில் மாற்று இடம் தேடி செல்கின்றனர். கம்போடியா.

26 Oct 2021

பனியால் சூழ்ந்துள்ள வாகனங்கள். இடம்: இமாசலபிரதேசம்.

25 Oct 2021

ஜம்மு காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

24 Oct 2021

உ.பி.,யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்., பொதுசெயலர் பிரியங்கா பெண்களுடன் கலந்துரையாடினார்.

23 Oct 2021

மணிப்பூரில் நடந்த கலாசார விழாவில் கலைஞர்கள் உற்சாக நடமாடினர்.

22 Oct 2021

காளி சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கிறார் கலைஞர் ஒருவர். இடம்: ஜார்கண்ட் .

21 Oct 2021

பீகார் சட்ட சபை விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

20 Oct 2021

தலைநகர் டில்லியில், பின்னணியில் வானவில் தோன்றிய நிலையில் காணப்படும் தேசியக்கொடி

18 Oct 2021

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவில் வீட்டை இழந்த பெண் கண்ணீர் விட்டு அழுவதை ஒருவர் தேற்றுகிறார்.

 
Advertisement