Load Image
Advertisement

இன்றைய போட்டோ

30 Mar 2023

புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் உலக நாடக தினத்தை முன்னிட்டு தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.

30 Mar 2023

விழுப்புரம் நகராட்சி திடலில் புத்தகத் திருவிழா கண்காட்சியில் தினமலர் அரங்கை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

30 Mar 2023

காங்.,முன்னாள் எம்.பி., ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.

30 Mar 2023

திருப்பூர் குமரன் கல்லூரியில், கலையாஞ்சலி 2023 நிகழ்ச்சி நடந்தது. அதில் கைவினைபொருட்கள் போட்டியில் பங்கேற்ற மாணவியர் .

30 Mar 2023

ரோட்டில் தெரிந்த கானல் நீர். இடம். தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி ரிங் ரோடு.

30 Mar 2023

மகாராஷ்டிராவில் நடந்த தேசிய தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மதுரை பாரா தடகள வீரர்கள் .

30 Mar 2023

திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் உள்ள குளத்தின் தண்ணீரில் மலையின் பிம்பங்கள் ரம்மியமாக காட்சியளித்தது.

30 Mar 2023

சென்னை மெரினா, நேப்பியர் பாலம் அருகில் முகத்துவாரம் தூர் வாரும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.

30 Mar 2023

திருப்பூர், மாநகராட்சி முன் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

30 Mar 2023

கோடைகாலம் துவங்கிய நிலையில் திருநெல்வேலி மாவட்டம், குறிச்சியில் விற்பனைக்காக மண் பானைகள் செய்யும் பணி துவங்கியுள்ளது.

30 Mar 2023

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழநி மலைமுருகன் கோயிலுக்கு தீர்த்தக் காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

30 Mar 2023

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

30 Mar 2023

ராம நவமியை முன்னிட்டு, மதுரை மணிநகரம் இஸ்கான் கோயிலில் அலங்காரத்தில் ராதா மதுராபதி.

30 Mar 2023

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் வெயிலில் செடிகள் வாடாமல் இருக்க பந்தல் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

30 Mar 2023

சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக கோவை வந்தது.

30 Mar 2023

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக ஆண்டு விழாவில், சங்காபிஷேகம் நடந்தது.

30 Mar 2023

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி.

30 Mar 2023

அடையாறு ஆற்றில். ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் நீரோட்டம் தடைபட்டு தேங்கியுள்ளது .

30 Mar 2023

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.

30 Mar 2023

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நந்தி வாகனத்தில் வீதி உலா வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பக அம்பாள்.

30 Mar 2023

புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்தில் இருந்து கோயமுத்தூர் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

30 Mar 2023

புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்தில் இருந்து கோயமுத்தூர் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

30 Mar 2023

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை.

30 Mar 2023

வளைவு நெளிவாக வைத்துள்ள கோவை சிறுவானி மெயின் ரோடு செல்வபுரம் சாலை

29 Mar 2023

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு யாக சாலையில் பூர்ணாஹூதி நடந்தது.

29 Mar 2023

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி பட்டறையை தி.மு.க எம்.பி கனிமொழி துவக்கி வைத்து பேசினார். உடன் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர் மற்றும் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை. இடம் : கோயம்பேடு,சென்னை

29 Mar 2023

விருதுநகர் அருகே புதுப்பட்டியில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிட நிலத்தை உழுது போடும் பணியில் ஈடுபடும் விவசாயி.

29 Mar 2023

பாசனத்திற்காக உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் முன்பு பி.ஏ.பி., கால்வாய்யை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுத்தப்படுத்தாததால் நீருடன் சேர்ந்து குப்பைகளும் செல்வதால் விளைநிலங்கள் பாதிப்படைகிறது.

29 Mar 2023

நெடுஞ்சாலை துறையினரால் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் செடிகளில் இருந்து மஞ்சள் நிறப்பூக்கள் பூத்துள்ளதால் ரம்மியமாக காணப்படும் தாம்பரம் - மதுரவாயல் புறவழிசாலை

29 Mar 2023

சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டம் முடிந்து பேருந்துகளில் சென்ற எம்.எல்.ஏக்கள்

29 Mar 2023

புதுச்சேரியில் இராதே அறக்கட்டளை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.

29 Mar 2023

கோடையில் குளிர்ந்த நீர் குடிக்க குழாய் பதிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள மண்பானை. இடம்: திருப்பூர், தாராபுரம் ரோடு.

29 Mar 2023

சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

29 Mar 2023

விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ஊரணியில் இரை தேடி காத்திருக்கும் நாரைகள்.

29 Mar 2023

மாம்பழ சீசன் துவங்கியது. ஆந்திராவில் இருந்து கடலூருக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பங்கனப்பள்ளி மாம்பழம். இடம். கடலூர்.

29 Mar 2023

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள விக்டோரியா ஹால் பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காக இருப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

29 Mar 2023

மழைக்காக காத்திருக்கும் மயில்கள். இடம்: பொள்ளாச்சி.

29 Mar 2023

ஊட்டி தாவரவியல் பூங்காவில், ஊழியர்கள் 7 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

29 Mar 2023

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் துவங்கப்பட்டது.

29 Mar 2023

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் இ-சேவை குறித்து பயிற்சி முகாம் நடந்தது.

29 Mar 2023

பொள்ளாச்சியில் அருள் ஜோதி மண்டபத்தில் நடக்கும் சனிப்பெயர்ச்சி பெருவிழாவில், பக்தர்களிடம் நட்சத்திரம், ராசி கேட்டறிந்து, அதற்கேற்ற சனிப்பெயர்ச்சி மந்திரங்கள் சொல்லப்பட்டது.

29 Mar 2023

சென்னை, மெரினா கடற்கரையில் நடந்து வரும் மெட்ரோ பணியின் காரணமாக, இடமாற்றம் செய்யப்பட உள்ள காந்தி சிலையை, வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பில்லர்.

29 Mar 2023

தினமலர் செய்தி எதிரொலி! :

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே திருச்சி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தி பேரிகார்ட் அமைக்கும் பணி நடைபெற்றது.

29 Mar 2023

விழுப்புரம் மாற்று திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்வு அளிப்பதற்கான சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் பழனி துவக்கி வைத்தார்.

29 Mar 2023

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் அலுவலகம் முன்பு ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர் சங்கத்தினர் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

29 Mar 2023

பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிவசூரியன் செந்தில்ராமன்.

29 Mar 2023

இந்த கோடை வெயிலுக்கு குளத்தில் குளிப்பது ஒரு கூடுதல் சுகம் தாங்க என்று எண்ணியபடி இந்த குதிரை குளிக்கிறதோ.? இடம்: பேரூர் பெரியகுளம், கோவை

29 Mar 2023

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சியில் நடந்த ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

29 Mar 2023

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் நடந்த வாழ்க்கை இலக்கியம் மற்றும் கலாசாரம் மீதான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகளின் காட் டீமன் நாடகம் நடந்தது.

29 Mar 2023

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி சூரிய வட்ட வாகனத்தில், வீதி உலா வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பக அம்பாள்.

29 Mar 2023

மருந்தீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவில், சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இடம் : திருவான்மியூர்.

29 Mar 2023

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

29 Mar 2023

இரவில் மின் ஒளியில் ஜொலிக்கும் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில்.

29 Mar 2023

கோடை காலத்தில் கோவை நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. காரமடை அடுத்த பில்லூர் அணையில் கோவை நகருக்கு தண்ணீர் உறிஞ்சப்படும் பம்ப் ஹவுஸில் முதல் வாழ்வு தெரிகிறது.

29 Mar 2023

புதுவரவுகள்: :

தன் குஞ்சுகளை பாதுகாப்புடன் நீந்த கற்றுத் தருகிறதோ இந்த தாய் வாத்து. இடம்: கோவை கிருஷ்ணம்பதி குளம்

29 Mar 2023

திருப்பூர்,சமரச சுத்த சன்மார்க்க சங்க அலுவலகத்தில் நொய்யல் பெருவிழா குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

29 Mar 2023

ராகுல் காந்தி எம்பி பதவியை ரத்து செய்ததை கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தீப்பந்தம் பேரணி நடந்தது.

28 Mar 2023

பாரதிய வித்யா பவன், ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் உறவுச் சுரங்கம் இணைந்து நடத்தும் தமிழ் 36 சங்க இலக்கியங்கள் நிகழ்ச்சியில் மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணனை பாரதிய வித்யா பவன் இயக்குனர் ராமசாமி சிறப்பித்தார் உடன் இடமிருந்து பேராசிரியர் உலகநாயகி,பேச்சாளர் பாரதி கிருஷ்ண குமார், கவிஞர் மின்னூர் சீனிவாசன்,வழக்கறிஞர் ரவி,ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி,காஞ்சிபுரம் சஞ்சீவி ராஜா சுவாமிகள், மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர் லேனா தமிழ்வாணன் மற்றும் சொற்பொழிவாளர் யோகேஷ்வரன்.இடம் : மயிலாப்பூர்.

28 Mar 2023

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று நோன்பு சாட்டும் நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

28 Mar 2023

திருவள்ளூர் சி வி நாயுடு சாலை காமராஜர் சிலை அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

28 Mar 2023

குண்டூர் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு. வேறு இடத்திற்கு செல்லும் குழாயின் கசிவில் குடம் வைத்து உப்பு தண்ணீரை பிடிக்கும் அப்பகுதி பெண்கள்.

28 Mar 2023

அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

28 Mar 2023

பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

28 Mar 2023

மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

28 Mar 2023

பல்வேறு கோரிககைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

28 Mar 2023

கோடை வெயிலில் குறைந்த பவானி ஆறு. கண்களைக் கவரும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம். இடம், மேட்டுப்பாளையம். சமயபுரம் அருகே

28 Mar 2023

புதுச்சேரி மிஷின் வீதி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காலத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கோபுரம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

28 Mar 2023

புதுச்சேரி மிஷின் வீதி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காலத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

28 Mar 2023

சென்னை மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா முதல் நாள் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இடம் : திருவான்மியூர்

28 Mar 2023

சென்னை வடபழனி அருணாச்சலம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்..

28 Mar 2023

சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கட்டாத அரசு பஸ்சை கடலூர் கோர்ட்டில் ஜப்தி செய்யப்பட்டது.

28 Mar 2023

சிவகங்கை அருகே நாலுகோட்டை காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கள்.

28 Mar 2023

சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை பார்வையிட வந்த கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி அரசு பள்ளி மாணவிகள்.

28 Mar 2023

கோரிமேடு அன்னை தெரசா அறிவியல் கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் ஒளி விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவில்,ஐ.ஜி.சந்திரன் ஒளி விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அருகில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி, முதன்மை செவிலிய அதிகாரி டாக்டர் பிரமிளா.

27 Mar 2023

கோரிமேடு அன்னை தெரசா அறிவியல் கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் ஒளி விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவில், விளக்கேற்றி உறுதிமொழி எடுத்த மாணவிகள்.

27 Mar 2023

பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறார் இலக்கியத் திருவிழா துவங்கியது இதில் இடம்பெற்ற மாணவ - மாணவியரின் நடன நிகழ்ச்சி.இடம் : கோட்டூர்புரம்.

27 Mar 2023

திருப்பூர், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியேற்பு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார். அருகில் நிறுவனத் தலைவர் கோபிநாதன், மாநில தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள்.

27 Mar 2023

சென்னை வண்ணாரப்பேட்டை சின்ன சேனியம்மன் அம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

27 Mar 2023

பிரிட்டிஷ் ராயல் நேவீ கடற்படைக் கப்பல், HMS TAMAR, சென்னை துறைமுகம் வந்துள்ளது. நட்பு, நல்லுறவு, கலாச்சாரம், சேவை மற்றும் சுற்றுலா ஆகிய நோக்கத்துடன் ஒரு வாரம் சென்னையில் உள்ளனர். இது குறித்து கருணாலயா தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஓவியங்கள் வரைந்தனர்.இடம்: தண்டையார்பேட்டை.

27 Mar 2023

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கு என வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர் லிங்கம் இன்று கருவறையில் இருந்து எடுத்துவரப்பட்டு உற்சவர் மண்டபத்தில் அபிஷேக ஆராதனை நடந்தது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பங்குனி உத்திர திருவிழாவில் நடக்கும் உற்சவ உடையவர்லிங்க ஆராதனையை பெண்கள் தரிசித்தால் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வார்கள் என்பது ஐதீகம்...

27 Mar 2023

தேனியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் விரிவாக்க கட்டட பணியின் போது இடது ஓரம் மேல்தளம் இடிந்து விழுந்தது.

27 Mar 2023

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நெல் வயலில் நாத்து நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

27 Mar 2023

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கு கழுவூரில் உள்ள குளத்தில் குட்டை போல் தேங்கிய தண்ணீரை தேடி வரும் ஆடுகள்.

27 Mar 2023

சென்னை வடபழனி மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

27 Mar 2023

உடுமலை செங்குளத்தில் படர்ந்து காணப்படும் தாமரை இலைகளில் பிரதிபலிக்கும் மரம்.

27 Mar 2023

வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக தக்காளி பெட்டிகளில் பழங்களை அடுக்கும் தொழிலாளர்கள். இடம்.உடுமலை நகராட்சி சந்தை.

27 Mar 2023

கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிய ராமகிருஷ்ணா மில்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர்.

27 Mar 2023

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

27 Mar 2023

சென்னை ஶ்ரீ ஸித்தி புத்தி ஸமேத ஶ்ரீ கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இடம்: ராஜா அண்ணாமலை புரம்.

27 Mar 2023

உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்.

27 Mar 2023

உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

27 Mar 2023

2023 - 24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

27 Mar 2023

காங்கிரஸ் எம்.பி., ராகுல் தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து பாதகையை ஏந்திவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.

27 Mar 2023

விழுப்புரம் அடுத்த கானை பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது .

27 Mar 2023

கோடையின் துவக்கத்தில் இலையுதிர்ந்து நிற்கும் மரங்கள். இடம்: கோவை வேளாண் பல்கலை அருகே.

27 Mar 2023

புதுச்சேரி மெரினா கடற்கரையில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

27 Mar 2023

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சென்னை மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்.

27 Mar 2023

சென்னை எண்ணூர் முகத்துவார பகுதியில் மணலை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

27 Mar 2023

வெயிலின் தாக்கத்தால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் புதுச்சேரி கடற்கரை சாலை இடம் : காந்தி சிலை.

27 Mar 2023

படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்,முருகர் , நந்தி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன.இடம்: கே.வி.கே.குப்பம், திருவொற்றியூர்.

 

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement