Load Image
Advertisement

இன்றைய போட்டோ

23 Feb 2024

ஊட்டி தோட்டக்கலைத்துறை வளாகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக, நடந்த தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் முகாமில், டி.ஆர்.ஒ., கீர்த்தி பிரியதர்ஷினி பேசினார்.

23 Feb 2024

ஊட்டி செசன்ஸ் கோர்ட்டிற்கு , கோடநாடு கொலை மற்றும் கொள்ளை , வழக்கிற்காக வந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் அரசு வக்கில்கள்.

23 Feb 2024

உடுமலை பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் அகற்றினர்.

23 Feb 2024

லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் : இடம்: மீனம்பாக்கம்

23 Feb 2024

எல்லாம் ஒரு சடங்குதான்.! :

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவை அவிநாசி ரோடு காவலர் சமுதாய கூடத்தில் நடந்தது. இதில் 10க்கும் குறைவான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

23 Feb 2024

ஊட்டி தோட்டக்கலைத்துறை வளாகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக, நடந்த தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் முகாமில், கலந்துக் கொண்டவர்கள்.

23 Feb 2024

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

23 Feb 2024

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ ஒன்பதாம் நாளில் விருத்தகிரீஸ்வரர் சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

23 Feb 2024

அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் அதிமுக கட்சி சார்பில் lilfy கோலப்போட்டி நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் சண்முகம் பார்வையிட்டார்.

23 Feb 2024

உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு உயிரியல் பாட செய்முறை அரசு பொது தேர்வு எழுதும் மாணவியர்கள்.

23 Feb 2024

மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

23 Feb 2024

லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ . இடம் : மீனம்பாக்கம்

23 Feb 2024

உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை அரசு பொது தேர்வு எழுதும் மாணவியர்கள்.

23 Feb 2024

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 10வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

23 Feb 2024

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா பத்தாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

23 Feb 2024

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அங்கு விலாஸ் மண்டகப்படி சார்பில் மின் ராத ஊர்வலம் நடந்தது.

23 Feb 2024

பணிகள் தீவிரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக செங்கல் சூளை போடும் பணிக்கு தீவிரமாக கற்கள் அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடம் : திருவெண்ணைநல்லூர் அடுத்த தொட்டிகுடிசை.

23 Feb 2024

சிவகங்கையில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசினார்

23 Feb 2024

ப.ஜ.க.,வின் என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டம் கோவை வி. கே. கே., மேனன் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. அருகில் மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்,மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் சேகர், இணை அமைச்சர் முருகன் எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி,உள்ளிட்டோர்

22 Feb 2024

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

22 Feb 2024

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்தது.

22 Feb 2024

திருநெல்வேலி மாவட்டம் மருதூர் தாமிரபரணி அணைக்கட்டில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டினை நெல்லை பல்கலை தொல்லியல் மாணவர்கள் கண்டுபிடித்தனர்.

22 Feb 2024

திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றினர்.

22 Feb 2024

சென்னை மாநகராட்சியின் 2024-25ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாத கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.இடம்: ரிப்பன் மாளிகை.

22 Feb 2024

எம்.சி.சி பள்ளி வளாகத்தில் ராக்கெட் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி பெற்ற மாணவர்கள் 15 ராக்கெட்களை விண்ணில் செலுத்தினர். இடம் : சேத்துப்பட்டு, சென்னை.

22 Feb 2024

விருதுநகர் அருகே ஆவல்சூரன்பட்டியில் பூத்துக்குலுங்கும் செண்டு பூக்கள்.

22 Feb 2024

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த தமிழக சட்டசபை கூட்ட நிகழ்வுகளை காண வந்த, சென்னை தனியார் பள்ளி மாணவ, மாணவியர்.

22 Feb 2024

டி.பி.ஐ வளாகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த போலீசார். இடம் : நுங்கம்பாக்கம்.

22 Feb 2024

கோவை பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கும் சென்டைஸ் விளையாட்டுப் போட்டியில் கோகோ பிரிவில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப மற்றும் எஸ்.என்.எஸ் இன்ஜி.,கல்லூரி அணிகள் மோதின.

22 Feb 2024

திருப்பூர் பி. என். ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, பாலாஜி நகர் பகுதியில் ஸ்ரீ ஆண்டவர் மஹால் புதிதாக திறக்கப்பட்டு, வள்ளி தேவசேன சமேத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.

22 Feb 2024

கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லூரி மைதானத்தில் நடந்த, குண்டு எறிதல் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்.

22 Feb 2024

மாசித் திருவிழாவை முன்னிட்டு அலங்காரத்தில் திண்டுக்கல் கோட்டைமாரியம்மன்.

22 Feb 2024

சட்டசபை முடிந்து கிளம்பிய எம்.எல். ஏ க்கள். இடம் : தலைமைச் செயலகம்.

21 Feb 2024

காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசி மக தேர் வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.

21 Feb 2024

கோவை லாலிரோடு சிக்னல் பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

21 Feb 2024

விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரம் சாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காதுகேளார்களுக்கு கலை நிகழ்ச்சி நடந்தது.

21 Feb 2024

வெள்ளியின் எல்லை பகுதிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் அரியானா பகுதியான சிந்து எல்லையில் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததை ஒட்டி பகுதியில் ஆயுதங்கள் எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நான்கு அடுக்குகளாக தடுப்புகள் அமைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டனர்

21 Feb 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.

21 Feb 2024

திருப்பூர், செல்லாண்டின்யம்மன் கோவில் பாலத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடப்பதால் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

21 Feb 2024

பிரதோஷத்தையொட்டிகடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

21 Feb 2024

கோவை வேளாண் பல்கலை வளாகத்திலுள்ள தாவரவியல் பூங்காவில் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

21 Feb 2024

சென்னை மாநகராட்சியின் 2024-25ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தலைமையில் நிலக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் தாக்கல் செய்தார். உடன் இடமிருந்து வலம் கூடுதல் கமிஷனர் லலிதா, துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன். இடம்: ரிப்பன் மாளிகை.

21 Feb 2024

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீதேவி,பூதேவி நாச்சியாருடன் பத்மநாப சுவாமி. இடம் : அடையாறு.

21 Feb 2024

திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் தங்க கவச அல பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

21 Feb 2024

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த தமிழக சட்டசபை கூட்ட நிகழ்வுகளை காண வந்த, சென்னை அரசு பள்ளி மாணவியர்.

21 Feb 2024

விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம்.

21 Feb 2024

சத்ய சாய் சேவா நிறுவனங்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கிளை சார்பில், புதுச்சேரி கோபாலன் கடை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்ய சாய் சேவா மையம் திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அருகில் சத்திய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் மோகன்.

21 Feb 2024

சத்ய சாய் சேவா நிறுவனங்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கிளை சார்பில், புதுச்சேரி கோபாலன் கடை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்ய சாய் சேவா மையம் திறப்பு விழாவில் கவர்னர் தமிழிசை கட்டிட பெயர் பலகையை ரிமோட் மூலம் திறந்து வைத்தார்.

21 Feb 2024

சென்னை மாநகராட்சியின் 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இடம்: ரிப்பன் மாளிகை.

21 Feb 2024

விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்திற்கு பொம்மபுர ஆதினம் ஸ்ரீமத் சிவஞான பாலையா சுவாமிகள் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டது.

21 Feb 2024

சத்ய சாய் சேவா நிறுவனங்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கிளை சார்பில், புதுச்சேரி கோபாலன் கடை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்ய சாய் சேவா மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

21 Feb 2024

சத்ய சாய் சேவா நிறுவனங்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கிளை சார்பில், புதுச்சேரி கோபாலன் கடை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்ய சாய் சேவா மையம் திறப்பு விழாவில் கவர்னர் தமிழிசை பேசினார். அருகில் அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார்,சாய் சரவணகுமார், மற்றும் சத்திய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் மோகன்.

21 Feb 2024

திண்டிவனம் மற்றும் மரக்காணத்தில் உள்ள டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் ஜல்லி, எம்சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வை கண்டித்து திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21 Feb 2024

புதுச்சேரி ஊசுடேரியில் உணவுக்காக நீரில் உணவைத் தேடும் நீர்க்கோழி மேலே பறந்து உணவை தேடும் காகம்.

21 Feb 2024

மாதவிடாய் என்பது தீட்டு அல்ல என்பதை உணர்த்தும் நிகழ்வினை திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஐந்தாயிரம் பேர் சின்னமாக அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

21 Feb 2024

கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லூரி மைதானத்தில் நடந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தடகள போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்.

21 Feb 2024

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட அ.தி.மு.க வினர். இடம் : ராயப்பேட்டை, சென்னை

21 Feb 2024

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

21 Feb 2024

மீன்களை உண்ண காத்திருக்கும் பறவைகள். இடம். உடுமலை

21 Feb 2024

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள பாப்பி பூ.

21 Feb 2024

கோவை கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது.

21 Feb 2024

கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர் மணிவாசகன் பேசினார்.

21 Feb 2024

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லாறு அருகே 20 அடி பள்ளத்தில் வேன் சரிந்தது. வானில் வந்தவர்களை மீட்கும் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள்.

21 Feb 2024

ராமேஸ்வரம் அருகே பாம்பன் வந்த ரயில்வே வாரிய தலைவர் ஜெயாவர்மா சிங்காவிடம், பாம்பன் ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

21 Feb 2024

ப்ளஸ் 2 மாணவிகளுக்கான பொது இயற்பியல் செய்முறை தேர்வு கோவை ராஜவீதி துணி வணிகர் பள்ளியில் நடந்தது.

21 Feb 2024

கோவை கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

20 Feb 2024

சென்னை புதுப்பேட்டை குதிரைப்படை வளாகத்தில் குதிரையேற்ற போட்டி நடந்தது.

20 Feb 2024

மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி, சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை ,எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில்.

20 Feb 2024

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் போராட்டம் நடந்து வருவதால், நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

20 Feb 2024

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லாறு அருகே 20 அடி பள்ளத்தில் வேன் சரிந்தது. மீட்கும் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள்.

20 Feb 2024

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் தாய்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் என்னும் வடிவில் அணிவகுத்து நின்று கொண்டாடினர்.

20 Feb 2024

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ ஆறாம் நாளில் முனிவருக்கு பெரியநாயகர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

20 Feb 2024

புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற சரத் சவுகான் சபாநாயகர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

20 Feb 2024

மதகுபட்டி அருகே பல ஏக்கர்களில் செவ்வந்திப் பூக்களை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

20 Feb 2024

தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும், பசுமை போர்த்திய நெற்பயிர்களும் கண்களை கவரும் வண்ணம் காட்சியளித்தது.

20 Feb 2024

வைகை ஆற்றின் நீர் வழித்தடம் தெரியாத அளவிற்கு அணையின் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் சூழ்ந்து வைகை கடலாக காட்சியளிக்கிறது. இடம்: தேனி மாவட்டம்.

20 Feb 2024

சட்டசபை கூட்டம் முடிந்து வெளியே வந்த சட்டசபை பா.ம.க குழு தலைவர் ஜி.கே. மணி, தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் எப்படி என கேட்டார், அதற்கு நீங்கள் (பா.ம.க) வெளியிட்ட நிழல் வேளாண் பட்ஜெட்டே பரவாயில்லை என பதிலளித்து சிரித்தார் இ.பி,.எஸ். இடம் : தலைமை செயலகம், சென்னை

20 Feb 2024

காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

20 Feb 2024

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலின் மாசி பிரம்மோற்சவம் ஆறாம் நாளில், உற்சவர் சந்திரசேகரர், யானை வாகனத்தில் எழுந்தருளினார்.

20 Feb 2024

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரசார நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

20 Feb 2024

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர்.

20 Feb 2024

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவியர்கள். இடம். ஸ்ரீ நிவாசா பப்ளிக் பள்ளி, உடுமலை கணபதிபாளையம்.

20 Feb 2024

வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு பச்சை துண்டு அணிந்து சட்டசபை கூட்டத்திற்கு வந்த பா.ம.க வினர்

20 Feb 2024

இறால்களை பிடிக்க படகுகளில் ஒரே இடத்தில் வலையுடன் குவிந்துள்ள மீனவர்கள்.இடம் : திருவான்மியூர்.

20 Feb 2024

பழநி பைபாஸ் ரோடு அருகே கண்ணுக்கு குளிர்ச்சியூட்டு வகையில் பசுமையாக காட்சியளிக்கும் நெல்வயல்கள்.

20 Feb 2024

கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் காட்சியளிக்கும் எலியட்ஸ் கடற்கரை. இடம்: பெசன்ட் நகர்.

20 Feb 2024

கோவை நீலாம்பூர் பி.எஸ்.ஜி., ஐ டெக் வளாகத்தில் அமெரிக்க உயர்கல்வி கண்காட்சி நேற்று நடந்தது.

19 Feb 2024

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிந்தலகுப்பம் கிராமத்தில் முறையான பராமரிப்பின்றி பொலிவு இழந்து காணப்படும் பூங்கா

19 Feb 2024

ஊட்டி தோட்டக்கலைக்துறை வளாகத்திலுள்ள , நர்சரியில் விற்பனைக்கு தயார் படுத்தப்படும் மலர்செடிகள்.

19 Feb 2024

கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 11 வருடங்களாக தங்கியுள்ள அமெரிக்கா நாட்டை சேர்ந்த பெண்மணி வாஞ்சனையுடன் தெருநாய் குட்டிகளுக்கு உணவளிக்கிறார் .

19 Feb 2024

ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் கோவையில் துவங்கபடவுள்ள நடமாடும் மருத்துவ வாகனம், கோவை போத்தனூர் சத்ய சாய் நகரிலுள்ள சேவா மந்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

19 Feb 2024

பூக்களோடு சேர்த்து கட்டுவதற்க்காக மஞ்சள் பூ அரளி இலைகளை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.இடம். உடுமலை

19 Feb 2024

வெயிலின் தாக்கம். இடம்: பொள்ளாச்சி, பஸ் ஸ்டாண்ட் அருகே .

19 Feb 2024

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பன்னடுக்கு கட்டடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம் : தேனாம்பேட்டை, சென்னை

19 Feb 2024

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் சாலையோரம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள். இடம்: திருநெல்வேலி.

19 Feb 2024

கோவை வடகோவை ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள கோதுமை முட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு குடோனுக்கு அனுப்பப்பட்டன.

19 Feb 2024

கடற்கரை ஓரங்களில் சில நேரங்களில் அதிக அளவில் வந்து குவியும் இறால்களை பிடிக்க படகுகளில் ஒரே இடத்தில் வலையுடன் குவிந்துள்ள மீனவர்கள். இடம் : திருவான்மியூர்.

19 Feb 2024

கோவை துணி வணிகர் பள்ளியில் 2 மாணவ, மாணவிகளுக்கான இயற்பியல் செய்முறை தேர்வு நடந்தது.

19 Feb 2024

தேனி கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

19 Feb 2024

கடலூர் கரையேறவிட்ட குப்பத்தில் சாலை அமைக்கும் பணியை மேயர் சுந்தரி ராஜா துவக்கி வைத்தார்.

 
Advertisement