இன்றைய போட்டோ
07 Dec 2023
மழைநீர் வடியாமல் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் வேளச்சேரியில் உள்ள பொதுமக்கள் கார்கள் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
07 Dec 2023
மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்.இடம் : மடிப்பாக்கம்.
07 Dec 2023
மழைநீர் வடியாமல் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் வேளச்சேரி டான்சி நகர், பேபி நகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து படகுகளில் அழைத்து வரப்பட்ட பொதுமக்கள்.இடம் : வேளச்சேரி.
06 Dec 2023
கோவை மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்பு (சி4டி.என்.,) மூலம் நிவாரணப் பொருட்களை பெற்று சென்னைக்கு அனுப்பும் பணி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பார்க்கிங்கில் நடந்தது.
06 Dec 2023
கிறிஸ்துமஸ் விழா வருவதை யொட்டி புதுச்சேரி மிஷன் வீதியில் நடைபாதை கடையில் விற்பனைக்கு வந்துள்ள கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள்.
06 Dec 2023
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கடைசி நாள். அலங்கார விளக்கொளியில் அருணாசலேஸ்வர் கோவில் ஜொலிக்கும் காட்சி பின்னணியில் தெரிய, அண்ணாமலையார் மலை உச்சியில் எரியும் மகா தீபத்தை காணக் கண் கோடி வேண்டும்!
06 Dec 2023
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடைசி நாளான இன்று அண்ணாமலையார் மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் எரியும் தீபம்!
06 Dec 2023
வெள்ளம் வீடுகளை சூழ்ந்ததால் வெளியேறிய பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான தண்ணீர் மற்றும் பாலிற்காக மேம்பாலத்தில் காத்திருந்தனர்.இடம் : பள்ளிக்கரணை.
06 Dec 2023
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடைசி நாளான இன்று அண்ணாமலையார் மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் எரியும் தீபம்!
06 Dec 2023
மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்.இடம் : மடிப்பாக்கம்.
06 Dec 2023
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பள்ளிக்கரணை பகுதி.இடம் : வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணை.
06 Dec 2023
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் அணிவகுத்து செல்லும் வாகனங்கள். இடம் பழைய பஸ்நிலையம்.
06 Dec 2023
விழுப்புரத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் அமைச்சர் பொன்முடி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட செயலாளர் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ.,
06 Dec 2023
சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு திருமண மண்டபத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
06 Dec 2023
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி புது பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
06 Dec 2023
புயலில் பாதிக்கப்பட்டக்கபட்டதால் வண்ணாரப்பேட்டை பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்இடம்: தங்க சாலை மேம்பாலம் அருகே.
06 Dec 2023
உலக மண் தினத்தை ஒட்டி புற்று மண் முகத்தில் பூசிக் கொண்ட தன்னார்வலர்கள். இடம்: கோவை சுந்தராபுரம்.
06 Dec 2023
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் அலங்காரத்தில் பைரவர்.
06 Dec 2023
வண்டலூர் - மீஞ்சூர் 400 வெளி வட்ட சாலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் பகுதிமக்களுக்கு படகு மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டன.
06 Dec 2023
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம் செய்தனர்.
06 Dec 2023
முடிச்சூர் அருகே மதனபுரம் பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டு கொண்டு வந்தனர்
06 Dec 2023
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சி.டி.ஓ ., காலணி முற்றிலும் மழை வெள்ளத்தால் மூழ்கியது பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு வந்தனர்
06 Dec 2023
புழல்,பூண்டி, உபரி நீர் திறப்பால் பக்கிங்ஹாம் கால்வாயில் பின்னோக்கி ஏறிய வெள்ள நீரால் மணலி விரைவு சாலை 8 கிலோமீட்டர் தூர சாலை வெள்ள நீரில் மூழ்கியது.
06 Dec 2023
புழல் பூண்டி உபரி நீர் திறப்பு காரணமாக மணலி விரைவு சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மக்கள் வெள்ள நீரில் ஊர்ந்தபடி வெளியேறி வருகின்றனர்.
06 Dec 2023
வெள்ளநீர் சூழ்ந்ததால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர்-அம்பேத்கர் நகர் இணைப்பு சுரங்கப்பாதை முழுகியது மக்கள் ஆபத்தான நிலையில் வெளியேறி வருகின்றனர்.
06 Dec 2023
சென்னை புயல் மழை பாதித்த பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள திருப்பூர், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
06 Dec 2023
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
06 Dec 2023
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி திண்டிவனம்_ சென்னை பேருந்துகளில் போலீஸ் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
06 Dec 2023
திண்டுக்கல்லில் நடந்த ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார். இடமிருந்து,மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ராஜா.
05 Dec 2023
சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பை விட்டு வெளியேறும் மக்கள்.
05 Dec 2023
புழல் பூண்டி உபரி நீர் திறப்பு காரணமாக மணலி விரைவு சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மக்கள் வெள்ள நீரில் ஊர்ந்தபடி வெளியேறி வருகின்றனர்.
05 Dec 2023
புயலின் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழையில் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் பிரம்ம தீர்த்தகுளம் நிரம்பி காட்சியளிக்கிறது.
05 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையில் ,சென்னை அமைந்தகரை வழியாக செல்லும் கூவம் ஆற்றின் நீரின் அளவு அதிகரித்துள்ளது
05 Dec 2023
தாம்பரம் - பெருங்களத்தூர் முடிச்சூர் சாலையில் தேங்கிய மழை நீரில் ஆட்டம் போடும் இளைஞர்கள்
05 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த மழையினால் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்.
05 Dec 2023
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பம்பை ஆற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இடம் : விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர்.
05 Dec 2023
சென்னையில் பெய்த மழையினால் கோபாலபுரம் முழுவதும் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஆறு போல் ஓடுகிறது.
05 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக திருவல்லிக்கேணி காவலர் அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் விழுந்த மரம்.
05 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த மழையினால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் சிரமப்படும் நோயாளிகள்.
05 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் காற்றின் வேகத்தில் சாலையில் விழுந்து மரம். இடம்.ஓயிட்ஸ் சாலை
05 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய மாநகராட்சி ரிப்பன் மாளிகை.
05 Dec 2023
வங்கக் கடலில் புயல் உருவானதை தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
04 Dec 2023
தென்காசி மாவட்டம் ராமநதி அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் நீர் திறக்கப்பட்டதையடுத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
04 Dec 2023
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயிலில் 108 சங்கு பூஜை நடந்தது.
04 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ஆறு போல் ஓடும் தண்ணீர்.
04 Dec 2023
பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடந்தது.
04 Dec 2023
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடந்தது.
04 Dec 2023
புயல் சின்னம் காரணமாக, மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, புதுச்சேரி கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு ஆலோசனைகள் கூறிய இன்ஸ்பெக்டர் நாகராஜ்.
04 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ஆறு போல் ஓடும் தண்ணீர்.
04 Dec 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் அரும்பாக்கம் சாலையில் ஆறு போல் ஓடும் தண்ணீர்.
04 Dec 2023
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் கார்கள் அடித்து செல்லப்பட்டன.
04 Dec 2023
சுவாமி விவேகானந்தா ஃபிரண்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் கார்த்திகை மாத ஒட்டி திருவிழாவாக போன போட்டி நடத்தப்பட்டது அதில் சிறப்பான கோலத்துக்கு பரிசளித்தனர் இடம் சிவன் சட்டி கார்டன் ஐந்து படம் உள்ளது
04 Dec 2023
புயல் மழை காரணமாக,புதுச்சேரி கடற்கரைச் சாலை அடைக்கப்பட்டு இரவு பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
04 Dec 2023
விழுப்புரம் நாப்பாளையத் தெரு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது.
03 Dec 2023
சென்னையில் விட்டு விட்டு பெய்த மழையால் கழுவி விடப்பட்டது போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட அண்ணா சாலையில் அணிவகுத்துச் சென்ற வாகனங்கள்
03 Dec 2023
தென்காசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாற்று நடுவதற்காக விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
03 Dec 2023
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர்.
03 Dec 2023
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக மண்தொட்டியில், மண் நிரம்பி தயார் படுத்தப்பட்டு வருகிறது.
03 Dec 2023
கோவை சுங்கம் நிர்மலா கல்லூரியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள்.
03 Dec 2023
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை தொடர்ந்து புதுச்சேரியில் மழை பெய்தது.
03 Dec 2023
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ளகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகஉருவாகியதை யொட்டி சென்னை மெரினா கடற்கரை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.இடம்.பட்டினப்பாக்கம்
02 Dec 2023
பா.ஜ., மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ்குமாரை சந்தித்து வாழ்த்திய சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். இடம்: கோவை பா.ஜ., அலுவலகம்.
02 Dec 2023
பனி படர்ந்த மலையினிடையே ஆங்காங்கே விழும் நீர் விழ்ச்சியின் அழகு. இடம் : மேட்டுபாளையம் - குன்னூர் ரோடு.
02 Dec 2023
விழுப்புரம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பூர்ணா குணமடைய வேண்டி கோலியனூர் பெருமாள் கோவிலில் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
02 Dec 2023
திண்டிவனம் நகரப் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி சோதனை நடத்தினார்.
02 Dec 2023
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் கொடிசியா அருகில் நடந்தது இதில் சேலத்தில் நடக்க உள்ள இளைஞரணி மாநில மாநாட்டிற்கான நிதியினை கோவை மாவட்ட திமுக சார்பில் அக்கட்சி இளைஞர் அணி செயலாளர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது. அருகே, (இடமிருந்து) மாவட்டச் செயலாளர்கள் முருகேசன், கார்த்திக், அமைச்சர் முத்துசாமி, எம்.பி., ராசா, முன்னாள் அமைச்சர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர்.
02 Dec 2023
கடலூரில் நடந்த திண்ணைப் பிரச்சார கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர். ராமதாஸ் பேசினார். அருகில் கௌரவத் தலைவர் மணி எம்.எல்.ஏ
02 Dec 2023
புதுச்சேரி கடல் சீற்றமாக இருந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்தனர்.
02 Dec 2023
சென்னையில் பெய்து வரும் மழையால்வடபழனி கோவில் குளம் முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
02 Dec 2023
கோவை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவர்கள்.
02 Dec 2023
சங்காபிஷேகம் :திருப்பூர், ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.