Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய போட்டோ

14 Aug 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் மூவர்ண கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

14 Aug 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சட்டபேரவை வளாகம் அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

13 Aug 2022

தமிழக அரசு சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் டந்தது.

13 Aug 2022

புதுச்சேரி மெரினாவில் நாட்டின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வீணை வாசிப்பு கலைஞர்கள் ஒரே நேரத்தில் வீணை வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

13 Aug 2022

75வது சுதந்திர தின பவளவிழாவையொட்டி அப்பார்ட்மெண்ட்களில் ஏற்றப்பட்ட தேசியகொடி. இடம்: கோவை நவஇந்தியா.

13 Aug 2022

75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

13 Aug 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் மோப்ப நாய் உடன் பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபட்டனர்.

13 Aug 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பெரிய காரமேடு ஆற்றுப்பகுதியை பலப்படுத்த சென்னை மண்டல நீர்நிலை துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தலைமையில் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

13 Aug 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திட்டுக்காட்டூர் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீன் மற்றும் இறால் குட்டை ஆற்றில் மூழ்கியுள்ளது.

13 Aug 2022

சென்னை, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள நடைமேம்பால படிக்கட்டுகளில் பொதுமக்களை கவரும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.

13 Aug 2022

சிவகங்கை அருகே காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலை சுற்றி தேசிய கொடிகள் பறந்தன.

13 Aug 2022

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடி.

13 Aug 2022

மயிலும் தேசியக் கொடியும் :

விழுப்புரம் அடுத்த அடுக்கம் காப்புக்காட்டுப் பகுதியில் வனத்துறையில் ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு முன்பு நின்றிருந்த ஜீப் மீது நிற்கும் நமது தேசிய பறவை மயில்.

13 Aug 2022

மயிலும் தேசியக் கொடியும்; விழுப்புரம் அடுத்த அடுக்கம் காப்புக்காட்டுப் பகுதி வனத்துறையில் ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு முன்பு இருந்த ஜீப் மீது நின்றிருந்த நமது தேசிய பறவை மயில்.

13 Aug 2022

75 வது சுதந்திர தின விழாவையொட்டி தேனி மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றப்பட்டுள்ளது.

13 Aug 2022

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று துவங்கியது. இதில் பல்வேறு வடிவில் வானில் வட்டமிட்ட வண்ணமயமான பட்டங்கள்.

13 Aug 2022

இளநீர் வியாபாரியின் தேசப்பற்று :

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றி வரும் வேளையில் சாலையோ இளநீர் வியாபாரி ஒருவர் தேசியக்கொடி ஏற்றி வியாபாரம் செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை.

13 Aug 2022

மதுரை தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

13 Aug 2022

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தள்ளாத வயதிலும் தனது பேரன்களுடன் வீட்டில் கொடியேற்றிய மூதாட்டி. இடம்: தஞ்சாவூர் மாவட்டம் மனவயல்..

13 Aug 2022

சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை பிடித்தவாறு பழவந்தாங்களில் இருந்து பல்லாவரம் வரை மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தினர்.

13 Aug 2022

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்.

13 Aug 2022

பசுமையான மலைத்தொடருக்கு நடுவே அருவி போன்று கொட்டும் நீர் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.இடம்: பொள்ளாச்சி அருகே அப்பர் ஆழியாறு.

13 Aug 2022

புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நேற்று நடந்தது.இதில் அணிவகுத்து வந்த போலீசார். இடம்.ராஜாஜி சாலை, சென்னை.

13 Aug 2022

சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை பிடித்தவாறு பழவந்தாங்கலில் இருந்து பல்லாவரம் வரை மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தினர்.

13 Aug 2022

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பகுதியில் உள்ள தினமலர் பிரின்டிங் யூனிட் வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

13 Aug 2022

திண்டுக்கல் நாகசமுத்திரகுளத்தில் அமலைச் செடி ஏராளமாக படர்ந்துள்ளது.

13 Aug 2022

நாட்டின் 75வதுசுதந்திர தினத்தையொட்டி சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று கலை நிகழ்ச்சி நடந்தது.

13 Aug 2022

சென்னை கவர்னர் மாளிகையில் துள்ளி குதிக்கும் மான்கள்

13 Aug 2022

புதுச்சேரி முருகப்பாக்கம் சந்து வெளி மாரியம்மன் கோவிலில் 82 ஆம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி சுவாமி வீதி உலா நடந்தது.

13 Aug 2022

திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் முன் பா.ஜ., சார்பில் 75வது சுதந்திர தின விழா செல்பி ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளது.

13 Aug 2022

விழுப்புரத்தில் சிவன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.

13 Aug 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஈ.சி.ஆர்., சாலை கொக்கு பார்க் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

13 Aug 2022

திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் முன் பா.ஜ., சார்பில் 75வது சுதந்திர தின விழா செல்பி ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளது.

12 Aug 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அங்காளம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அழகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

12 Aug 2022

நாட்டின் 75வதுசுதந்திர தினத்தையொட்டி சென்னை கவர்னர் மாளிகையில் கலை நிகழ்ச்சி நடந்தது.

12 Aug 2022

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, வனத்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உண்ணி செடியால் ஆன யானைகள் சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.இதை ஆர்வமுடன் பார்க்கும் பார்வையாளர்.

12 Aug 2022

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம் ரயில் நிலையம் முன்பாக மிக பிரம்மாண்டமான தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இடம் : தாம்பரம்

12 Aug 2022

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு பழவகைகளை கொடுத்து கொண்டாடினர்.

12 Aug 2022

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கார்பெவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். உடன் மேயர் ப்ரியா உள்ளிட்டோர்.

12 Aug 2022

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்.

12 Aug 2022

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் கொண்டாடும் வகையில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த அமிர்த பெருவிழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடிகளை கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கினார். அருகில் துணைவேந்தர் மோகன், டீன் விவேகானந்தன் ,பேராசிரியர் குமரன்.

12 Aug 2022

திருப்பூர், ராக்கியாபாளையம் இந்திரா நகர் காங்.,கிழக்கு மண்டல அலுவலகத்தில் கட்சி கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர்.

12 Aug 2022

கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ்கிறிஸ்டின் கல்லூரி மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

12 Aug 2022

நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பெருவிழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடிகளை கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கினார். அருகில் துணைவேந்தர் மோகன், டீன் விவேகானந்தன் ,பேராசிரியர் குமரன்.

12 Aug 2022

திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில், ஏற்பட்ட டேங்கர் லாரி, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதி எரிந்த விபத்தில், முக்கிய காரணமாக கூறப்படுவது எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் தான் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை எதிர் திசையில் அத்துமீறி வரும் இது போன்ற இருசக்கர வாகனங்களால் தான் நிலைகுலைய வைத்து விடுகிறது. திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் திண்டிவனம் கோர்ட்டு எதிரில் எதிர் திசையில் பயணித்த இருசக்கர வாகனங்கள்.

12 Aug 2022

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பசுமை இந்தியா என்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மூவர்ண தேசிய கொடி போல் அணிவகுத்து தேசபக்தியை வெளிப்படுத்தினர்.இடம்: முத்துக்குமாரசுவாமி கல்லூரி, கொடுங்கையூர் .

12 Aug 2022

உலக யானைகள் தின விழிப்புணர்வு பேரணி வனத்துறை சார்பில் கோவை மேட்டுபாளையம் ரோட்டில் நடந்தது.

12 Aug 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ரயில்வே போலீசார்.

12 Aug 2022

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் உகந்த உணவு திருவிழாவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டனர்

12 Aug 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் கல்லூரி மாணவியர், முகங்களில் ஓவியங்கள் வரைந்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்..

12 Aug 2022

ஆடி கடைசி வெள்ளி மற்றும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பெரியகடை மாகாளியம்மனுக்கு காய்கறிகளில் தேசிய கொடி போல் வடிவமைத்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

12 Aug 2022

மதுரை கள்ளழகர் கோயில் ஆடி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

12 Aug 2022

75வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்திய வரைபடம் வடிவில் தேசியக்கொடியை ஏந்தியபடி நின்ற கோவை குனியமுத்தூர் நிர்மலா மாதா கான்வென்ட் ஐ.சி.எஸ்.சி., பள்ளி.

12 Aug 2022

மதுரை முத்தீஸ்வர் கோவிலில் உலக நன்மைக்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி மாணவிகள் விளக்கு பூஜை நடத்தினர்.

12 Aug 2022

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலைமை நீதிபதி செல்வநாதன் தேசிய கொடிய வழங்கினார். அருகில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன்.

12 Aug 2022

ஆடி கடைசி வெள்ளியையொட்டி உடுமலை மாரியம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.

12 Aug 2022

மதுரையில் பா.ஜ., சார்பில் 75வது சுதந்திர தின ரத யாத்திரை மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார்.அருகில் புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம்.

12 Aug 2022

மதுரையில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

12 Aug 2022

திருப்பூர் நிட்- ஷோ கண்காட்சி காங்கயம் ரோடு, டாப் லைட் மைதானத்தில் துவங்கியது. இதில் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பார்வையிட்டார். அருகில் சைமா தலைவர் ஈஸ்வரன், நிட்மா தலைவர் ரத்தினசாமி, டெக்பா தலைவர் சக்திவேல், சாய உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

12 Aug 2022

மதுரை கள்ளழகர் கோயில் ஆடி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

12 Aug 2022

திருப்பூர், குமரன் ரோடு பென்னி காம்பவுண்டில் உள்ள நாமக்கல் முன்னாள் எம் எல் ஏ பாஸ்கரின் உறவினர் ஹரி என்பவருக்கு சொந்தமான கட்டுமான அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் விசாரனை மேற்கொண்டனர்

12 Aug 2022

சுதந்திர தின பெருவிழாவினை முன்னிட்டு கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

12 Aug 2022

கோவை அவனாசி ரோட்டில் உள்ள மேம்பாலம் தூண்களின் ஒட்டப்பட்டுள்ள திமுக பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரி பாஜவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 Aug 2022

தேனி ரயில்வே ஸ்டேஷனில் சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு பட்டொளி வீசி பறந்த தேசியக்கொடி.

11 Aug 2022

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

11 Aug 2022

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பயிர் செய்யப்பட்டுள்ள செண்டு பூக்கள்.

11 Aug 2022

பௌர்ணமியையொட்டி உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

11 Aug 2022

நீர் நிரம்பி காட்சி தரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணை.

11 Aug 2022

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்காம் பேட்டை அருகே, சேலம்- சென்னை பைபாஸ் சாலையில், கார், பால் டேங்கர் லாரி, இரு சக்கர வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் மோதிய விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார் மற்றும் லாரியை போராடி தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்.

11 Aug 2022

திண்டுக்கல்லில் போதை பொருட்களுக்கு எதிரான மாணவியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

11 Aug 2022

தேனியில் நடந்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி மொழி எடுத்த டாக்டர்கள்.

11 Aug 2022

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை லேடி டோக் கல்லூரியில் தேசியகொடி வடிவமைப்பில் நின்ற மாணவியர்.

11 Aug 2022

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தில் அகழ்வாராயிச்சி பணிக்காக தோண்டப்பட்டுள்ள குழிகள்.

11 Aug 2022

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த பிரம்மாண்ட போதை ஒழிப்பு எதிர்ப்பு தின உறுதிமொழி.

11 Aug 2022

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக அண்ணா பல்கலை மாணவ -மாணவிகள் கையில் தேசியக்கொடியை ஏந்தி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். இதில் பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.இடம் : கிண்டி.

11 Aug 2022

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்து, உறுதிமொழியை வாசித்தார் அப்போது மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இடம்: கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம்.

11 Aug 2022

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக அண்ணா பல்கலை மாணவ -மாணவிகள் பல்கலை வளாகத்தினுள் கையில் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்து தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.இடம் : கிண்டி.

11 Aug 2022

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, தங்கள் சகோதரா்களுக்கு ராக்கி கயிறு கட்டிய வட மாநிலத்து பெண்கள்.இடம்: பட்டாளம், சென்னை.

11 Aug 2022

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேசிய கொடிகள், பேட்ஜ்கள், தொப்பிகள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.இடம்: பாண்டி பஜார், சென்னை.

11 Aug 2022

கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தினமலர் பட்டம் இதழை புதுச்சேரி ஹோட்டல் காமாட்சி நிர்வாக இயக்குனர் துரை கோவிந்தராஜன் வழங்கினார். அருகில் ஆசிரியர்கள்

11 Aug 2022

மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி என்.சி.சி .,மாணவிகள் கோரிப்பாளையத்தில் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

11 Aug 2022

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், பொது மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

11 Aug 2022

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்கள் செழித்து வளர சத்து உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்: ரெட்டிப்பாளையம், தஞ்சாவூர்.

11 Aug 2022

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள், எம்எல்ஏக்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

11 Aug 2022

விழுப்புரம் கலெக்டர் வளாக மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் உறுதி மொழியை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் முன்னிலையில் மாணவ, மாணவிகள் ஏற்றனர். அருகில் கலெக்டர் மோகன்,எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன் புகழேந்தி, சிவக்குமார்.

11 Aug 2022

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேசிய கொடிகள், அலங்கார தோரணங்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.இடம்: பாண்டி பஜார், சென்னை.

11 Aug 2022

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை, மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் நடந்த புதிய பூணூல் அணியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிராமணர்கள்.

11 Aug 2022

யஜூர் வேத உபாகர்மா எனும் ஆவணி அவிட்ட வைபவம் காரமடை ரங்கநாதர் கோவிலில் நடந்தது . இதில் பூணூல் அணிந்து கொண்டு யாக பூஜையில் உள்ள அர்ச்சகர்கள்.

11 Aug 2022

திருப்பூர், நஞ்சப்பா பள்ளியில் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.

11 Aug 2022

திருப்பூர், நஞ்சப்பா பள்ளியில் போதை பொருள் பயன்பாட்டிற்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ்க்கு பிரம்ம குமரிகள் அமைப்பினர் ராக்கி கட்டினர்.

11 Aug 2022

புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடந்தது. இதில் அணிவகுத்து வந்த போலீசார்.இடம்: ராஜாஜி சாலை, சென்னை.

11 Aug 2022

புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடந்தது. இதில் அணிவகுத்து வந்த போலீசார்.இடம்: ராஜாஜி சாலை, சென்னை.

11 Aug 2022

காமன் வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை விமான நிலையம் வந்த சரத் கமலை பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். இடம் : சென்னை விமான நிலையம் .

11 Aug 2022

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்பில் சில்வர் பக்கம் வென்ற செல்வ பிரபா மற்றும் தொடர் ஓட்டத்தில் சில்வர் பதக்கம் பெற்ற பாரத் ஸ்ரீதர் சென்னை வந்தனர். அவர்களை வால்டர் தேவாரம் வரவேற்றார் .இடம் : சென்னை விமான நிலையம் .

11 Aug 2022

சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் விழிப்புணர்வை உறுதிமொழி எடுத்துக் கொணட ஆசிரியர்கள்.இடம்: வண்ணாரப்பேட்டை.

11 Aug 2022

75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில், தேசியக்கொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

11 Aug 2022

புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடந்தது. இதில் அணிவகுத்து வந்த போலீசார்.இடம்: ராஜாஜி சாலை, சென்னை.

11 Aug 2022

ஆவணி அவிட்டத்தையொட்டி உடுமலை ராமய்யர் கல்யாண மண்டபத்தில் பிராம்மண சேவா சமிதி சார்பில் பூணூல் மாற்றி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

11 Aug 2022

திருப்பூர், நொய்யல் ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளம் ஆர்பரித்து செல்கிறது. ஆபத்தை உணராது மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

11 Aug 2022

காரமடை அருகே பெட்டதாபுரம் பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

 

Dinamalar iPaper

Advertisement