Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய போட்டோ

07 Oct 2022

தினமலர் லட்சிய ஆசிரியர் 2022 விருது பெற்ற ஆசிரியர்களுடன் (இடமிருந்து 4வது ) தினமலர் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு, முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா , இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர்.ஆர்.லட்சுமிபதி .

07 Oct 2022

மதுரையில் தினமலர் லட்சிய ஆசிரியர்2022 விருதை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா, தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி வழங்கினர்.

07 Oct 2022

கோவையில் போக்குவரத்தில் செய்த மாற்றங்களால் ஏற்பட்ட சிக்கல்...மேட்டுபாளையம் ரோட்டில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம்: வடகோவை.

06 Oct 2022

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.,சாலையில் போக்குவரத்து நெரிசல் .

06 Oct 2022

வணிகத் திருவிழாவையொட்டி புதுச்சேரி நேரு வீதி மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

06 Oct 2022

கோவை எட்டிமடை அமிர்தா பல்கலையில் நடந்த 19-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார், அருகே (இடமிருந்து) வளாக இயக்குனர் சதீஷ் மேனன், சி.ஐ.ஆர். துறை முதன்மை இயக்குனர் பரமேஸ்வரன், .

06 Oct 2022

ஊட்டிக்கு, வந்த மத்திய அமைச்சர் முருகனுக்கு, பா.ஜ.,வினர் வரவேற்ப்பு அளித்தனர்.

06 Oct 2022

கோவை எட்டிமடை அமிர்தா பல்கலையில் நடந்த 19-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

06 Oct 2022

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

06 Oct 2022

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பா.ஜ. நிர்வாகி வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட இடத்தை தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் பார்வையிட்டார்.

06 Oct 2022

மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் சென்னை, அடையாறு ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இடம்: ஈக்காட்டுதாங்கல்.

06 Oct 2022

கம்பம் ரோட்டில் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வண்ணம் பச்சை பசேலென ரம்யமாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்.

06 Oct 2022

ஊட்டி ரோஜா பூங்காவில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த காட்சி.

06 Oct 2022

கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 60 மீட்டர் ஓட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய வீராங்கனைகள்.

06 Oct 2022

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி வெள்ள தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மண்டலம் 2 அலுவலகத்தில் நடந்தது. இதில் மன்ற உறுப்பினர்கள் ஏராளமான புகார்களை கலெக்டர் ராகுல்நாத்திடம் தெரிவித்தனர்.

06 Oct 2022

பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி பத்தாம் நாளை முன்னிட்டு, அம்பு சேவை நடந்தது.

06 Oct 2022

புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நவராத்திரி துர்கா பூஜை ஊர்வலம் நடந்தது. இடம் காமராஜர் சாலை.

06 Oct 2022

திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் உணவருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் திருப்பூர், மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.

06 Oct 2022

மொபைல் போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் போது திண்டிவனம் டவுண் போலீஸாரால் பட்டதாரி வாலிபர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். ஏ எஸ் பி அபிஷேக் குப்தா விசாரணை செய்தார். அருகில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன்.

06 Oct 2022

மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்க கோரி, காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

06 Oct 2022

திருப்பூர், பெரிய கடை வீதியில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா நடந்தது.

06 Oct 2022

திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு சூரன் வதம் நடந்தது.

06 Oct 2022

அகில இந்திய துளுவ வேளாளர் முதலியார் 34-வது மாநாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் துளுவ வேளாளர் நலச்சங்கம் ஏற்று நடத்தியது அதில் 34 வது மாநாட்டில் மாணவர்களுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டது

05 Oct 2022

புதுச்சேரி அடுத்த இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

05 Oct 2022

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து காணும் இக் காட்சி தென் மாவட்டங்களுக்கு பாசனம் அளிக்கும் வைகை அணையின் எழில் காட்சி . இடம்: மூஞ்சிக்கல்.

05 Oct 2022

திருப்பூர், ராக்கியபாளையம் சென்சூரி பவுண்டேசன் கல்வி குழுமத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் பரத நிகழ்ச்சி நடந்தது.

05 Oct 2022

நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்., புரத்தில் வேதா பாதசாள ஆண்டு விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவிலிருந்து அன்னபூரணி வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

05 Oct 2022

தினமலர் மற்றும் புரோஜோன்மால் இணைந்து நடத்திய நவராத்திரி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் புட்லூஸ் நடன குழுவினர்களின் டிராகன் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.

05 Oct 2022

தீபாவளியை முன்னிட்டு கோவை டவுன் ஹாலில் பொருட்கள் வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்.

05 Oct 2022

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணன் நகரில் உள்ள லஷ்மி ஹயக்ரீவர் கோயிலில் விஜயதசமி முன்னிட்டு, ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

05 Oct 2022

சீரடி சாய்பாபா ஸித்தி தினத்தையொட்டி உடுமலை தில்லைநகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

05 Oct 2022

தேனி அருகே வயல்பட்டியில் தெளிப்பு நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி.

05 Oct 2022

சென்னையில் பெய்த மழையினால், சாலையில் தேங்கிய மழை நீரில் சீறி செல்லும் வாகன ஓட்டி.இடம்: காமராஜர் சாலை.

05 Oct 2022

விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களுக்கு வழங்கினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், புகழேந்தி.

05 Oct 2022

ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரத்திற்கு, இயற்கை காட்சிகளை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

05 Oct 2022

ஊட்டி அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில், புகைபடம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

05 Oct 2022

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணன் நகரில் உள்ள லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நெல்மணிகளின் குழந்தையை கைப்பிடித்து எழுதிய பெற்றோர்கள்.

05 Oct 2022

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவு செய்து நடவு பணிக்காக தயார் செய்து வருகின்றனர். இடம் : கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்.

05 Oct 2022

தினமலர் சார்பில் நடைபெற்ற, மழலைகள் கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் அரிச்சுவடி நிகழ்ச்சியில், குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்த குருமார்கள் இடமிருந்து ஆன்மீக சொற்பொழிவாளர் சுவாமிநாதன், மெடி ஸ்கேன் செண்டர் இயக்குனர் டாக்டர் இந்திராணி சுரேஷ்,சென்னை விமான நிலைய டி.ஐ.ஜி ஶ்ரீராம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷையன், முன்னாள் தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் ரவி மற்றும் அவரது மனைவி தெய்வம் ரவி, ஶ்ரீ சங்கரா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கிரி சீதாராமன்.இடம் : தாம்பரம்.

05 Oct 2022

தினமலர் சார்பில் நடைபெற்ற, மழலைகள் கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் வித்தியாரம்பம் என்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்துகொண்ட பெற்றோர்கள்.இடம் : தாம்பரம்.

05 Oct 2022

ஆயுத பூஜை கொண்டாட்டம்.! :

கோவை குறிச்சி குளக்கரை ஓரத்தில் தங்கள் வாகனங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடினார்.

05 Oct 2022

திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி சாய் கிருஷ்ணா நுண்கலை கூடம் சார்பில் கலைநிகழ்ச்சி நடந்தது.

05 Oct 2022

விஜயதசமியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சிவன் புரம் ஐயப்பன் திருக்கோயிலில் வித்யாரம்ப நிகழ்ச்சியில் குழந்தை நாக்கில் தங்க ஊசியில் தேனில் தொட்டு ஆதி அட்க்ஷரம் மூலம் எழுத்தறிவை தொடங்கி வைத்த நம்பூதிரி.

05 Oct 2022

விஜயதசமியை முன்னிட்டு கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

05 Oct 2022

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் யானை சவாரி செய்யுமிடம் வெறிச்சோடி காணப்படுகிறது.

05 Oct 2022

மேட்டுப்பாளையம் அருகே உள்ள குத்தாரிபாளையத்தில் பி இ பட்டதாரிகள் பி12 எனும் புதிய ரக பால்பண்ணையை தொடங்கினர். இதில் பாஜ வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர.

05 Oct 2022

விஜயதசமியை முன்னிட்டு, தஞ்சாவூர் கீழவாசல் கவாடிக்கார தெருவில் உள்ள, அரசு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சேர்க்கைக்காக வந்த குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

05 Oct 2022

கோவை சலீவன் வீதி மாரண்ண கவுடர் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் குழந்தைகள் அரிசியில் எழுதினர்.

05 Oct 2022

வள்ளலார் முப்பெரும் விழா சிறப்பு தபால் உறையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் சேகர் பாபு பெற்று கொண்டார். அருகில் தென்சென்னை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா, அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சுப்பிரமணியன் உள்ளிட்டோர்.இடம்: ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.

05 Oct 2022

சென்னையில் பெய்த மழையினால், சாலையில் தேங்கிய மழை நீரில் சீறி செல்லும் மாநகர பேருந்து.இடம்: காமராஜர் சாலை.

05 Oct 2022

வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்தியாரம்பம் என்ற குழந்தைகள் கல்வி கற்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நீதியரசர் துரைசாமி குரு ஸ்தானத்திலிருந்து குழந்தையின் கை பிடித்து நெல்மணியில் ஆனா ஆவன்னா எழுத வைத்தார்

05 Oct 2022

விஜயதசமியை முன்னிட்டு திருப்பூர், ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நடந்தது.

05 Oct 2022

வடபழனி ஆண்டவர் கோயிலில் வித்தியாரம்பம் என்ற குழந்தைகள் கல்வி கற்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பாடகி பிசுசீலா குரு ஸ்தானத்திலிருந்து குழந்தையின் கை பிடித்து நெல்மணியில் ஆனா ஆவன்னா எழுத வைத்தார்

05 Oct 2022

திருச்சி மாவட்டம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த வரும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது.

05 Oct 2022

பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

05 Oct 2022

மதுரையில் தினமலர் சார்பில் இன்மையில் நன்மை தருவார் கோயிலில் விஜய தசமி திருநாள் முன்னிட்டு வித்யாரம்பத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றவர்கள்.

05 Oct 2022

மதுரையில் தினமலர் சார்பில் இன்மையில் நன்மை தருவார் கோயிலில் விஜய தசமி திருநாள் முன்னிட்டு வித்யாரம்பத்தில் குழந்தையுடன் பங்கேற்றவர்கள்.

05 Oct 2022

மதுரையில் தினமலர் சார்பில் இன்மையில் நன்மை தருவார் கோயில் விஜய தசமி திருநாள் முன்னிட்டு வித்யாரம்பத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றவர்கள்.

05 Oct 2022

விஜயதசமியையொட்டி உடுமலை பெரியகடைவீதி நவநீதகிருஷ்ணன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

05 Oct 2022

விஜயதசமி விழாவை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மக்கள்.

05 Oct 2022

கோவை ஆர்.எஸ்.புரம்., பாரதிய வித்யா பவன் பள்ளியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் (இடமிருந்து) இணைச் செயலாளர் சூரியநாராயணன்,கௌரவ பதிவாளர் பிரபாகர் ராவ்,பள்ளி பைன் ஆர்ட் இயக்குனர் உஷா ராஜாராம் உள்ளனர்.

05 Oct 2022

திஸ்கோ வேஸ்கோ மாயம்மா சௌடம்மா...! விஜயதசமி விழாவை ஒட்டி கோவை பூ மார்க்கெட் பகுதியில் கத்தி போடும் திருவிழா நடந்தது.

05 Oct 2022

சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரையில் கடலில் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.

05 Oct 2022

புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் இ.சி.ஆர். சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் சத சண்டீ மகா ஹோமத்தில் ஒன்பதாம் நாளாக நடந்தது.

05 Oct 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் நவராத்திரி கொலுவை நேற்று தமிழக கவர்னர் ரவி தன் துணைவியாருடன் பார்த்து பாராட்டினார், அவருக்கு கோயில் தக்கார் ஆதிமூலம் கொலுவை சுற்றிக் காண்பித்தார்

05 Oct 2022

புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் இ.சி.ஆர். சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் சத சண்டீ மகா ஹோமம் ஒன்பதாம் நாளாக நடந்தது.

04 Oct 2022

ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை செய்வதற்கு அலங்காரம் செய்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்கள்.இடம் : திருவான்மியூர்.

04 Oct 2022

சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ப்ளாஷ் மாப் ஷோ என்ற பல்வேறு கல்லூரியை சேர்ந்த கலை குழுவினர் மற்றும் கலைஞர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

04 Oct 2022

சென்னை புரசைவாக்கம் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் அதிகளவில் சாலையை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

04 Oct 2022

மழை நீர் அல்ல..கானல் நீர்..: பகலில் சுட்டெரித்த வெயிலால் ரோட்டில் தென்பட்ட கானல் நீர். இடம்: தேனி - போடி ரோடு.

04 Oct 2022

புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இடம் ; காந்தி சிலை அருகே

04 Oct 2022

ஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 70 ஆண்டுகளாக விவசாயிகளின் நம்பிக்கையான முக்கோண வடிவ எடை போடும் வழிமுறையை கடைப்பிடித்து அதற்கு ஆயுத பூஜை செய்யும் கமிட்டி ஊழியர்கள்.

04 Oct 2022

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் செல்லும் நான்கு முனை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் வேலை செய்யாதால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் சாலையில் வைத்துள்ள இரும்பு தடுப்புகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன.

04 Oct 2022

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

04 Oct 2022

நவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் அய்யப்பன் கோவிலில் லலிதா சகஸ்ரநாம பஜனை நடந்தது.

04 Oct 2022

திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் பஸ்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

04 Oct 2022

ஆயுத பூஜை விடுமுறையில் வெளி ஊரிலிருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரையில் கடலில் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.

04 Oct 2022

கோவை 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு கொலை மிரட்டல் விட்டதாக கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

04 Oct 2022

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை ஒட்டி கோவை குறிச்சி சிட்கோ பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜை செய்த ஊழியர்கள்.

04 Oct 2022

ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூர் ஆல்பேட்டையில் கார் ஸ்டாண்டில் தங்களை வாகனங்களுக்கு பூஜை செய்யும் டிரைவர்கள்.

04 Oct 2022

ஊட்டி ரயில்வே நிலையத்தில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

04 Oct 2022

பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் உடுமலை திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் 41 அடியாக குறைந்து காணப்படுகிறது.

04 Oct 2022

மானாமதுரையில் வாரச்சந்தை வளாகம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாததால் வைகை ஆற்றுக்குள் திறந்தவெளியில் கடைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

04 Oct 2022

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னை ராயபுரம் தீயணைப்பு மிட்புபணி நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

04 Oct 2022

தொடர் விடுமுறையை அடுத்து திருப்பூர், மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது.

04 Oct 2022

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் வாகனங்களுக்கு வழிபாடு நடத்தினர்.

04 Oct 2022

சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயிலில் நவராத்திரி விழாவில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

04 Oct 2022

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் இயற்கையின் அருமையை உணர்த்தும் வகையில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியம்.இடம் : தரமணி.

04 Oct 2022

ஆயுத பூஜையை முன்னிட்டு வண்டலூர் வன உயிரியல் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள்

04 Oct 2022

தமிழர்களின் பண்டைய கால கலாச்சார, பாரம்பரிய விழாவான புரவி எடுப்பு திருவிழாவிற்காக மானாமதுரையில் கலைநயத்தோடு தயார் செய்யப்பட்ட புரவிகள்.

04 Oct 2022

சரஸ்வதி பூஜையையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள்.

04 Oct 2022

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள் மானாமதுரையில் கலைநயத்தோடு தயார் செய்யப்பட்டுள்ளது.

04 Oct 2022

வார விடுமுறை செவ்வாய்க்கிழமை சிறுவர் பூங்கா இயங்காது ஆனால் ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் திறக்கப்பட்ட பூங்காவில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்.இடம் : கிண்டி.

04 Oct 2022

சென்னை அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாகவைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர்ப்பலகை. இடம்.ஆயிரம்விளக்கு

04 Oct 2022

ஆயுத பூஜையை முன்னிட்டு வண்டலூர் வன உயிரியல் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் மனித குரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து கொண்டு செய்த குழந்தைதனமாக செய்த சேட்டையை பார்த்து ரசித்த பார்வையாளர்கள் .

04 Oct 2022

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடி மகிழும் சிறுவர்கள்.

04 Oct 2022

தான் தயாரித்த, குதிரை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களுக்கு வண்ணம்பூசி அழகூட்டுகிறார் இந்த தொழிலாளி. இடம். வள்ளுவர் கோட்டம், சென்னை.

04 Oct 2022

விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு நடந்த ஹோமம் நிறைவடைந்தது.

04 Oct 2022

ஆயுத பூஜையை முன்னிட்டு, தங்கள் ஆட்டோக்களுக்கு பூஜை செய்து வழிபட்ட ஓட்டுனர்கள். இடம் : சென்ட்ரல்

04 Oct 2022

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Dinamalar iPaper

Advertisement