Advertisement

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!:

பிரிட்டனின் 'பிரெக்ஸிட்' ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த போது கண்ணீர் விட்டார்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் பாயும் மெய்ன் ஆற்றில் நீந்தும் சின்னஞ்சிறு பறவைகள்.
பிறந்து ஒரு மாதம் ஆன ஒட்டகச்சிவிங்கி. இடம்:சான்டிகோ, சிலி
கர்நாடக மாநிலம் சிக்மக்ளூரில் குளத்தில் பூத்த பா.ஜ., சின்னமான தாமரைகளை பறித்து கொண்டாடிய சிறுவர்கள்
லண்டனில் நடந்த மலர்க்கண்காட்சியில் மலர்களுக்கு நடுவே மலர் கிரீடம் அணிந்த மங்கை.
கோடை காலம் என்பதால் ஜம்மு காஷ்மீரில் தண்ணீர் சேகரித்து வைக்கும் மண்பானைகள் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.
மத்தியஜெர்மனியின் ரெயின்ஸ்தத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் உபகரணத்தின் மீது பட்டு மின்னிய சூரிய கதிர்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் குடி நீரை நீண்ட தூரம் சுமந்து செல்லும் பரிதாப காட்சி.
சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்து ஒரு மாதமே ஆன ஓட்டகச்சிவிங்கி குட்டி தன் தாயிடம் பால் குடிக்கிறது.
புத்தபூர்ணிமாவை முன்னிட்டு மேற்குவங்கம் கோல்கட்டாவில் புத்தசிலைகளை வணங்கிய சிறுவர்கள்.
அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் உள்ள ஒரு பொழுது பூங்காவில் ராட்சத சறுக்கில் சென்று மகிழும் மக்கள்.
அமெரிக்காவின் தெற்கு போர்ட்லேண்ட் மெய்னே பீச் அருகே காலை நேரத்தில் சூரியனின் கதிர்கள் மேகத்தில் பிரதிபலித்தன.
இத்தாலி ஓபன் டென்னிஸ் துவக்க விழாவில் வானில் சாகசம் நிகழ்த்திய விமானங்கள் . இடம்: ரோம்.
பாரீசில் உள்ள ஈபிள் டவர் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் மரக்கிளை ஒன்றின் மீது ஓய்வெடுக்கும் சிறுத்தைப்புலி
பீஹாரின் பக்சர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ., கூட்டத்தில், பங்கேற்ற தொண்டர்.
மழை பெய்த சில நிமிடங்களில் டில்லி வீதிகள் இப்படித்தான் மின்னியது.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகருக்கு அருகே பிறந்து ஒரு நாளே ஆன குதிரை குட்டி தன் தாயுடன் துள்ளி ஓடிய காட்சி.
ஜம்மு காஷ்மீர் பழமண்டியில் மாம்பழங்கள் மீது படுத்து ஓய்வு எடுக்கும் கூலி தொழிலாளர்கள்.
அமெரிக்காவின் லோவா மாகாணம் டெஸ் மோய்னேஸில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிய வரவான காண்டாமிருக குட்டி தன் தாயின் அருகே நின்றுள்ளது.
 

Download for free from the Store »

Advertisement