இன்றைய போட்டோ
29 May 2023
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ள பகுதிக்குள் செல்ல பத்திரிக்கையாளர், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கபட்டு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
29 May 2023
சென்னை, ராயபுரம், அண்ணா பூங்காவில் பிரமாண்ட நுழைவாயில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
29 May 2023
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடந்த சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் வன உயிரியல் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் பேசினார் அருகில் ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், பேராசிரியர் ராமகிருஷ்ணன்.
29 May 2023
தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் பாரத தேசத்தின் புண்ணிய நதிகள் என்ற தலைப்பில் சரஸ்வதி நதி குறித்து கலைமகள் இதழின் ஆசிரியர் கிழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினார்.இடம்: ராயப்பேட்டை
28 May 2023
விவேக பாரதி அமைப்பின் சார்பில் ஆர். பி. வி.எஸ் மணியன் எழுதிய பாரதி யார் ? தெரியாத புது தகவல்கள் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது இதில் இடமிருந்து விவேக பாரதி ஒருங்கிணைப்பாளர் சந்திரமௌலி, நூலை வெளியிட்ட தனியார் நிறுவன இயக்குனர் ரவி சங்கர், முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சாரதா மானு அறக்கட்டளை நிறுவனர் ஶ்ரீமதி மதுமதி நாராயணன் மற்றும் விவேக பாரதி செயலர் மங்கையர்க்கரசி.இடம் : தி நகர்.
28 May 2023
திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு தெய்வீக பாடல் இசை நிகழ்ச்சி நடந்தது.
28 May 2023
விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு உற்சவர் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்
28 May 2023
காலையில் சுட்டெரித்து மாலையில் அழகாக மறையும் கதிரவனை பார்த்து ரசிக்கும் இளைஞர்கள். இடம் : அடையாறு.
28 May 2023
கும்கியுடன்...செல்பி... :தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்க கொண்டு வரப்பட்டு ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த கும்கி யானையுடன் செல்பி எடுத்த தம்பதி.
28 May 2023
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ சேவைகள் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பரமணியன் திறந்து வைத்தார். அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி சுப்பராயன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
28 May 2023
சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த வட மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளை
28 May 2023
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்க கொண்டு வரப்பட்டுள்ள அரிசி ராஜா (எ) முத்து கும்கி யானை .
28 May 2023
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட நான்கு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
28 May 2023
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் சஞ்சய் குமார் கங்கபூர்வாலாவிற்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இடம் : கிண்டி.
28 May 2023
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிப்பதற்காக கும்கி யானை கொண்டு வரவழைக்கப்பட்டுள்ளது.
28 May 2023
திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.
28 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
28 May 2023
ராமேஸ்வரத்தில், இந்திய மருத்துவர் சங்கம் தமிழக கிளை சார்பில் நடந்த மருத்துவர்கள் கருத்தாய்வு கூட்டத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
27 May 2023
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்தார்.
27 May 2023
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில், பழங்களால் பல அலங்காரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
27 May 2023
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோரம் உள்ள குழாயில் விழும் தண்ணீரில் உற்சாக குளியல் போடும் சிறுவர்கள்.இடம்: குப்பக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.
27 May 2023
தேனி மாவட்டம் கம்பம் காந்திநகர் காலனி அருகே முகாமிட்டுள்ள காட்டு யானை அரிசி கொம்பனை பிடிக்க கம்பம் - கூடலூர் புறவழிச்சாலையில் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டு ரோட்டின் நடுவே கனரக வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.
27 May 2023
ஊட்டி தாவரவியல் பூங்கா, இத்தாலியன் பார்க்கில் பூக்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
27 May 2023
குன்னூர் சிம்ஸ்பார்க்கில், பழக்கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். அப்போது எம்.பி.,ராஜா மற்றும் கலெக்டர் அம்ரித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
27 May 2023
வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் குடைப்பிடித்தபடி கடலின் அழகை ரசித்தனர்.
27 May 2023
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அருகில் மாநகராட்சி மேயர் சுந்தரி, ராஜா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி.
27 May 2023
திருப்பூர், கே.எஸ்.சி., பள்ளியில் மாவட்ட அளவிலான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
27 May 2023
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து. திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் அவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.
27 May 2023
குன்னூர் சிம்ஸ்பார்க்கில், பழக்கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கிவைத்து, பழ அலங்காரங்களை பார்வையிட்டார் , உடன் எம்.பி.,ராஜா மற்றும் கலெக்டர் அம்ரித்.
27 May 2023
அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, விடுப்பு தொகை, பணிக்கொடை போன்ற பல்வேறு பணப் பலன்களுக்குரிய காசோலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார் உடன் இடமிருந்து தி.மு.க எம். பி சண்முகம், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் பணீந்திரரெட்டி, அமைச்சர் சிவசங்கர்,மயிலாப்பூர் எம்.எல். ஏ வேலு.இடம் : ஆர். ஏ புரம்.
27 May 2023
திருவள்ளூர் ஜே என் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் காட்சி பொருளாக உள்ளது
27 May 2023
சென்னை- திருச்சி பைபாஸ் சாலையில் திண்டிவனம் அடுத்த நத்தமேடு பகுதியில் சாலை நடுவில் தடுப்பு கட்டையை உடைத்து இரு சக்கர வாகனங்களில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.
27 May 2023
குன்னூர் சிம்ஸ்பார்க்கில், பழக்கண்காட்சியில், பழவகைகளை எம்.பி. ராஜா ,சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டனர், உடன் கலெக்டர் அம்ரித் .
27 May 2023
சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் துவங்கப்பட்டுள்ள கோடைக் கால கைத்தறி ஆடைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஆடைகள்.இடம் : அண்ணாசாலை.
27 May 2023
திண்டிவனம் அடுத்த சலாவதியில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
27 May 2023
திண்டிவனம் தனியார் ஓட்டலில் நடந்த விழுப்புரம் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ அர்ஜுனன் பேசினார்.
27 May 2023
கோடை வெயில் வெப்பத்தின் தாக்கத்தால் சாலையில் செல்வோர் குடை பிடித்த படியே செல்கின்றனர். இடம் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை.
27 May 2023
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியில் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட காட்டு மாடு, அணில், வரிக்குதிரை மயில்.
27 May 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வருமானவரித்துறை சோதனையில் ஏற்பட்ட சர்ச்சையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் தெலுங்கானா மாநிலம் சி ஆர் பி எஃப் போலீசும் கரூர் போலீஸ் எஸ் பி ஆபிஸ்க்கு வந்துள்ளனர்.
26 May 2023
கோவில் சிலைகள் சேதப்படுத்தியதை கண்டித்து. அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் முன் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
26 May 2023
அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சுட்டேரிக்கும் வெயிலால் சாலையில் வாகனங்கள் கடந்து செல்லும் அனல் காற்றுடன் தெரியும் கானல் நீர். இடம்: ரிங் ரோடு, திருவண்ணாமலை.
26 May 2023
உடுமலை மடத்துகுளம் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் குடிநீர்க்கான உறைக்கிணறு வெளியே தெரிகிறது.
26 May 2023
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
26 May 2023
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜி.பி.எஸ்.,பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
26 May 2023
தினமலர் செய்தி எதிரொலியால் கடலூர் மீன் அருங்காட்சியகத்தில் குவிந்திருந்த கொரோனா ஸ்வாப் டெஸ்ட் கழிவுகள் அகற்றப்பட்டது
26 May 2023
புதிய வகை வந்தே பாரத் ரயில்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்த ஐ.சி.எப் பொது மேலாளர் மால்யா. உடன் செயலர் பாபு, சென்னை பத்திரிகை அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை. இடம் : ஐ.சி.எப், சென்னை
26 May 2023
கடலூர் மஞ்சகுப்பம் சி.இ.ஓ வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுற்றுத்திரியும் மாடுகள் .
26 May 2023
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை ஐ.சி.எப் அருங்காட்சியகத்தில் உள்ள சிறிய அளவிலான மாதிரி ரயில்களை கண்டு மகிழ்ந்த பொதுமக்கள்..
26 May 2023
அரசு கேபிள் டிவி கேபிள்களை துண்டித்த, குடிசை மாற்று வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த கேபிள் ஆப்ரேட்டர்கள்.
26 May 2023
சென்னையின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆனந்தமாக குளியலிடும் சிறுவர்கள்.இடம்: : காசிமேடு.
26 May 2023
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அயனாவரத்தில் பஸ் நிலையத்துடன் மெட்ரோ இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
26 May 2023
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மண்டல அளவிலான, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இடம்: தஞ்சாவூர் ஜிபீட்டர் தியேட்டர்.
26 May 2023
கோவை வேளாண் பல்கலையில் நடந்த சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு நிறைவு நாள் விழாவை தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து வேளாண் பல்கலை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கவர்னர் முன்னிலையில் மாற்றிக் கொள்ளப்பட்டது. அருகில் (இடமிருந்து) இயக்குனர் ரவிகேசவன், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன் உள்ளிட்டோர்.
26 May 2023
சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலை, அகர்வால் மருத்துவமனை எதிரில் உள்ளசாலையில் திடீரென ராட்சத பள்ளம் விழுந்ததில் சாலை மூடப்பட்டு, ஜே.சி.பி எந்திரம் மூலம் இரும்பிலான தடுப்புகள்போடப்பட்டு பள்ளம் மூடப்பட்டது.
26 May 2023
கோவை வேளாண் பல்கலையில் நடந்த சர்வதேச சிறுதானிய கருத்தரங்கில் கவர்னர் ரவி பேசினார். அருகில் (இடமிருந்து) பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன் உள்ளிட்டோர்.
26 May 2023
புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள இளநீர் சாப்பிட்டு சூட்டை தணித்துக் கொள் என குழந்தையிடம் பாசமாக கூறும் தாய்.
26 May 2023
சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதத்தில் மாநிலச் செயலாளர் கண்ணன் பேசினார்.
26 May 2023
புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது.
26 May 2023
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பூங்குளம் ஊராட்சி சின்னமாங்கோடு குப்பம் மீனவர் கிராமத்தில் 100 நாள் வேலை நடந்து வருகிறது இந்த வேலைக்கான ஊதியம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 270 ரூபாய் தர வேண்டும் ஆனால் அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் 40 ரூபாய் மட்டும் தருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
26 May 2023
சென்னை திருவான்மியூரில் உள்ள இம்ப்காப்ஸ் நிறுவனத்தில் பனியாளர்களுக்கு பனிநியமண ஆனையை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் தலைவர் கண்ணன் உள்ளனர். இடம் : திருவான்மியூர்.
26 May 2023
தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கான பாட புத்தகங்களை, தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து, லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்படுகிறது.
26 May 2023
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண் போலீஸ் டிரைவர்கள் வாகனத்தை டி.ஜி.பி., சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
26 May 2023
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கண்ணீர் புகை கொண்டு வீசும் ட்ரோன் பயன்படுத்தி கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
26 May 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வந்து போலீசாரிடம் நடந்ததைக் கூறி மீண்டும் சோதனைக்கு புறப்பட்டனர்.
26 May 2023
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவத்தின் 2ம் நாளான நேற்று அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
25 May 2023
தேனி ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது ஓட்டுநர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
25 May 2023
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!தஞ்சாவூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. அப்போது, பா.ஜ.க.,வை சேர்ந்த கவுன்சிலர் ஜெய் சதீஷ்க்கு பிறந்தநாள் என தெரிந்தது. உடனே மேயர் ராமநாதன் தலைமையில் சக கவுன்சிலர்கள் முன்னிலையில், அவருக்கு மேடையிலேயே கேக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
25 May 2023
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்து நல்லாட்டூர் ஊராட்சிக்கு குடிநீர் குழாய் புதைக்க ஜேசிபி மூலம் பணிகள் நடக்கிறது இடம் நல்லாட்டூர்.
25 May 2023
பாதி பணிகள் முடிவடைந்து குடியிருப்பு பகுதிகள் வரை சென்று, அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் நிற்கும் இ.சி. ஆர் - ஓ.எம்.ஆர் இணைப்பு சாலை பணிகள்.இடம் : துரைப்பாக்கம்.
25 May 2023
காளையார் கோயில் சொர்ண காளீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவத்திற்காக மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது
25 May 2023
சென்னை புறநகர் பகுதியில்பெய்த மழையால் இரும்புலீயூர் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது
25 May 2023
விழுப்புரம் பாணாம்பட்டு ராகவன்பேட்டையில் ஸ்ரீ முத்தாள் வாழி அம்மன் கோவிலில் சாகைவாத்தல் நிகழ்ச்சி நடந்தது .
25 May 2023
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் உற்சாக குளியல் போடும் ஆட்டு கூட்டம்.இடம்: பொட்டல், திருநெல்வேலி மாவட்டம்.
25 May 2023
அலட்சியம்...ஆபத்து... :தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்த்தேக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள். அணையின் நீர்மட்டம் 52.92. ( மொத்த உயரம் 71 அடி)
25 May 2023
மாதவரம் - சிப்காட் மெட்ரோ வழித்தடத்தில் துரைபக்கம் - ரெடியல் ரோடு சந்திப்பு அருகில் மேம்பால மெட்ரோ பாதைக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.இடம் : துரைப்பாக்கம்
25 May 2023
கோவை டவுன்ஹால் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடந்து வரும் கோடைகால விற்பனை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள விநாயகர் சிலைகளின் அழகு தோற்றம்
25 May 2023
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தி செளக் மார்க்கெட் கண்காட்சி நடைபெறுகிறது இதில் இடம்பெற்றுள்ள கற்களால் செய்யப்பட்டுள்ள வீட்டு அலங்கார பொருட்கள்.
25 May 2023
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு , வந்த டி.ஜி.பி., சைலேந்தர் பாபுவுடன், செல்பீ எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகள் .
25 May 2023
திறந்த வெளி வாகனத்தில் சென்ற இளைஞர் வெயிலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பலகையை பயன்படுத்தி பயணிக்கும் காட்சி. இடம்: கோவை மேட்டுப்பாளையம் ரோடு.
25 May 2023
ஆழ் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் விசைப்படகில் பயன்படுத்தும் இயந்திரத்தின் ப்ரொபைலர் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இடம். கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகம்.
25 May 2023
விவசாயிகள் அறுவடை செய்த எள் கதிர்களை உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் காய வைக்கும் காட்சி.