இன்றைய போட்டோ
24 May 2022
தனியார் யூடியூப் சேனலில் ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
24 May 2022
பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தன் தோழிகளுடன் மகிழ்ச்சியை பகிர்துக்கொண்ட மாணவியர். இடம்: அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
24 May 2022
ஆபத்தை நோக்கி செல்லும் இவர்களுக்கு ஆற்றின் இடையே அபாயம் என்பது உணர வேண்டும். இடம்: கோவை மாதம்பட்டி நொய்யல் ஆறு.
23 May 2022
இரு சக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என, போலீசார் நடத்திய வாகன சோதனையை ஆய்வு செய்த போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி.
23 May 2022
இரு சக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என, போலீசார் நடத்திய வாகன சோதனையை ஆய்வு செய்த போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி.
23 May 2022
தேனி அல்லிநகரம் தேவி கருமாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்த பக்தர்கள்.
23 May 2022
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
23 May 2022
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொண்டாடிய மாணவர்கள். இடம்:- திருப்பூர், கே.எஸ்.சி பள்ளி
23 May 2022
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவிகள் சக மாணவிகளுடன் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.
23 May 2022
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பேட்டரி காரை துவக்கி வைத்து ஆய்வு செய்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
23 May 2022
சென்னை, ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில், மகளிர் பஜார் எனும் பெயரில் நடந்து வரும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருட்கள்.
23 May 2022
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி.
23 May 2022
2 தேர்வு முடிவடைந்த நிலையில் அதைக் கொண்டாடிய மாணவ மாணவிகள்.இடம்: புதுவண்ணாரப்பேட்டை, சென்னை.
23 May 2022
சென்னை, அண்ணா சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். இடம்: கிண்டி.
23 May 2022
சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மெட்ரோ குடிநீர் பணியாளர்கள். இடம் : எம்.ஆர்.சி நகர், சென்னை.
23 May 2022
மூன்று வேளை பசியாறவும்., வாழ்க்கையில் வளம் பெறவும்.,, இந்த ஆண்டவன் தான் எங்களுக்கு கை கொடுக்க வேண்டும். என்கிறதோ?.,, இந்த சிறுமி. இடம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம்.
23 May 2022
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இயற்கையான காற்று வாங்க பனை விசிறி விற்கப்படுகிறது. இது ஒரு ஜோடி நூறு ரூபாயாம்.
23 May 2022
உடுமலை நகராட்சி சுகாதார துறை சார்பில் பாப்பாளி பழங்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
23 May 2022
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வழக்கத்தை விட நேற்று கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது.இடம்:கே.வி.கே.குப்பம்
23 May 2022
உடுமலை பெதப்பம்பட்டியில் பயிரிடப்பட்டுள்ள பொரியல்தட்டை செடிகளில் காய்களை பறிக்கும் தொழிலாளர்கள்.
23 May 2022
சென்னை, கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம் சுற்று சுவரில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
23 May 2022
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை நாளான நேற்று சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்.
23 May 2022
கோத்தகிரி சாலை வழியாக ஊட்டியிலிருந்து வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க சுற்றுலா பயணிகள்.
22 May 2022
கொஞ்சம் வந்த வெயிலின் சூடு தணிய குளிமை கண்ட குளத்தின் இடையே மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கும் இளைஞர்கள். இடம்: கோவை சுண்டக்காமுத்தூர்.
22 May 2022
பள்ளி விடுமுறை மற்றும் வார விடுமுறை தினமான இன்று எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம். இடம் : பெசன்ட் நகர்.
22 May 2022
மாலை நேரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்ட சோளத்தை நெருப்பில் வாட்டும் வியாபாரி.. அதனை வாங்க ஆர்வமுடன் காத்திருக்கும் சிறுமி. இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.
22 May 2022
ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியில் நடந்த பாட்டு கச்சேரியில் நடனமாடி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்கள்.
22 May 2022
கோடைகால விடுமுறையை தொடர்ந்து, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள்.
22 May 2022
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் அருகே கல்லணை கால்வாயில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள்.
22 May 2022
கோவையில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால், வீரகேரளம் அருகே அரிய வகை பறவையான கரியஅறுவால் மூக்கன் பறவை விவசாய நிலத்தில் பூச்சிகளை உண்டது.
22 May 2022
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த சர்வதேச உயிர் பன்மைய தின விழாவில் அமைக்கப்பட்டிருந்த, பல்லுயிர் மேலாண்மை தொடர்பான சிறப்பு கண்காட்சி அரங்கை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் துவக்கிவைத்து பார்வையிட்டார். உடன் அத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே மற்றும் தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்.
22 May 2022
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் மகாருத்ர ஜெப ஹோமம் நடந்தது.
22 May 2022
விடுமுறை நாளான இன்று(மே22) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
22 May 2022
கடலூர் டைகர் டேக்வாண்டா பயிற்சி பள்ளி சார்பில் கோடை கால டேக்வாண்டா தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி முகாம் நடந்தது.
22 May 2022
சென்னை விம்கோ நகர் மெட்ரோ நிலையத்திலிருந்து மின்சார ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள்.
22 May 2022
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் செய்ய மலை ஏறிய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
22 May 2022
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தோடர் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடினார்.
22 May 2022
வளவனூரில் பயணிகளுக்காக கட்டப்பட்ட பஸ் நிறுத்தும் இரும்பு கூடாரத்தை, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர்.
22 May 2022
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது.
22 May 2022
திருப்பூர், மாவட்டம் குன்னத்தூர் பொன்காளியம்மன் கோயில் பொங்கல் விழாவில் தேர் பவனி நடந்தது.
22 May 2022
புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் அர்ஜுனன் திரவுபதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
22 May 2022
சென்னை மாநகராட்சி சார்பில், அழகுபடுத்தும் விதமாக கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் செடிகள் அமைப்பதற்கான பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.
22 May 2022
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்கள் பஜனைப் பாடல்கள் பாடியவாறு வீதி வலம் வந்தனர்.
22 May 2022
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை யொட்டி, சாலையின் மைய தடுப்புகளை அழகுபடுத்தும் விதமாக பூச்செடிகள் புதிதாக நடப்பட்டுள்ளது.இடம். வாலாஜா சாலை.
22 May 2022
கோவை மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு, இந்திரா நகர், முனியப்பன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலில் 31வது ஆண்டு திருவிழாவையொட்டி நடந்த திருவிளக்குப் பூஜையில் கலந்துகொண்ட பெண்கள்.
22 May 2022
சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் புதிய வரவாக பிறந்து ஜந்து நாட்களே ஆன புள்ளி மான் குட்டி.
22 May 2022
கடலூர் அடுத்துள்ள குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் எள்ளு சாகுபடி பயிர் செய்துள்ளனர்.
22 May 2022
கோடை விடுமுறை காரணமாக சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில், படகு சவாரி செய்து மகிழும் பொதுமக்கள்.
22 May 2022
வைகாசி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் வரம்சித்தி விநாயகர், காளியம்மன் கோயிலில் தெப்ப உற்சவ அலங்காரத்தில் அம்மன்.
22 May 2022
சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையில் உள்ள செயற்கை நீரூற்று வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
21 May 2022
கோவை கொடிசியா அருகே வருகிற ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளதால் நிகழ்ச்சி டிக்கெட்டை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அரங்காவலர் மலர்விழி வெளியிட்டார். அருகில் ஸ்ரீ ஆர்ட்ஸ் சிவகுமார், அருண் இவெண்ட்ஸ் அருண், கிரீன் அண்ட் கிரீன் செந்தில் உள்ளிட்டோர். இடம் கோவை ரெசிடென்சி ஓட்டலில்
21 May 2022
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்து அலுவலர்களுக்குடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அலுவலகர்கள்.
21 May 2022
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற வீரர்கள். இடம்: பெரியமேடு.
21 May 2022
ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்த , உதகை 200 மற்றும் நலத்திட்ட வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் , ஊட்டி 200 விழா சிறப்பு மலரை வெளியிட்டார், உடன் எம்.பி.,ராஜா, செய்தி தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் , வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் ஊட்டி எம்.எல்.ஏ. கனேசன் கலந்து கொண்டனர்.
21 May 2022
கடலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் காங்.கட்சி சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.
21 May 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நடந்த குரூப் 2 தேர்வு, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடந்தது. இதில், தேர்வு எழுதிய பட்டதாரிகளின் குழந்தைகளை, அவர்களது உறவினர்கள் கல்லூரி வளாகத்தில் வைத்து காத்திருந்தனர்.
21 May 2022
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் குரூப் 2 தேர்வு எழுத வந்தவர்கள் மையத்திற்க்கு வெளியே காத்திருக்கின்றனர். இடம்; பல்லாவரம்.
21 May 2022
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், வடம் பிடித்து தேர் இழுத்த பெண் பக்தர்கள்.
21 May 2022
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஜவர்பாணியை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
21 May 2022
புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
21 May 2022
மழை விட்டு வெயில் அடித்ததால் உடுமலை கல்லாபுரத்தில் விவசாயிகள்மிஷின் மூலம் நெற்கதிர்களை அறுவடை செய்கின்றனர்.
21 May 2022
ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியில் நடந்த பாட்டு கச்சேரியில், மகிழ்ச்சியில் நடனமாடும் பூங்கா ஊழியர்கள்.
20 May 2022
சென்னையில் காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை வேளையில் குளிர்காற்று வீசப்பட்டு கரு மேகம் சூழ்ந்து மழை வருவது போல் காணப்பட்டது. இடம்: மெரினா.
20 May 2022
புதுச்சேரி காங் கட்சி சார்பில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்தும் மெழுகுவத்தி ஏந்தியும், இந்திராகாந்தி சிலையில் இருந்து ராஜிவ் சிலை வரை ஊர்வலம் சென்றனர்.
20 May 2022
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்து வரைபடங்களை பார்வையிட்டார்
20 May 2022
சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலுக்கான பெட்டியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ். அருகில் ஐ.சி.எப்., பொது மேலாளர் அகர்வால் உள்ளிட்டோர்.
20 May 2022
குரூப் 2 தேர்வு வினாத்தாள், வைக்கப்பட்டுள்ள திண்டிவனம் நேரு வீதியில் உள்ள கருவூலத்திற்கு, பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது
20 May 2022
விழுப்புரம் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது. அருகில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான். கலெக்டர் மோகன்.
20 May 2022
சென்னையில் சாலையின் மைய தடுப்புகளை அழகுபடுத்தும் விதமாக புதிதாக வைக்கப்பட்டுள்ள செடிகள்.இடம்.அரும்பாக்கம்
20 May 2022
புதுச்சேரி காவல்துறையின் பணிபுரிந்து வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களுக்கு பல்நோக்கு உதவியாளர் பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அருகில் சபாநாயகர் செல்வம் ,அமைச்சர்கள் நமச்சிவாயம் , லஷ்மி நாராயணன்.
20 May 2022
மழை விட்டு வெயில் அடித்ததால் உடுமலை கல்லாபுரத்தில் விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை டிராக்டரில் கொட்டுகின்றனர்.
20 May 2022
இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
20 May 2022
சென்னை , நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
20 May 2022
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். கண்காட்சியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.