Load Image
Advertisement

இன்றைய போட்டோ

05 Oct 2023

சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி மூடு கால்வாய் வழியாக பள்ளிக்கரனை சதுப்பு நிலம் சென்றடைகிறது.இடம் : பள்ளிக்கரனை.

05 Oct 2023

திருப்பூரில், ஸ்ரீபாலக்ருஷ்ணானந்த மஹா சமஸ்தானம், ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் , பல்லடம் தோர காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

05 Oct 2023

சீனா - ஹாங்சோ நகரில்நடந்து வரும் 19 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடிய தமிழ் நாட்டு வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர் அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

04 Oct 2023

கோவை அரசு கலைக்கல்லூரியில் திறப்பு விழா கண்டும் இதுவரை பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாத புதிய கட்டிடம்.

04 Oct 2023

விழுப்புரம் அடுத்த நண்ணாட்டம் பாளையம் கிருபாலயா இல்லத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆனை குழு சார்பில் மூத்த குடிமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி தலைவர் பூர்ணிமா பேசினார் அருகில் நீதிபதிகள்.

04 Oct 2023

சிவகங்கை வாரச்சந்தை ரோடு அம்மா உணவகம் அருகே மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

04 Oct 2023

இருபுறமும் பசுமையான மரங்கள் வாகன ஓட்டிகளுக்கு நிழல் குடையாய் நிமிர்ந்து நிற்கிறது. இடம்: திண்டுக்கல்- சிறுமலை ரோடு.

04 Oct 2023

ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள்.

04 Oct 2023

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நடந்த அண்ணா பல்கலை மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்.

04 Oct 2023

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம்.அமைந்தகரை

04 Oct 2023

தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் சொட்டுநீர் பாசனத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

04 Oct 2023

தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தில் சொட்டுநீர் பாசனத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

04 Oct 2023

கடலூர் தலைமை நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

04 Oct 2023

கோவை ஒண்டிபுதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலா உற்சவத்தில் வெள்ளலூர் எல் ஜி . பள்ளி மாணவி கார்த்திகா வீனை வாசித்தார்.

04 Oct 2023

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், பத்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.

04 Oct 2023

பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இடம்: பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு.

04 Oct 2023

பொதுப்பணித்துறை சார்பில் அடையாறு ஆற்றின் கரை ஓரங்களில் தூர்வாரி கரையை அகலப்படுத்தி முகத்துவாரம் வரை நீட்டிக்கும் பணி நடந்து வருகிறது.இடம் : ஆர்.எ.புரம்.

04 Oct 2023

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம்.அமைந்தகரை

04 Oct 2023

பூத்து குலுங்கும் சாமந்தி பூக்கள் : இடம் : விழுப்புரம் அடுத்த கரடிப்பாக்கம்.

04 Oct 2023

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவியர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றனர்.

04 Oct 2023

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

04 Oct 2023

ஊட்டி எச்.பி. எப்., பகுதியிலுள்ள , வரவேற்பு பூங்காவில் உள்ள , தோடர் பழங்குடியினர் குடில் மற்றும் உருவங்கள்.

04 Oct 2023

திருப்பூரில் 50வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்த குமரன் ரோடு பாப்பீஸ் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசினார். சங்க தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர்.

04 Oct 2023

புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

03 Oct 2023

விழுப்புரம் சங்கர மடம் அருகே உள்ள சங்கரா ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிசத்தின் மாநில அமைப்பு செயலாளர் ராமன் புத்தகத்தை வெளியிட மாவட்ட தலைவர் ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

03 Oct 2023

மாலைப்பொழுதில் சூரியன் அஸ்தமனம் ஆகும் ரம்யமான காட்சி இடம் விழுப்புரம் வழுதரெட்டி தொழிற்சாலை

03 Oct 2023

திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

03 Oct 2023

தனியார் கல்லூரி அருகில் உள்ள மாட்டுப் பண்ணையில் இருந்து கழிவுகள் விதிகளை மீறி கல்லூரி கிணற்றில் மற்றும் அடையாறு ஆற்றிலும் விடப்படுகிறது.இடம் : அடையாறு.

03 Oct 2023

புதுச்சேரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு நவராத்திரி கொலுவில் வைப்பதற்காக பொம்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

03 Oct 2023

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை பூம்புகார் விற்பனையகத்தில், வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகளை பார்வையிடும் பெண்கள். இடம் : அண்ணாசாலை.

03 Oct 2023

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை பூம்புகார் விற்பனையகத்தில், வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகளை பார்வையிடும் பெண்கள். இடம் : அண்ணாசாலை.

03 Oct 2023

தொடர் விடுமுறை முடித்து சென்னை திரும்பியவர்களால் நேற்று தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாநகர பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் இடம் : தாம்பரம்

03 Oct 2023

திருநெல்வேலி மாவட்டம் கரம்பை பகுதியில் பூத்து குலுங்கும் சாமந்தி பூக்கள்.

03 Oct 2023

திருநெல்வேலி மாவட்டம் அபிசேகப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீரை தேடி சுற்றி திரியும் புள்ளி மான்கள்.

03 Oct 2023

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரியில், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

03 Oct 2023

தூய்மை பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டார். இடம்: கோவை, பீளமேடு.

03 Oct 2023

குஜராத் மாநிலம் ஆமதாபாத் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான அடல் பிரிட்ஜ் நடைபாதத்தில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கண்டு ரசித்தனர்

03 Oct 2023

விழுப்புரம் அடுத்த அயூர் அகரம் பம்பை ஆற்றில் சாத்தனூர் டேமில் இருந்து தண்ணீர் செல்கிறது

03 Oct 2023

விழுப்புரம் அடுத்த கண்டம்பக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வசந்தகுமார்,முருகையன், தமிழரசன், மாதேஷ், கணேசன் நாட்ரு வெடிகுண்டு வீசிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

03 Oct 2023

முறையான பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கும் ஶ்ரீ கன்னிமூல சங்கீத சக்தி விநாயகர் கோவில் குளம்.இடம் : ஆதம்பாக்கம்

03 Oct 2023

விடுமுறை நாள் என்பதால், சென்னை கோயம்பேடு - திருமங்கலம் 100 அடி சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வருவதாலும் , மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

03 Oct 2023

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் நெய்தல் புத்தக கண்காட்சியில் நடந்த கருத்தரங்கில் முனைவர் இறையன்பு பேசினார்.

02 Oct 2023

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில்,சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

02 Oct 2023

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி முன்னாள் மாணவர்களின் 12வது ஆண்டு குடும்ப சந்திப்பு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர்.

02 Oct 2023

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் பகுதியில் வயல்களுக்கு நடுவே ஓடும் ஓடை தண்ணீரில் குடும்பத்தினருடன் உற்சாக குளியல் போடும் சிறுமி.

02 Oct 2023

வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன்சபாரி துவக்கிவைக்கப்பட்டன.

02 Oct 2023

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த பயணிகளின் கூட்டம். இடம்:கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம்

02 Oct 2023

நவராத்திரியை பண்டிகையை முன்னிட்டு, சென்னை குறளகத்தில் துவக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகளை பார்வையிடும் பெண்கள்

02 Oct 2023

தொடர் விடுமுறை என்பதால் திருப்பூர், பார்க்கில் கூட்டம் களைகட்டியது.

02 Oct 2023

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் பகுதியில் வயல்களுக்கு நடுவே ஓடும் ஓடை தண்ணீரில் குடும்பத்தினருடன் உற்சாக குளியல் போடும் சிறுமி.

02 Oct 2023

தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இடம் : தாம்பரம் .

02 Oct 2023

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று விஞ்ஞானிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இடம் : கோட்டூர்புரம்.

02 Oct 2023

திருப்பூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பல்லடம் ரோடு, வித்யாலயத்தில் உள்ள கதர் கிராம தொழில் சங்க வளாகத்தில் ராட்டை சுற்ற கற்றுக்கொண்ட சிறுமி.

02 Oct 2023

பைபாஸ் ரோட்டை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். இடம்: உக்கடம், கோவை.

02 Oct 2023

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை குட்டைதிடலில் உள்ள காந்தி சிலைக்கு பா.ஜ., தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

02 Oct 2023

ஊட்டியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு , கலெக்டர் அருணா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

02 Oct 2023

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் நெய்தல் புத்தக கண்காட்சியொட்டி கடற்கரையில் பேராஷூட் நிகழ்ச்சி நடந்தது.

02 Oct 2023

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் நெய்தல் புத்தக கண்காட்சியை காண குவிந்த பொதுமக்கள்.

02 Oct 2023

தினமலர் செய்தி எதிரொளியால் திண்டிவனம் அடுத்த தீவனூர் ரவுண்டானாவில் ஐ மாஸ் விளக்கு இல்லாததால் இரவில் செல்லும் வாகனங்களுக்கு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

02 Oct 2023

சென்னை மயிலாப்பூரில் இராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏ.வி.எம் அறக்கட்டளை இணைந்து நடத்திய, 56வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்- மகாத்மா காந்தி விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார். உடன் இடமிருந்து வலம் - சிவசக்தி வடிவேல், சிற்பி பாலசுப்பிரமணியன், இராமலிங்கர் பணிமன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்.

02 Oct 2023

மேற்குத்தொடர்ச்சி மலைகள் சூழ பச்சைபசேலென கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் நெற்பயிர்கள். இடம் : தேனி மாவட்டம் சீலையம்பட்டி - குச்சனூர் ரோடு.

02 Oct 2023

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் நெய்தல் புத்தக கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளை பார்வையிட்ட குவிந்த பொதுமக்கள்.

02 Oct 2023

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் மந்தகதியில் நடப்பதால் வாகனங்கள் செல்லும் போது ஒரே புழுதி பறக்கும் அவலம். இடம் : விழுப்புரம் நகராட்சி முன்பு.

01 Oct 2023

உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 3ம் பிரகாரத்தில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.

01 Oct 2023

இராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏ.வி.எம் அறக்கட்டளை இணைந்து நடத்திய, 56வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்- மகாத்மா காந்தி விழா நடந்தது. இதில் ஓம் சக்தி இதழ் நடத்திய மாரியம்மாள் மகாலிங்கம் நினைவு குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் பரிசுகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - சிவசக்தி வடிவேல், சிற்பி பாலசுப்பிரமணியன், இராமலிங்கர் பணிமன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். இடம் : மயிலாப்பூர், சென்னை

01 Oct 2023

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தூய்மை பிரச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வந்தே பாரத் ரயிலை 14 நிமிடங்களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.இடம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.

01 Oct 2023

அடிப்படை வசதி இன்றி குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள்.இடம்:சென்னை கோட்டை அன்னை சத்யா நகர்.

01 Oct 2023

7ஆம் நாளாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள். இடம் : நுங்கம்பாக்கம்

01 Oct 2023

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சாலையோர பூங்காவில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களால் ஆன மீன் உருவம். இடம் : விமான நிலையம் அருகில்.

01 Oct 2023

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சாலையோர பூங்காவில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களால் ஆன மீன் உருவம்.இடம் : விமான நிலையம் அருகில்.

01 Oct 2023

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்

01 Oct 2023

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சாலையோர பூங்காவில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள வணக்கம் சென்னை என்ற போர்டு பொதுமக்களை கவர்கிறது.இடம் : விமான நிலையம் அருகில்.

01 Oct 2023

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.

01 Oct 2023

தூய்மை இந்தியா திட்டத்தில், திருப்பூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவிகள்.

01 Oct 2023

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள் கடற்கரையில் சூரிய தரிசனத்தை ரசித்தனர்.

01 Oct 2023

கோவை சிங்காநல்லூர் டி.என்.ஜி.ஆர்., பள்ளியில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் ஹேண்ட்பால் போட்டியில் திருச்சி, சேலம் அணிகள் மோதின.

01 Oct 2023

கோவை சிங்காநல்லூர் டி.என்.ஜி.ஆர்., பள்ளியில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் ஹேண்ட்பால் போட்டியில் திருச்சி, சேலம் அணிகள் மோதின.

01 Oct 2023

தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வயல்களில் சாய்ந்துள்ள நெற்கதிர்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

01 Oct 2023

ஞாயிற்றுக்கிழமையையொட்டி கடலூர் முதுநகர் மீன் பிடி துறைமுகத்தில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர்.

01 Oct 2023

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடற்கரையில் நடந்த உலக சுற்றுலா தின விழாவில் மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தது.

01 Oct 2023

புதுச்சேரியில் மூன்று நாள் தொடர் விடுமுறை காரணமாக கடற்கரை யில் வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஒன்று கூடினர்.

01 Oct 2023

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடற்கரையில் நடந்த உலக சுற்றுலா தின விழாவில் பாரம்பரிய சத்தான சமையல் போட்டி நடந்தது.

01 Oct 2023

கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி தேவஸ்தானம் சார்பில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம், சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார்.

30 Sep 2023

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்| ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார்.

30 Sep 2023

புரட்டாசி சனிக்கிழம்மையை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், சுவாமி.

30 Sep 2023

சாரல் மழை பெய்ததால் வானவில் கம்பீரமாக காட்சியளிப்பது. இடம் கடலூர்.

30 Sep 2023

தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஒரு பகுதியான என்.சி.சி உடான் என்ற அமைப்பு சார்பில், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் கதையை வெளிப்படுத்தும் ஆபரேஷன் விஜய் - 1971 எனும் மேடை நாடகம் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ரவி கலந்துகொண்டு , முன்னாள் ராணுவ கேப்டன் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் கர்னல் கிருஷ்ணசாமி ஆகியோரை கவுரவித்தார் உடன் இடதுபுறம் என்.சி.சி உடான் தலைவர் லக்ஷ்மணன் குமார்.இடம் : வேளச்சேரி.

30 Sep 2023

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பாக இன்று பசு ஒன்று தானாக பால் சொரிந்தது. இதனை பார்த்த பக்தர்கள் கைகளில் ஏந்தி அருந்தினர்.சிலர் பாட்டில்களிலும் டம்ளர்களிலும் பிடித்தனர்...

30 Sep 2023

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

30 Sep 2023

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் திருவேட்ட அழகு அய்யனார் மற்றும் சோணையா சுவாமி கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு பக்தர்கள் குதிரை தூக்கி வந்தனர்.

30 Sep 2023

தேனி மாவட்டம் வைகை அணையில் நீர்வரத்து குறைவால் தென்பட்ட பாறையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் நீர் காகங்கள்.

30 Sep 2023

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் வரதராஜ பெருமாள் கோவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

30 Sep 2023

புதுச்சேரி தலைமை காவல் அலுவலகத்தில் போக்குவரத்து எஸ்.பி., மாறன் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்தது.

30 Sep 2023

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பார்வையற்றோருக்கு மாநில அளவிலான ஆறாவது கைப்பந்து போட்டியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துவக்கி வைத்தார்.

30 Sep 2023

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் மயக்கமடைந்ததால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

30 Sep 2023

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசபெருமாள் கோவிலில் வரிசையில் நிற்கும் பக்தர்கள்.

30 Sep 2023

விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

30 Sep 2023

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள்.

30 Sep 2023

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் நடைபெறும் ஆயுஷ்மான் பவா திட்டத்தில் பங்கேற்றுள்ள மருத்துவ அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவ அதிகாரிகள்.

30 Sep 2023

ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்கான மலர்காட்சியை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

 
Advertisement