Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய போட்டோ

03 Dec 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளி ரதத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

03 Dec 2022

சென்னை காசிமேடு கடல்பகுதியில் சுற்றிதிரியும் கடல் புறாக்களின் நடுவே மீன் பிடிக்கும் மீனவர்கள்.

03 Dec 2022

சிறைத்துறையை கண்டித்து கோவை மத்திய சிறை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள்.

03 Dec 2022

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பர்பிள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

02 Dec 2022

ஜி20 நாடுகளுக்கான தலைமை பொறுப்பை, இந்தியா ஏற்றதை கொண்டாடும், விதமாக தஞ்சாவூர் பெரிய கோவில், மின்ணொளியால் ஜொலிக்கிறது.

02 Dec 2022

மதுரையில் நடந்ததேசிய ஊடகவியல் ஊடகவியலாளர் நல சங்க மாநில மாநாட்டில் பா.ஜ. முன்னாள் தேசிய பொது செயலாளார் ராஜா பேசினார். இடமிருந்து வீரமுருகன், இந்து முன்னணி காடேஸ்வரா அப்ரமணியம், சுவாமி சிவயோகானந்தா, மதுரை ஆதினம் தேசிக பரமாச்சார்யர், தினமலர் இணை இயக்குனர் ரா.லட்சுமிபதி.

02 Dec 2022

தஞ்சாவூர் மாவட்டம் அரசூர் முதல் விளாங்குடி வரை திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்காக, சம்பா நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள வயலில் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்ணை நிரப்பும் நெடுஞ்சாலை துறையினர்.

02 Dec 2022

திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோட்டில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஒரு பகுதி தாழ்வான பகுதியாக மாறியதால் தடுப்பு வைத்துள்ளனர். இடம்: பொம்மையகவுண்டன்பட்டி பிரிவு.

02 Dec 2022

கார்த்திகை தீபத் திருவிழா யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மாட வீதி மற்றும் கிரிவலப்பாதைகளில் காவல்துறை சார்பில் 'மே ஐ ஹெல்ப் யூ' மையத்தை ஒரு பெண் காவலர் மூலம் திறக்க வைத்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு, உடன் வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், டி.ஐ.ஜி., (பொறுப்பு) சத்யபிரியா, எஸ்.பி., கார்த்திகேயன், உட்பட பலர்

02 Dec 2022

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம், சென்னை வேல்ஸ் பல்கலை, இணைந்து வழங்கும், பதில் சொல்; அமெரிக்கா செல், வினாடி- வினா போட்டி, கொளத்தூரில் உள்ள குலபதி டாக்டர்.எஸ்.பாலகிருஷ்ண ஜோஷி குருகுலம் நிகர்நிலை பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பள்ளியின் முதல்வர் ஜானகி: நடுவில் இருப்பவர், தமிழ் ஆசிரியர்கள் ரேவதி மற்றும் விஜயகுமார்.வினாடி-வினா போட்டியை இணைந்து வழங்கியோர், பிரின்ஸ் கல்வி குழுமம் மற்றும் சேவரிட் நிறுவனத்தார்.

02 Dec 2022

தஞ்சாவூர் மாவட்டம் அரசூர் முதல் விளாங்குடி வரை திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்காக, சம்பா நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியில் செம்மண் கொட்டி நிரப்பப்பட்ட சூழலில்,தனது வயலில் மிஞ்சிய பகுதிகளில் உள்ள பயிர்களை மீண்டும் பயிரிட்டு பாதுகாக்கும் மூதாட்டி.

02 Dec 2022

தஞ்சாவூர் மாவட்டம் அரசூர் முதல் விளாங்குடி வரை திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்காக, சம்பா நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள வயலில் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்ணை நிரப்பும் நெடுஞ்சாலை துறையினர்.

02 Dec 2022

தஞ்சாவூர் மாவட்டம் அரசூர் முதல் விளாங்குடி வரை திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்காக, வயல்களில் மண் கொண்டு மூடுவதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் இழுத்துச் சென்றனர். இடம்:அரசூர்

02 Dec 2022

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் உள்ள எஸ்கலேட்டர் பழுது அடைந்துள்ளதால் மூடி வைக்கப்பட்டுள்ளது.

02 Dec 2022

அண்ணா பல்கலை 10வது மண்டலத்துக்குட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லூரியில் நடந்தது இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவிகள்.

02 Dec 2022

விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் விண்ணப்பத்தை வங்கி தலைவர் தங்க சேகர் வழங்கினார்

02 Dec 2022

திருப்பூர், பள்ளிக் கல்வி துறை சார்பில் கலைத் திருவிழா நடந்தது. இதில் பொம்மலாட்டம் ஆடிய மாணவிகள்.

02 Dec 2022

ஊட்டி நகராட்சி மார்கெட்டில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மஞ்சபை தானிங்கி இயந்திரத்தை துவக்கிவைத்தார், உடன் கலெக்டர் அம்ரித் கலந்துக்கொண்டார்.

02 Dec 2022

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து வழங்கும், பதில் சொல்; அமெரிக்கா செல் வினாடி வினா போட்டி பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளியில் நடந்தது.

02 Dec 2022

திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலை தனியார் பள்ளி எதிரில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

02 Dec 2022

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள். இடம்: கோவை பூ மார்க்கெட்.

02 Dec 2022

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது.

02 Dec 2022

காட்டுப்பகுதிக்குள் சென்று இயற்கை சூழலை ரசிக்கும் வகையில் பயோ ட்ரையல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .இடம் : வண்டலூர் உயிரியல் பூங்கா

02 Dec 2022

புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை அலுவலகத்தில் புதியதாக வாங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தி திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ளது.

02 Dec 2022

மருத்துவராகும் கனவுடன் முதல் நாள் வகுப்பை பொன் சிரிப்புடன் அடி எடுத்து வைக்கும் எதிர்கால மருத்துவர்கள்.இடம்: சென்னை.

02 Dec 2022

மருத்துவராகும் கனவுடன் முதல் நாள் வகுப்பை பொன் சிரிப்புடன் அடி எடுத்து வைக்கும் எதிர்கால மருத்துவர்கள்.இடம்: சென்னை.

02 Dec 2022

சென்னைக்கு கீழ்பாக்கத்தில் நடந்த, சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான கோ- கோ அரையிறுதி ஆட்டத்தில் மோதிய கோல சரஸ்வதி வைஷ்ணவ் மற்றும் ஜவஹர் வித்யாலயா பள்ளி மாணவியர்.

02 Dec 2022

சென்னை குன்றத்தூர் சாலையில் அதிகளவில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

02 Dec 2022

பச்சைப்பசெலன நெற்பயிர்கள் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.இடம்: சிவகங்கை அருகே வாணியங்குடி பகுதி.

02 Dec 2022

சென்னை மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மாநில கமிஷனர் அலுவலக வளாகத்தில் பார்வையற்றோர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

02 Dec 2022

பொள்ளாச்சி போலீஸ் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

02 Dec 2022

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து வழங்கும், பதில் சொல், அமெரிக்கா செல் வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி ஜோதி நகர் சாந்தி பள்ளியில் நடந்தது.

02 Dec 2022

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில், எஸ்.ஜே.என்., மற்றும் வேலம்மாள் அணிகள் மோதின.இடம்.எழும்பூர்

02 Dec 2022

கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியில் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 5 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு முதலாமாண்டு சேர்க்கைக்கான ஆணையை துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். அருகில் டீன் வெங்கடேச பழனிச்சாமி.

02 Dec 2022

தினமலர் - பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., இன்ஸ்டிட்யூசன்ஸ், ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் காலேஜ் இணைந்து வழங்கும் பதில் சொல்,அமெரிக்கா செல் வினாடி-வினா போட்டி திருப்பூர், பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் நடந்தது.

02 Dec 2022

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் பராமரிப்பு பணிகளுக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

02 Dec 2022

விழுப்புரம் மாவட்ட விளையாட்டுதுறை மைதானத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை கௌதம்சிகா மணி எம்.பி., துவக்கிவைத்தார்.அருகில் புகழேந்தி எம்.எல்.ஏ.,.

02 Dec 2022

ஊட்டி செசன்ஸ் கோர்ட்டிற்கு, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிற்காக வந்த அரசு வழங்கறிஞர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார்.

02 Dec 2022

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான ஒன்பதாவது மண்டல தடகளப் போட்டி கோவை அவினாசி ரோடு சிஐடி கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இலக்கை நோக்கி சீறிய மாணவிகள்.

02 Dec 2022

தமிழக அரசை கண்டித்து கோவையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர்.

02 Dec 2022

சொத்து வரி மின் கட்டண உயர்வு பால் பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் கோவை சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

02 Dec 2022

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ 1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மணி மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

02 Dec 2022

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன

02 Dec 2022

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியார் மேம்பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

02 Dec 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஐந்தாம் நாள் இரவு உற்சவத்தில், மாடவீதி புறப்பாடுக்கு முன் திருகல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதராய் முருகர் , உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் , சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்

01 Dec 2022

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.இடம்: தலைமை செயலகம்.

01 Dec 2022

கடலூர் சில்வர் பீச்சில் நடந்த பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துவங்கி 100 நூறாண்டுகள் எட்டியதையொட்டி நடந்த நூற்றாண்டு விழாவில் மணல் சிற்பம் செய்யப்பட்டது.

01 Dec 2022

கோவை ஆர்.எஸ்., புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டியில் நடனமாடிய மாணவிகள்.

01 Dec 2022

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நடந்த கலைத் திருவிழாவில் மாணவியர்களின் மண்பாண்டம் ஓவியப் போட்டி நடந்தது.

01 Dec 2022

ராஜிவ் அரசு பொது மருத்துவமனை முன்பு இருக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ஈவ்னிங் பஜார் சாலைக்கு செல்ல புது, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

01 Dec 2022

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில், சென்னை பி.எஸ்.பி.பி., மற்றும் திருப்பதி பி.வி.பி., அணிகள் மோதின.இடம்.எழும்பூர்

01 Dec 2022

புதுச்சேரி ப்ரின்ஸ் ஹாலில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்

01 Dec 2022

பள்ளி கல்வித்துறை சார்பில் காரமடை வட்டார மையத்திற்கு உட்பட்ட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி அசத்தினர்.

01 Dec 2022

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் நடந்தது. இடம்: கூடங்குளம்

01 Dec 2022

கரூரில் அதிகாலை முதலே பனிமூட்டமாக காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றனர்.

01 Dec 2022

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்.

01 Dec 2022

காரமடை அருகே கட்டாஞ்சி மலை பாதையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. கொண்டை ஊசி வளைவு, மற்றும் சாலை திருப்பங்களில் இருபுறமும் செடிகள் முட்புதர் போல் வளர்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தினமும் விபத்திற்கு உள்ளாகும் நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

01 Dec 2022

கோவை வாலாங்குளம் பகுதிக்கு அமைச்சர் வருகையால் அவசர அவசரமாக போடப்பட்ட செம்மண் சாலையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்று.

01 Dec 2022

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை நடை பயிற்சி மேற்கொண்ட போது உயிர் இழந்தது அதை யொட்டி அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்று வனத்துறை அலுவலகம் அருகே ஜெ.வி.எஸ் நகரி உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்தனர் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

01 Dec 2022

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நான்காம் நாளான இரவு ராஜகோபுரம் முன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிய விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளிதெய்வானை சமேத முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கற்பகவிருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

01 Dec 2022

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் துவாரபாலகருக்கு காப்பு கட்டுதல் நடந்தது.

30 Nov 2022

வெளிச்சமின்றி, திருடர்கள் அச்சுறுத்தலாலும் தவிக்கும் பஸ் பயணிகள் .. கோவை அரசு மருத்துவமனை எதிரேவுள்ள பஸ் ஸ்டாப்பில் மின் விளக்கு இல்லாததால், இருட்டில் தவிக்கும் பயணிகள்.

30 Nov 2022

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை உயிர் இழந்தது அதை யொட்டி அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்று வனத்துறை அலுவலகம் அருகே ஜெ.வி.எஸ் நகரில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

30 Nov 2022

அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் இலக்கை நோக்கி ஓடிய மாணவிகள்.

30 Nov 2022

சிறுமுகை அடுத்துள்ள சின்ன கள்ளிப்பட்டி கிராமத்தில் குடிநீர் வரவில்லை எனக் கூறி சத்தி மெயின் ரோட்டில் தண்ணீர் தடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

30 Nov 2022

பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டியில் நடனமாடிய மாணவிகள்.

30 Nov 2022

தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதிகளில் ஒன்றான இரட்டைதிருப்பதி ஸ்ரீதேவர்பிரான் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரி சாற்றுமுறை நடந்தது.

30 Nov 2022

கோவை வாலாங்குளம் பகுதிக்கு அமைச்சர் வருகையால் அவசர அவசரமாக போடப்பட்ட செம்மண் சாலையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்று.

30 Nov 2022

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறை சார்பில், திருவண்ணாமலை 2668 அடி அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ள பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

30 Nov 2022

குளிர்ச்சி : :

தேனியில் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறைந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த பனிமூட்டம்.

30 Nov 2022

பண்ணைக்காடு பகுதியில் விளைநிலங்கள் பிளாட்டாக மாற்றி கட்டுமானங்கள் ஏற்படுத்தபட்டுள்ளது.

30 Nov 2022

சென்னை மணலி அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

30 Nov 2022

புதுச்சேரி உப்பளம் ராஜிவ் உள் விளையாட்டு அரங்கில் நடந்த தேசிய கபடி போட்டியில் பாஞ்சாலா பிரைட் - சோழா வீரன்ஸ் அணிகள் மோதின .

30 Nov 2022

புதுச்சேரியில், மயங்கி விழுந்து உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை உடல் அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

30 Nov 2022

மேட்டூர் அணையில் 16 கண் மதகில் உள்ள ஷட்டர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

30 Nov 2022

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம், சென்னை வேல்ஸ் பல்கலை, இணைந்து வழங்கும், பதில் சொல்; அமெரிக்கா செல், வினாடி- வினா போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன். இடமிருந்து வலம் :தமிழ் ஆசிரியை மஞ்சுளா : நிற்பவர், துணை முதல்வர் ராஜலட்சுமி, முதல்வர் சுப்பிரமணியன், தமிழ் துறை தலைவர் அனந்தராமன் மற்றும் தமிழ் ஆசிரியர் ராஜேஷ் குமார். வினாடி-வினா போட்டியை இணைந்து வழங்கியோர், பிரின்ஸ் கல்வி குழுமம் மற்றும் சேவரிட் நிறுவனத்தார்.

30 Nov 2022

விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் ஆடுகளம் என்ற தலைப்பில் புதிய மொபைல் செயலி மற்றும் தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

30 Nov 2022

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏ டிவிசன் கால்பந்து போட்டிகள் கோவை க.க., சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது இதில் ரத்தினம் ஸ்போர்ட்ஸ் கிளப், எஸ்.என்.ஜி.சி., அணிகள் மோதின.

30 Nov 2022

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 33 வயதுடைய பெண் யானை லட்சுமி காலை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லும்போது காமாட்சி அம்மன் கோவில் வீதி மிஷின் வீதி சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. கிரேன் மூலம் லாரியில் தூக்கி வைக்கப்பட்ட யானை லட்சுமியின் மீது பட்டு துணி போடப்பட்டது.

30 Nov 2022

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 32 வயதுடைய யானை லட்சுமி உடல்நலக் குறைவால், இன்று காலை நடைப்பயிற்சி செல்லும்போது, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடு ரோட்டில் திடீரென சுருண்டு விழுந்து இறந்தது. லட்சுமி உடலை சுற்றி கதறி அழுத பக்தர்கள்.

30 Nov 2022

பனிப்பொழிவு... :

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பனிப்பொழிவு. இடம்: ஈச்சனாரி.

30 Nov 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாள் இரவு உற்சவத்தில், சிம்மம் வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

29 Nov 2022

தூத்துக்குடி மாவட்டம் இரட்டை திருப்பதி ஸ்ரீ தேவர் பிரான் திருக்கோயிலில் கார்த்திகை பிரமோற்சவம் பத்தாம் நாள் மாலை புறப்பாடு நடந்தது.

29 Nov 2022

புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டு பெருவிழாவில் மின்விளக்குகளால் ஜொலித்தது.

29 Nov 2022

மழை ஓய்ந்த நிலையில் கூவம் ஆற்றில் நுரை பொங்க வெளியேறும் கழிவுநீரால்மெரினா கடற்கரையில் சோப்பு நுரை போல் காட்சியளிக்கிறது.

29 Nov 2022

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி திருவேங்கடமுடையார் சந்நிதி கார்த்திகை மாத திருவோணம் காட்சி...

29 Nov 2022

புதுச்சேரி உப்பளம் ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் 3வது நாளாக நடந்த தேசிய கபடி லிங்க் போட்டியில் சோழா வீரன்ஸ் - டடோபா டைகர்ஸ் அணிகள் மோதின.

29 Nov 2022

விழுப்புரம் நியூ ஜான்டுயி மெட்ரிக் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் நாளிதழ் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக அதிகாரி டாக்டர் எமர்சன் ராவின் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். அருகில் பள்ளி முதல்வர் ஸ்டீபன், பள்ளி தலைமை ஆசிரியர் செண்பகலட்சுமி

29 Nov 2022

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் 10வது பட்டமளிப்பு விழா,சென்னையில் நடந்தது. இதில், பட்டதாரிகளுக்கு தமிழக கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கி பாராட்டினார். உடன் இடமிருந்து, பல்கலையின் பதிவாளர் சவுந்தரராஜன், உயர்கல்வி முதன்மைச் செயலர் கார்த்திகேயன், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சிறப்பு விருந்தினர் மணிப்பூர் ஐ.ஐ.ஐ.டி இயக்குனர்கிருஷ்ணன் பாஸ்கர், பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம், பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கணேசன். இடம்: சைதாப்பேட்டை,சென்னை.

29 Nov 2022

திண்டிவனம் ரயில் நிலையத்தில் குரங்கு ஒன்று தண்ணீர் பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி.

29 Nov 2022

குடியிருக்கும் பகுதியில் பட்டா வழங்க கோரி நத்தமேடு நரிக்குறவர்கள் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

29 Nov 2022

விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடை செய்த நெல்மணிகளை டிராக்டர் தொட்டியில் கொட்டுகின்றனர்.

29 Nov 2022

பனி போர்த்தி காணப்படும் உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் 89 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.

29 Nov 2022

கோவை ராஜவீதி துணிவணிகர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது.

29 Nov 2022

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருநீர்மலை பகுதியில் அகல்விளக்கு செய்து வெயிலில் காய வைக்கப்பட்டுள்ளன .இடம் திருநீர்மலை

29 Nov 2022

விருத்தாசலம் காந்தி நகர் வித்யா மந்திர் அரசு உயர்நிலைப் பள்ளியில்,பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை திருவிழாவை ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ துவக்கி வைத்து பார்வையிட்டார்.

29 Nov 2022

திமுக அரசு மீதான குற்றச்சாட்டு மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார்.

29 Nov 2022

தோழன் தோளும் கொடுப்பான், டோ வும் கொடுப்பான். ஆனால் பயணத்தில் விழிப்புணர்வு வேண்டும். இடம் புதுச்சேரி அடுத்த திருபுவனை.

29 Nov 2022

நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் பகல் நேரத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவினாலும், ரம்மியமான சூழலும், அழகிய காட்சிகளும் சுற்றுலா பயணியரை வசீகரிக்கின்றன.

28 Nov 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணியன், உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மக்கள் வெள்ளத்தில் மாட வீதியில் சென்ற பஞ்ச மூர்த்திகள்.

 
Advertisement