Load Image
Advertisement

இன்றைய போட்டோ

29 Mar 2023

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் துவங்கப்பட்டது.

29 Mar 2023

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் இ-சேவை குறித்து பயிற்சி முகாம் நடந்தது.

29 Mar 2023

பொள்ளாச்சியில் அருள் ஜோதி மண்டபத்தில் நடக்கும் சனிப்பெயர்ச்சி பெருவிழாவில், பக்தர்களிடம் நட்சத்திரம், ராசி கேட்டறிந்து, அதற்கேற்ற சனிப்பெயர்ச்சி மந்திரங்கள் சொல்லப்பட்டது.

29 Mar 2023

சென்னை, மெரினா கடற்கரையில் நடந்து வரும் மெட்ரோ பணியின் காரணமாக, இடமாற்றம் செய்யப்பட உள்ள காந்தி சிலையை, வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பில்லர்.

29 Mar 2023

தினமலர் செய்தி எதிரொலி! :

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே திருச்சி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தி பேரிகார்ட் அமைக்கும் பணி நடைபெற்றது.

29 Mar 2023

விழுப்புரம் மாற்று திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்வு அளிப்பதற்கான சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் பழனி துவக்கி வைத்தார்.

29 Mar 2023

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் அலுவலகம் முன்பு ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர் சங்கத்தினர் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

29 Mar 2023

பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிவசூரியன் செந்தில்ராமன்.

29 Mar 2023

இந்த கோடை வெயிலுக்கு குளத்தில் குளிப்பது ஒரு கூடுதல் சுகம் தாங்க என்று எண்ணியபடி இந்த குதிரை குளிக்கிறதோ.? இடம்: பேரூர் பெரியகுளம், கோவை

29 Mar 2023

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சியில் நடந்த ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

29 Mar 2023

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் நடந்த வாழ்க்கை இலக்கியம் மற்றும் கலாசாரம் மீதான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகளின் காட் டீமன் நாடகம் நடந்தது.

29 Mar 2023

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில், வீதி உலா வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பக அம்பாள்.

29 Mar 2023

மருந்தீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவில், சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இடம் : திருவான்மியூர்.

29 Mar 2023

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

29 Mar 2023

இரவில் மின் ஒளியில் ஜொலிக்கும் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில்.

29 Mar 2023

கோடை காலத்தில் கோவை நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. காரமடை அடுத்த பில்லூர் அணையில் கோவை நகருக்கு தண்ணீர் உறிஞ்சப்படும் பம்ப் ஹவுஸில் முதல் வாழ்வு தெரிகிறது.

29 Mar 2023

புதுவரவுகள்: :

தன் குஞ்சுகளை பாதுகாப்புடன் நீந்த கற்றுத் தருகிறதோ இந்த தாய் வாத்து. இடம்: கோவை கிருஷ்ணம்பதி குளம்

29 Mar 2023

திருப்பூர்,சமரச சுத்த சன்மார்க்க சங்க அலுவலகத்தில் நொய்யல் பெருவிழா குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

29 Mar 2023

ராகுல் காந்தி எம்பி பதவியை ரத்து செய்ததை கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தீப்பந்தம் பேரணி நடந்தது.

28 Mar 2023

பாரதிய வித்யா பவன், ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் உறவுச் சுரங்கம் இணைந்து நடத்தும் தமிழ் 36 சங்க இலக்கியங்கள் நிகழ்ச்சியில் மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணனை பாரதிய வித்யா பவன் இயக்குனர் ராமசாமி சிறப்பித்தார் உடன் இடமிருந்து பேராசிரியர் உலகநாயகி,பேச்சாளர் பாரதி கிருஷ்ண குமார், கவிஞர் மின்னூர் சீனிவாசன்,வழக்கறிஞர் ரவி,ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி,காஞ்சிபுரம் சஞ்சீவி ராஜா சுவாமிகள், மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர் லேனா தமிழ்வாணன் மற்றும் சொற்பொழிவாளர் யோகேஷ்வரன்.இடம் : மயிலாப்பூர்.

28 Mar 2023

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று நோன்பு சாட்டும் நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

28 Mar 2023

திருவள்ளூர் சி வி நாயுடு சாலை காமராஜர் சிலை அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

28 Mar 2023

குண்டூர் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு. வேறு இடத்திற்கு செல்லும் குழாயின் கசிவில் குடம் வைத்து உப்பு தண்ணீரை பிடிக்கும் அப்பகுதி பெண்கள்.

28 Mar 2023

அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

28 Mar 2023

பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

28 Mar 2023

மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

28 Mar 2023

பல்வேறு கோரிககைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

28 Mar 2023

கோடை வெயிலில் குறைந்த பவானி ஆறு. கண்களைக் கவரும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம். இடம், மேட்டுப்பாளையம். சமயபுரம் அருகே

28 Mar 2023

புதுச்சேரி மிஷின் வீதி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காலத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கோபுரம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

28 Mar 2023

புதுச்சேரி மிஷின் வீதி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காலத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

28 Mar 2023

சென்னை மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா முதல் நாள் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இடம் : திருவான்மியூர்

28 Mar 2023

சென்னை வடபழனி அருணாச்சலம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்..

28 Mar 2023

சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கட்டாத அரசு பஸ்சை கடலூர் கோர்ட்டில் ஜப்தி செய்யப்பட்டது.

28 Mar 2023

சிவகங்கை அருகே நாலுகோட்டை காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கள்.

28 Mar 2023

சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை பார்வையிட வந்த கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி அரசு பள்ளி மாணவிகள்.

28 Mar 2023

கோரிமேடு அன்னை தெரசா அறிவியல் கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் ஒளி விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவில்,ஐ.ஜி.சந்திரன் ஒளி விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அருகில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி, முதன்மை செவிலிய அதிகாரி டாக்டர் பிரமிளா.

27 Mar 2023

கோரிமேடு அன்னை தெரசா அறிவியல் கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் ஒளி விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவில், விளக்கேற்றி உறுதிமொழி எடுத்த மாணவிகள்.

27 Mar 2023

பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறார் இலக்கியத் திருவிழா துவங்கியது இதில் இடம்பெற்ற மாணவ - மாணவியரின் நடன நிகழ்ச்சி.இடம் : கோட்டூர்புரம்.

27 Mar 2023

திருப்பூர், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியேற்பு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார். அருகில் நிறுவனத் தலைவர் கோபிநாதன், மாநில தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள்.

27 Mar 2023

சென்னை வண்ணாரப்பேட்டை சின்ன சேனியம்மன் அம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

27 Mar 2023

பிரிட்டிஷ் ராயல் நேவீ கடற்படைக் கப்பல், HMS TAMAR, சென்னை துறைமுகம் வந்துள்ளது. நட்பு, நல்லுறவு, கலாச்சாரம், சேவை மற்றும் சுற்றுலா ஆகிய நோக்கத்துடன் ஒரு வாரம் சென்னையில் உள்ளனர். இது குறித்து கருணாலயா தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஓவியங்கள் வரைந்தனர்.இடம்: தண்டையார்பேட்டை.

27 Mar 2023

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கு என வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர் லிங்கம் இன்று கருவறையில் இருந்து எடுத்துவரப்பட்டு உற்சவர் மண்டபத்தில் அபிஷேக ஆராதனை நடந்தது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பங்குனி உத்திர திருவிழாவில் நடக்கும் உற்சவ உடையவர்லிங்க ஆராதனையை பெண்கள் தரிசித்தால் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வார்கள் என்பது ஐதீகம்...

27 Mar 2023

தேனியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் விரிவாக்க கட்டட பணியின் போது இடது ஓரம் மேல்தளம் இடிந்து விழுந்தது.

27 Mar 2023

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நெல் வயலில் நாத்து நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

27 Mar 2023

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கு கழுவூரில் உள்ள குளத்தில் குட்டை போல் தேங்கிய தண்ணீரை தேடி வரும் ஆடுகள்.

27 Mar 2023

சென்னை வடபழனி மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

27 Mar 2023

உடுமலை செங்குளத்தில் படர்ந்து காணப்படும் தாமரை இலைகளில் பிரதிபலிக்கும் மரம்.

27 Mar 2023

வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக தக்காளி பெட்டிகளில் பழங்களை அடுக்கும் தொழிலாளர்கள். இடம்.உடுமலை நகராட்சி சந்தை.

27 Mar 2023

கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிய ராமகிருஷ்ணா மில்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர்.

27 Mar 2023

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

27 Mar 2023

சென்னை ஶ்ரீ ஸித்தி புத்தி ஸமேத ஶ்ரீ கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இடம்: ராஜா அண்ணாமலை புரம்.

27 Mar 2023

உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்.

27 Mar 2023

உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

27 Mar 2023

2023 - 24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

27 Mar 2023

காங்கிரஸ் எம்.பி., ராகுல் தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து பாதகையை ஏந்திவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.

27 Mar 2023

விழுப்புரம் அடுத்த கானை பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது .

27 Mar 2023

கோடையின் துவக்கத்தில் இலையுதிர்ந்து நிற்கும் மரங்கள். இடம்: கோவை வேளாண் பல்கலை அருகே.

27 Mar 2023

புதுச்சேரி மெரினா கடற்கரையில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

27 Mar 2023

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சென்னை மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்.

27 Mar 2023

சென்னை எண்ணூர் முகத்துவார பகுதியில் மணலை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

27 Mar 2023

வெயிலின் தாக்கத்தால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் புதுச்சேரி கடற்கரை சாலை இடம் : காந்தி சிலை.

27 Mar 2023

படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்,முருகர் , நந்தி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன.இடம்: கே.வி.கே.குப்பம், திருவொற்றியூர்.

27 Mar 2023

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் அதிகாலையில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

26 Mar 2023

தெப்பத்தில் தவழும் ஒளி :

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட மின்னொளி நீரில் தவழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

26 Mar 2023

உடுமலையில் பெய்த மழைக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வாகனகள்.

26 Mar 2023

காரமடை அருகே சாலையோரில் நிழற்குடை மோசமான நிலையில் இருக்கிறது. ஆபத்தை உணராமல் கிராம மக்கள் இளைப்பாறும் முதியோர்கள்.

26 Mar 2023

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் அருகே உருவாகியுள்ள மணல் திட்டு மாலை வேளையில் ரம்மியமாய் காட்சி அளிக்கிறது.இடம்: சீனிவாசபுரம், சென்னை.

26 Mar 2023

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் , நல்லாமூர் கோ.பெரியண்ணன் முப்பெரும் விழா நடந்தது. இதில் மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனுக்கு, பதிப்புச் சேவை செம்மல் விருதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - பபாசி துணை தலைவர் மயிலவேலன், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நல்லாமூர் கோ.பெரியண்ணன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் உள்ளிட்டோர். இடம் : தேவநேய பாவாணர் நூலக வளாகம்,அண்ணாசாலை, சென்னை

26 Mar 2023

சென்னை எண்ணூர் முகத்துவார பகுதியில் மணலை, அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

26 Mar 2023

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.

26 Mar 2023

எம்.பி., பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் காங்., கட்சியினர் கண்ணில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

26 Mar 2023

திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் பகுதியில் விளைநிலத்தில் இரை தேடி குவிந்த கொக்குகள்.

26 Mar 2023

திருநெல்வேலி மாவட்டம், பனஞ்சாடி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் பூத்துக் குலுங்கும் பூக்கள்.

26 Mar 2023

தலை காயம் குறித்து, கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

26 Mar 2023

எல்விஎம்3-எம்3 ஒன் வெப் இந்தியா -2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை கான குவிந்த பொதுமக்கள். இடம் : ஶ்ரீ ஹரிகோட்டா.

26 Mar 2023

ராகுலின் எம்.பி., பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வடசென்னை கி ழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் சத்தியாகிரகம் போராட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி துரை ராஜ் உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

26 Mar 2023

சிவகங்கையில் நடந்த திமுக பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பெண்கள்.

26 Mar 2023

கோடை சீசன் துவங்கிய நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் இரை தேடி வர துவங்கியுள்ள பிளமிங்கோ எனப்படும் பூ நாரைகள். இடம் : சோழிங்கநல்லூர்.

26 Mar 2023

கடலூர் புதுப்பாளையம் லோகநாயகியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

26 Mar 2023

மதுரையில் தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில் நடந்த விரிந்த சிறகுகள், இதயப்பூக்கள் புத்தக வெளியீட்டு விழாவில், தினமலர் இணை இயக்குனர். ஆர்.லட்சுமிபதி, டாக்டர் மீனாட்சிசுந்தரம் எழுதிய விரிந்த சிறகுகள் புத்தகத்தை வெளியிட்டார்.

26 Mar 2023

திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தின்போது எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.

26 Mar 2023

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி அணையின் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.

26 Mar 2023

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பெட் எக்ஸ்போ என்ற இரண்டு கண்காட்சி துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள மலை ஓணானை ஆர்வமுடன் கையில் வைத்து பார்க்கும் பெண்.

26 Mar 2023

தஞ்சாவூரில், செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், குஜராத் மாநிலம் நீர்வளம் மற்றும் உணவு, சிவில் சப்ளை நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர், ஸ்ரீ குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா பேசினார்.

26 Mar 2023

திண்டுக்கல் நடந்த சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் சார்பில் நடந்த விழாவில் குஜராத் அமைச்சர் குபேர்பாய் தின்டோர் கோலாட்டம் ஆடினார்.

26 Mar 2023

புதுச்சேரி திண்டிவனம் பைபாஸ் சாலையில் கிளியனூர் அருகே மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

26 Mar 2023

கோவை அவிநாசி ரோடு லீல் பள்ளிக்கூடத்தின் வருடாந்திர ஆர்டத்தான் 2023 நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை கண்காட்சி படுத்தினர்.

26 Mar 2023

கொடைக்கானல் அடுக்கம் ரோடு செய்தி படம் மட்டும். கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் ரோட்டில் மண்சரிவு, பாறைகள் அகற்றாமல் உள்ளது.

25 Mar 2023

கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் ரோட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்.

25 Mar 2023

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு சம உரிமை நீதி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு மகளிர் தினம் திறந்தவெளி கருத்தரங்கம் நடந்தது.

25 Mar 2023

பத்மஶ்ரீ விருது பெற்ற பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த சேவைகள் மற்றும் சாதனைகளுக்காக பாராட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் பேராசிரியர் மோகன் காமேஸ்வரனுக்கு பரிசினை வழங்கி பாராட்டிய தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் மனைவி இந்திரா, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தமிழக கவர்னர் ரவியின் மனைவி லட்சுமி மற்றும் முன்னாள் ஒடிசா கவர்னர் ராஜேந்திரன்.இடம் : கிண்டி.

25 Mar 2023

திருப்பூர், முன்சிபால்டி ரோட்டில் வாகனங்கள் பார்க் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

25 Mar 2023

கோவை பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில் ஆர்.கே., ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடந்த தமிழக பட்ஜெட் குறித்த கருத்து கூட்டத்தில் பா.ஜ., மாநில துணை தலைவர் கனகசபாபதி பேசினார். அருகில் (இடமிருந்து) மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர்.

25 Mar 2023

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சாலையோர மரங்களில் இலைகள் உதிர தொடங்கி வறட்சியாக காணப்படுகிறது. இடம்: பெரிய கோட்டாங்கல், திருவண்ணாமலை

25 Mar 2023

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே பிரதான சாலை மத்தியில் பாதுகாப்பு தடுப்புகள் இன்றி உள்ள மின் விளக்கு கம்பங்களால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

25 Mar 2023

சிவகங்கையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

25 Mar 2023

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்., புரம் வ.உ.சி., வீதியில் இறகு பந்து மைதானத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, இறகு பந்து விளையாடினார்.

25 Mar 2023

கோடைகாலம் துவங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன.

25 Mar 2023

கேலோ இந்தியா மகளிர் தடகள போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 800 மீ ஓட்டத்தில் பங்கேற்ற வீராங்கனையர். இடம்: பெரியமேடு.

25 Mar 2023

ஊட்டி தாவரவியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement