இன்றைய போட்டோ
03 Jul 2022
விழுப்புரம்-பாண்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் நடக்கும் பாரம்பரிய விதைகள் மற்றும் அரிசி கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர்.
02 Jul 2022
இசையமைப்பாளர் எ.எம்.ராஜா - ஜிக்கி பற்றிய நூலின் இரண்டாம் பாகம் நூல் வெளியீடு இன்று நடந்தது இதில் நூலினை பாடகி சுசிலா வெளியிட்டார் உடன் இடமிருந்து மக்கள் கவிஞர் அறக்கட்டளை தலைவர் மெய் ரூசவெல்ட், மறைந்த நடிகை சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி, டி.ஆர் மகாலிங்கம் பேத்தி பிரபா,மற்றும் முன்னாள் வங்கி அதிகாரி ஶ்ரீதர்.இடம் : மயிலாப்பூர்.
02 Jul 2022
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாலை நேரத்தில் மழை பெய்து பூமியை குளிர்ச்சி உண்டாக்கிய நிலையில்,காலையில் வெயில் வெளுத்து வாங்கியதால் பைபாஸ் சாலையில் கானல் நீர் தென்பட்டது.
02 Jul 2022
ஹிந்து முன்ணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணத்தில் திண்டுக்கல்லில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.இடமிருந்து மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் குமார்,மாநிலச் செயலாளர்கள் முத்துக்குமார், செந்தில் குமார்,மாவட்ட தலைவர் ஆர்.பி. ராஜா, கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ்.
02 Jul 2022
கோவையில் இஸ்கானின் 30வது ஸ்ரீஜெகந்நாதர் தேர்திருவிழா கோலகலமாக நடந்தது. இதில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என நடனமாடி வந்த பக்தர்கள். இடம்: ஒப்பணக்கார வீதி.
02 Jul 2022
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவிர்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உடன் மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்.இடம்: நுங்கம்பாக்கம், சென்னை.
02 Jul 2022
புதுச்சேரி தனியார் ஓட்டலுக்கு வருகை தந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் சாமிநாதன்.
02 Jul 2022
கரூர் திருமாநிலையூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
02 Jul 2022
மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்ததை கண்டித்து அனைத்து ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
02 Jul 2022
திண்டுக்கல் ஜான் பிள்ளை சந்து வெற்றி வாராஹி அம்மன் கோயில் ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு தரிசனம் செய்ய கூடியிருந்த பக்தர்கள்.
02 Jul 2022
கோயம்புத்தூர் சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவிகளுக்கான வில்வித்தைப் போட்டி வடவள்ளி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில் நடந்தது.
01 Jul 2022
திண்டுக்கல் அருகே தாமரைக்குளம் பகுதியில் நெல் வயல் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டம் வகையில் பசுமையாக காட்சியளிக்கிறது.
01 Jul 2022
வருமானவரிதுறையினரால் மீட்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சசிகலாவின் சொத்துக்கள்.இடம்: தி.நகர்.
01 Jul 2022
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாலையில் திடீரென மழை பெய்ததால் மக்கள் நனைந்து கொண்டு பயணம் மேற்கொண்டனர்.
01 Jul 2022
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த ஜூனியர் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்ற வீரர்கள். இடம் : பெரியமேடு.
01 Jul 2022
டாக்டர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பொதுமக்கள், நோயாளிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
01 Jul 2022
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் மதகடிப்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
01 Jul 2022
கோவை அரசு மருத்துவமனையில் நடந்த தேசிய மருத்துவர் தின விழாவில் கலெக்டர் சமீரன் மருத்துவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (இடமிருந்து) லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்ட கவர்னர் ஜான் பீட்டர்,இந்திய மருத்துவ சங்கம் மாநில தலைவர் பழனிச்சாமி உள்ளனர்.
01 Jul 2022
பொள்ளாச்சி வடுகபாளையம் மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் ரோட்டில் சரக்கு வாகனங்கள் நிறுத்தி, சரக்குகளை மாற்றுவதால் நெரிசல் ஏற்படுகிறது.
01 Jul 2022
சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் தூர்வாரப்பட்ட கழிவுகள்.
01 Jul 2022
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலை பரங்கிப்பேட்டை புதுச்சத்திரம் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தாமதமாக நடப்பதால் விபத்து ஏற்படுகிறது
01 Jul 2022
மதுரை பைபாஸ் ரோடு வ உ சி பாலத்தில் தடுப்புச் சுவரை இடித்து நின்ற கார் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
01 Jul 2022
ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று வழங்குவதற்கான வருடாந்திர நேர்காணல் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கருவூல கணக்குத்துறை அலுவலகத்தில் நடந்து வருகிறது இதில் ஓய்வூதியர்களை அடையாளம் காண்பதற்காக கண் கருவிழி ஸ்கேன் செய்யப்படுகிறது.
01 Jul 2022
ஊட்டியில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் , கல்லூரி கனவு நிகழ்ச்சியில், கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகள்.
01 Jul 2022
ஊட்டியில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் , கல்லூரி கனவு நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார், உடன் கலெக்டர் அம்ரித்
01 Jul 2022
தமிழ்நாடு காது கேளாதோர், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
01 Jul 2022
டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை, எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில், காட்சிபடுத்தப்பட்டிருந்த அறுவை சிகிச்சை கருவிகளை பார்வையிடும் டாக்டர்கள்.
01 Jul 2022
மேட்டுப்பாளையம் அடுத்து கல்லாறு அரசு தோட்டக்கலை பழ பண்ணையில் காய்த்து தொங்கும் பலாப்பழங்கள் .
01 Jul 2022
உர விலையை கட்டுப்படுத்த வேண்டும், தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, கரும்பு வாங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புகளை கையில் ஏந்தி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு வழங்கிய விவசாயிகள்.
01 Jul 2022
புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் கல்லூரியில் பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து 2வது நாட்களாக இரவு காத்திருப்பு போராட்டத்தில் கொசு வலையுடன் உறங்கிக் கொண்டு இருந்தனர்.
01 Jul 2022
வி.கே.டி.சாலை விக்ரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர் தேதிய நெடுஞ்சாலை ஒரு பக்கம் ரோடு போட்டும், மறுபக்கம் ரோடு போடும் பணி நடைபெறாமல் உள்ளதால் வாகனங்கள் வளைவுகளில் செல்லும்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இடம்,: இராமையன்பாளையம் அருகே.
01 Jul 2022
ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம் துவக்க விழாவில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் (நடுவில்) பங்கேற்றார். ( இடமிருந்து) சாந்தா அறக்கட்டளை நிர்வாகி சாந்தாம்மா, சுவாமி சிவசேதுராம முருகவேல் உள்ளனர்.
30 Jun 2022
வானில் இயற்கை தீட்டிய கோலம்...சென்னையில் மாலை வானில் கோலமிட்டது போல் காட்சியளித்த மேகம்.இடம்: எழும்பூர்.
30 Jun 2022
திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்டில் மின் விளக்கு வசதி இல்லாததால் பயணிகள் வாகன வெளிச்சத்தில் பஸ் ஏறி செல்கின்றனர்.
30 Jun 2022
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிக்காக மண் பரிசோதனையில் ஈடுபட்ட ஊழியர்கள்.
30 Jun 2022
கோவை வெள்ளலூர்-சிங்காநல்லூர் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களை ஊக்குவித்து பேசிய முன்னாள் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி.
30 Jun 2022
சென்னை அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள செடிகள் அகற்றப்பட்டு கரைகள் சீரமைக்கும் பணி நடந்துவருகிறது.இடம்: நந்தம்பாக்கம்.
30 Jun 2022
சொல்வதற்கு ஒன்றுமில்லை :மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், நடந்த சிறப்பு முகாமில், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக உள்ளது.
30 Jun 2022
முகம் காட்டும் கண்ணாடி :தோகை விரித்து மெல்ல மெல்ல நடந்து வந்து தண்ணீரில் தனது அழகை கண்டு ரசிக்கிறதோ இந்த மயில். இடம்: திருநேர் அண்ணாமலையார் கோவில் குளம், திருவண்ணமாலை.
30 Jun 2022
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில், கோர்ட் உத்தரவின் படி, அனுமதி பெறாமல் செயல்பட்ட வழிபாட்டு தளத்தை சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். சீல் வைப்பதை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் இயக்கப்படாமல், பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் நடந்தே சென்றனர்.
30 Jun 2022
கலங்கரை விளக்கம் வழி காட்ட மட்டும் அல்ல கடற்கரைக்கு வருபவர்களுக்கு நிழலும் தரும் என்பதற்கு இதுவே சான்று. இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
30 Jun 2022
ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம் துவக்க விழாவில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் (நடுவில்) பங்கேற்றார். ( இடமிருந்து) சாந்தா அறக்கட்டளை நிர்வாகி சாந்தாம்மா, சுவாமி சிவசேதுராம முருகவேல் உள்ளனர்.
30 Jun 2022
ராமேஸ்வரம். அருகே பாம்பன் ரயில் தூக்கு பாலம் மீது ஓய்வெடுத்தும், நடந்து உலா வந்த மயில்கள்.
30 Jun 2022
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மொட்டை அடித்து பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.
30 Jun 2022
கார்கில் நகரில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு. வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. இடம். திருவொற்றியூர்.
30 Jun 2022
மலரின் அழகு ... :பசுமை தழுவிய அழகை கொண்ட தாமரைகள் மலர கண்ணுக்கு விருந்தளிக்கும் குளத்தினை கண்ட இடம் : கோவை நரசாம்பதி குளம்.
30 Jun 2022
பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையை மழையில் நனையாமல் பாதுகாத்து அழைத்து வரும் உறவினர். இடம்: திருப்பூர், பெருமாள் கோவில் வீதி.
30 Jun 2022
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சென்று சேறு கையில் ரம்யமாக காட்சியளிக்கிறது. இடம் : காந்த வயல் பாலம்.
30 Jun 2022
கோயம்பேடு மார்க்கெட்டில் கெட்டுப்போன , விற்பனையாகாத பழங்கள், அதிகளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.
30 Jun 2022
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மொட்டை அடித்து பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.
30 Jun 2022
திருப்பூர், வேலம்பாளையத்தில் உள்ள மசூதிக்கு சீல் வைப்பதை கண்டித்து அவிநாசி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
30 Jun 2022
திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் மட்டும் முக கவசம் அணிந்திருப்பதையும், முக கவசம் அணியாமல் கவுன்சிலர்கள் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
30 Jun 2022
பத்தாம் வகுப்பு மாணவிகளை சேர்க்காததை கண்டித்து திண்டிவனம் பிலோமினாள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்.
30 Jun 2022
பல நிறங்களில் உள்ள பொம்மைகளை விற்பதற்காக தன் பேரக்குழந்தைகளுடன் காத்திருக்கும் மூதாட்டி. இடம்:கோவை, மேட்டுப்பாளையம் ரோடு.
30 Jun 2022
சிவகங்கை-மானாமதுரை செல்லும் அரசு பஸ்சில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தவர்களை போலீசார் உள்ளே செல்லும் படி எச்சரித்தனர்.
30 Jun 2022
புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு கல்லூரியில் பேராசிரியர்கள் இரவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022
பொன் மாலை நேரத்தில் முகத்துவாரம் பகுதியில் மீனை தேடி வலையை வீசும் மீனவர். இடம் : பெசன்ட் நகர்.
30 Jun 2022
ஆரோவில் நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதை யொட்டி ஆரோவில் விசிட்டர் சென்டர் எதிர்புறத்தில் நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்டு வரும் குளத்தில், மழைக்காலத்தில் சேகரமான நீர் கோடைகாலத்திலும் வற்றாமல் இருப்பதை படத்தில் காணலாம்.
30 Jun 2022
எப்.ஐ.சி.சி.ஐ., எப்.எல்.ஓ., சார்பில் கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி.
30 Jun 2022
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக உட்கட்சி தேர்தல் பிரச்சனை காரணமாக தர்ணாவில் ஈடுபட்ட உடன் பிறப்புகள்.
29 Jun 2022
கோடை முடிந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் நான்குவழிச்சாலையில் தென்படும் கானல் நீர்.இடம்:விருதுநகர்.
29 Jun 2022
கோடை முடிந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் நான்குவழிச்சாலையில் தென்படும் கானல் நீர்.இடம்:விருதுநகர்.
29 Jun 2022
வேலுாரில் நடைபெற்று வரும் பாலாறு பெருவிழாவில் கலந்து கொண்ட கவர்னர் ரவி வேலுார் தங்கக்கோவிலை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்
29 Jun 2022
பொன் மாலை நேரத்தில் முகத்துவாரம் பகுதியில் தனது இரையை தேடி அலையும் கூழைக்கிடா...இடம் : பெசன்ட் நகர்.
29 Jun 2022
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி காம்பவுன்ட் சுவரில் ஓவியம் வரையும் கல்லூரி மாணவ மாணவிகள்.
29 Jun 2022
மாலை சூரிய ஒளியில், குளிர்ந்த காற்று வீசும் ஏரிக்கரை மேலே தொடர் பயிற்சியும், விடாமுயற்சியிலும் மனதையும், உடலையும் வலிமைப்படுத்தும் இளைஞர்களின் உடற்பயிற்சி. இடம்: அறிவியல் பூங்கா, திருவண்ணாமலை.
29 Jun 2022
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நான் முதல்வர் திட்டத்தின் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.
29 Jun 2022
திருப்பூர், தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.
29 Jun 2022
அரசு உத்தரவுகளை பின்பற்றுவது எப்போது? திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளில் ஒரு சிலர் மட்டுமே மாஸ்க் அணிந்து சென்றனர்.
29 Jun 2022
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
29 Jun 2022
திருப்பூர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட கேரம் விளையாட்டு போட்டி காலேஜ் ரோடு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
29 Jun 2022
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார், அருகில் மாவட்ட கல்வி அதிகாரி திருவளர்செல்வி, தெற்கு தொகுதி எம் எல் ஏ செல்வராஜ், மேயர், தினேஷ்குமார், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
29 Jun 2022
விழுப்புரம் பூத்தமேடு பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
29 Jun 2022
சென்னையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் தங்களது உடல் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து கொண்டனர். இடம்: அண்ணாசாலை.
29 Jun 2022
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
29 Jun 2022
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா தளமான மெரினாவில் வியாபாரிகளுக்கு வழங்கப்பட இருந்த கடைகள் மிகவும் சிறிய அளவில் இருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து வேறு வழியின்றி மயிலாப்பூர் மயான பூமியில் குப்பை போல் ஊழியர்கள் கடைகளை போட்டு வைத்துள்ளனர்.
29 Jun 2022
ஊட்டி கமர்ஷியல் சாலை கேசினோ சந்திப்பு பகுதியில் , உள்ள விதிமீறல் வணிகவளாக கட்டடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
29 Jun 2022
சென்னையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.இதில் ஏராளமான ஊழியர்கள் கண் பரிசோதனை செய்தனர்.இடம்.அண்ணாசாலை
29 Jun 2022
நிலத்தடி நீர் குறைந்து வருவதன் காரணத்தால் பட்டுப் போய் நிற்கிறதோ இந்த தென்னை மரங்கள்.இடம்: வடவள்ளி மெயின் ரோடு
29 Jun 2022
கோவை கோர்ட் வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷன் ஹாலில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
29 Jun 2022
சிங்கார சென்னை 2,0 திட்டத்தின் மிக பிரம்மாண்டமாக விளையாட்டு மைதானத்தின் வரையப்பட்டுள்ள ஓவியங்கள். இடம்:ஆசீர்வாதபுரம், மண்ணடி.
29 Jun 2022
ஆனி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயிலில் காமதேனு வாகனத்தில் அம்மன்.
29 Jun 2022
பருவமழை தொடங்கினாலும் சூரியணின் வழக்கமான உதயத்தில் காலைப்பொழுது கண்கொள்ளா காட்சி. இடம்: காரமடை